இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள வறுமை ஒழிப்புத் திட்டங்கள் ஏதேனும் நான்கை குறிப்பிட்டு எழுதுக
வறுமை ஒழிப்புத் திட்டங்கள் (Poverty Alleviation Programme) குறைந்த நிலை வேலைவாய்ப்பின் உற்பத்தி திறனை அதிகரிப்பதும், வேலைவாய்ப்பை அளிப்பதும் வறுமை ஒழிப்பு திட்டத்தின் முக்கிய பிரச்சனையாகும். நிலச் சீர்திருத்தங்கள் மாநில அரசுகள் நிலசீர்திருத்த சட்டங்களை இயற்றுவதன் மூலமாக நிலமற்ற விவசாயிகளின் பொருளாதார நிலைமைகளை மேம்படச் செய்ய வழிவகுத்தன. (உ.ம்) ஜமின்தார் முறை ஒழிக்கப்பட்டதினால், சுரண்டல் முறைகள் சமுதாயத்தை விட்டு நீக்கப்பட்டன. பல மாநிலங்களில் குத்தகை சட்டங்கள் இயற்றப்பட்டன. இதன் மூலம் குத்தகைகாரர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டன. இச்சட்டத்தின் வாயிலாக பெறப்பட்ட […]