TNPSC MAINS CURRENT AFFAIRS

இந்தியாவில் மின்சாரம் தனியார் வசம்  மாறுவதால் ஏற்படும் சவால்கள் மற்றும் பாதிப்புகளை மதிப்பிடுக

தனியார் வசம் மின்சாரம்: தவிர்க்கப்பட வேண்டிய நடவடிக்கை 2022 ஆகஸ்ட் 8ஆம் தேதி, மின்சாரச்சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக, உடனடியாக நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு இம்மசோதா அனுப்பப்பட்டுவிட்டது.  ஆனால், அடுத்தடுத்து நடக்க உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில், ஏதேனும் ஒன்றில் இம்மசோதா சட்டமாக்கப்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை.  சரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்ப்பதுஏன்? இந்தச் சட்டத்திருத்தத்தால் நுகர்வோருக்குப் பாதிப்பு ஏற்படுமா? கால் பதிக்கும் தனியார் நிறுவனங்கள்:  மின்சார உற்பத்தியில் […]

இந்தியாவில் மின்சாரம் தனியார் வசம்  மாறுவதால் ஏற்படும் சவால்கள் மற்றும் பாதிப்புகளை மதிப்பிடுக Read More »

தேசியக் கல்விக் கொள்கை 2020 இன்படி, உயர்கல்விப் படிப்புகளில் மாணவர்கள் எந்த ஆண்டிலிருந்தும் வெளியேறிவிட்டுப் பின்னர் மீண்டும் நுழைவதற்கான (Multiple Entry and Exit System) வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது – மதிப்பீடு செய்க

தேசியக் கல்விக் கொள்கை 2020 இன்படி, உயர்கல்விப் படிப்புகளில் மாணவர்கள் எந்த ஆண்டிலிருந்தும் வெளியேறிவிட்டுப் பின்னர் மீண்டும் நுழைவதற்கான (Multiple Entry and Exit System) வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.  இந்நிலையில், இப்படியான ஏற்பாடு இந்தியச் சூழலுக்கு ஒத்துவராமல் போகலாம் என கல்விக்கான நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்திருக்கிறது. இதையடுத்து, இது தொடர்பான விவாதங்கள் எழுந்திருக்கின்றன. புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி, உயர் கல்விப் படிப்புகளில் சேரும் மாணவர்கள் அந்தப் படிப்பின் எந்த ஆண்டில் வேண்டுமானாலும் வெளியேறலாம்; வெளியேறும்

தேசியக் கல்விக் கொள்கை 2020 இன்படி, உயர்கல்விப் படிப்புகளில் மாணவர்கள் எந்த ஆண்டிலிருந்தும் வெளியேறிவிட்டுப் பின்னர் மீண்டும் நுழைவதற்கான (Multiple Entry and Exit System) வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது – மதிப்பீடு செய்க Read More »

ஒரே நாடு ஒரே தேர்தல் – அதிகாரச் சமநிலையும் கூட்டாட்சி அமைப்பும் பேணப்படுவது அவசியம் கருத்து தெரிவி

ஒரே நாடு ஒரே தேர்தல்: அதிகாரச் சமநிலை பேணப்பட வேண்டும் நாடு முழுவதும் அனைத்துத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கான சாத்தியங்களை ஆராய்வதற்கான எட்டு நபர் குழுவை மத்திய அரசு அமைத்திருப்பது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.  2024இல் மக்களவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழலில், மத்திய பாஜக அரசு இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 1967 வரை இந்திய மக்களவைக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில்தான் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டுவந்தது.  மாநில அரசுகள்

ஒரே நாடு ஒரே தேர்தல் – அதிகாரச் சமநிலையும் கூட்டாட்சி அமைப்பும் பேணப்படுவது அவசியம் கருத்து தெரிவி Read More »

இந்தியாவில் / தமிழகத்தில் உறுப்பு தானத்தை ஊக்குவிக்க அரசுக்கு உள்ள சவால்கள் என்ன? அதனை எப்படி எதிர்கொள்ளலாம்

மூளைச் சாவு அடைந்த பிறகு உடல் உறுப்புகளைத் தானம் செய்வோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடத்திவைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது பெரும் வரவேற்புக்குரிய முடிவு.  உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது தமிழ்நாடு. தமிழ்நாடு அரசு உடல் உறுப்பு தானத்துக்காகத் தனி நாளாக செப்டம்பர் 23ஐ அறிவித்து, முன்னுதாரணமாகச் செயல்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது. அரசின் புதிய அறிவிப்பு உறுப்பு தானத்தை மேலும் ஊக்குவிப்பதாக அமையும். தமிழ்நாட்டில் 6,179 பேர் மாற்று சிறுநீரகத்துக்காகவும், 449 பேர்கல்லீரலுக்காகவும்

இந்தியாவில் / தமிழகத்தில் உறுப்பு தானத்தை ஊக்குவிக்க அரசுக்கு உள்ள சவால்கள் என்ன? அதனை எப்படி எதிர்கொள்ளலாம் Read More »

இந்தியாவில் திடக் கழிவுகளைக் கையாள்வதற்கு உங்கள் தீர்வுகளை முன்வை

திடக் கழிவு மேலாண்மை: தேவை முழுமையான பாதுகாப்பு! சென்னை மாநகரில், நாளொன்றுக்கு உற்பத்தியாகும் திடக் கழிவானது தற்போதைய அளவான 6,143 டன்களிலிருந்து 2040இல் 11,973 டன்களாக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், திடக் கழிவு மேலாண்மைக்காக மூன்று புதிய திட்டங்களுக்குப் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகஸ்ட் 31 அன்று ஒப்புதல் அளித்திருப்பது நம்பிக்கையளிக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மக்கள்தொகை தொடர்ச்சியாக உயர்ந்துவரும் நிலையில், நகரில் உற்பத்தியாகும் திடக் கழிவின் அளவும் அதிகரித்துவருகிறது.  கள நிலவரம்   தேனாம்பேட்டை, கோடம்பாக்கம்,

இந்தியாவில் திடக் கழிவுகளைக் கையாள்வதற்கு உங்கள் தீர்வுகளை முன்வை Read More »

‘மக்கள்தொகை ஆதாயம்’ (demographic dividend) என்றால் என்ன? இந்தியாவுக்கு இந்த ஆதாயம் உண்மையாகவே இருக்கிறதா என்பதை மதிப்பிடுக 

இந்தியாவின் இன்றைய மாபெரும் சொத்து என்ன என்ற கேள்விக்கு உலகெங்கிலிருந்தும் வரும் பதில்களில்பெரும்பாலனவை ‘அதன் மக்கள்தொகை ஆதாயம்’ (demographic dividend) என்பதாகத்தான் இருக்கும்.  இந்த ஆதாயம் எந்த நாட்டுக்கு இருக்கிறதோ அந்த நாட்டின் உழைக்கும் மக்கள்தொகை கணிசமாக உயரும் வாய்ப்புகள் உருவாகின்றன. உழைப்பவர்களுக்கும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும் இடையே இருக்கும் வீதம் ஏறத்தாழ 60:40 என்ற நிலையை அடைகிறது.  அதாவது, உழைப்பவர்களின் எண்ணிக்கை அவர்களைச் சார்ந்திருப்பவர்களைவிட அதிகமாகிறது. இதனால் தனிமனித வருமானம் உயர்கிறது. கூடவே நாட்டின் வளமும் உயர்கிறது.

‘மக்கள்தொகை ஆதாயம்’ (demographic dividend) என்றால் என்ன? இந்தியாவுக்கு இந்த ஆதாயம் உண்மையாகவே இருக்கிறதா என்பதை மதிப்பிடுக  Read More »

இந்தியாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பின் தேவையும் அதன் நன்மைகளையும் மதிப்பிடுக 

சாதிவாரிக் கணக்கெடுப்பும் காலத்துக்கேற்ற சமூகநீதியும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என அரசியல் மட்டத்தில் குரல்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.  மக்களவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில், இத்தகைய குரல்கள் தவிர்க்க முடியாதவையாக மாறியிருக்கின்றன.  இந்தப் பின்னணியில் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் முக்கியம் என்பதைச் சமூக, அரசியல், பொருளாதாரப் பின்னணியில் புரிந்துகொள்வது அவசியம். பிரிட்டிஷார் கணக்கெடுப்பின் தாக்கம்:  சமூகத்தின் ‘ஒருமித்த வளர்ச்சி’ என்னும் இலக்கைஅடைவதற்கான தடையற்ற சூழல் வரலாற்றில் ஒருபோதும் இருந்ததில்லை. தடைகளை நீக்குவதற்கான வழிமுறைகளைப் பற்றி சமூகவியல் அறிஞர்கள் பலரும்

இந்தியாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பின் தேவையும் அதன் நன்மைகளையும் மதிப்பிடுக  Read More »

ஆசிய பாரா விளையாட்டில் சாதித்த தமிழர்கள்!

ஆசிய பாரா விளையாட்டில் சாதித்த தமிழர்கள்! சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியைத் தொடர்ந்து பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்தியா வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறது. முதல் முறையாக 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தம் 111 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்து அசத்தியிருக்கிறது. இந்தியாவிலிருந்து 196 ஆடவர், 113 மகளிர் என 309 பேர் பங்கேற்ற நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதில் தடகளத்தில்

ஆசிய பாரா விளையாட்டில் சாதித்த தமிழர்கள்! Read More »

தேர்தல் பத்திரம்: தேவை வெளிப்படைத்தன்மை – நியாயப்படுத்துக

தேர்தல் பத்திரம்: தேவை வெளிப்படைத்தன்மை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான வழிமுறையாகக் கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திரம் தொடர்பாகத் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதுதொடர்பான வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வுக்கு மாற்றியிருக்கிறது உச்ச நீதிமன்றம். தேர்தல் பத்திரம் எனும் நடைமுறை, 2017இல் நிதி மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டு, 2018இல் அமல்படுத்தப்பட்டது. இதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பவர்களின் அடையாளம் வெளிப்படுத்தப்பட வேண்டியதில்லை எனும் நிலை உருவானது.  எஸ்பிஐ வங்கி (State Bank of India) மூலம்

தேர்தல் பத்திரம்: தேவை வெளிப்படைத்தன்மை – நியாயப்படுத்துக Read More »

அரசியலமைப்பின்படி ஆளுநரின் அதிகாரம் பற்றி விவரித்து இந்திய கூட்டாட்சிக்கு ஆளுநரின் முக்கியத்துவத்தை விவாதிக்க 

தொடரக்கூடாது முதல்வர் – ஆளுநர் முரண்பாடு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் இன்றைக்கு முக்கியச் செய்தியாகிவிட்டன. மக்கள் நலனை மனதில் வைத்து இரு தரப்பும் இதைக் கைவிட்டால்தான், மாநில அரசுடன் ஆளுநரும் சுமுகமாக இருக்க முடியும். முதல்வர் – ஆளுநர் ஒருமித்த கருத்து மட்டுமே மாநில வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.  ஆனால், கடந்த பல ஆண்டுகளாக இல்லாத மோதல் போக்கு சமீபகாலமாக அதிகரித்துவருவதை நாம் பார்க்கிறோம். குறிப்பாக, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மாநில அரசு

அரசியலமைப்பின்படி ஆளுநரின் அதிகாரம் பற்றி விவரித்து இந்திய கூட்டாட்சிக்கு ஆளுநரின் முக்கியத்துவத்தை விவாதிக்க  Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)