இந்தியாவில் இஸ்லாமிய சீர்திருத்தங்கள்
இஸ்லாமிய சீர்திருத்தங்கள் சர் சையத் அகமத்கான் & அலிகார் இயக்கம் (1875) சர் சையத் அகமத்கான் (1817-1898). டெல்லியில் உயர்குடி முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த சையத் அகமத்கான் படிப்பறிவின்மையே குறிப்பாக, நவீன கல்வியறிவின்மையே இஸ்லாமியர்களுக்குப் பெருந்தீங்கு விளைவித்து அவர்களைக் கீழ்நிலையில் வைத்துவிட்டது எனக்கருதினார். மேலைநாட்டு அறிவியலையும், அரசுப்பணிகளையும் ஏற்றுக் கொள்ளும்படி அவர் இஸ்லாமியர்களை வற்புறுத்தினார். மேலெழுந்துவரும் தேசிய இயக்கத்தில் இணைவதைக் காட்டிலும் ஆங்கில அரசுடன் நல்லுறவு மேற்கொண்டால் இஸ்லாமியர் நலன்கள் பேணப்படும் என அவர் நம்பினார். எனவே […]