1975-77 ல் தேசிய அவசரநிலை ஏன் கொண்டுவரப்பட்டது? அதன் தாக்கங்களை விவரி. / Why 1975 – 1977 National Emergency Imposed? Explain the Impacts.
தேசிய அவசரநிலைப் பிரகடனம் 1975: குடியரசுத்தலைவர் (ஃபக்ருதீன் அலி அஹ்மத்) 1975 ஜூன் 26 அன்று அவசரநிலை பிரகடனத்தை அறிவித்தார். இது மூன்றாவது முறை கொண்டுவரப்பட்ட தேசிய அவசரநிலை பிரகடனம் ஆகும். அப்போது திருமதி இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்தார் அவசரநிலையின்போது, எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர், தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன, அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஒடுக்கப்பட்டன, பத்திரிக்கைகள் தணிக்கை செய்யப்பட்டன. சில சட்டங்கள் அரசாங்கத்திற்கு ஏற்றவாறு மீண்டும் மாற்றப்பட்டன. இது இந்தியாவின் அரசியல் சூழ்நிலையை மாற்றியது. […]