சிறப்பு பொருளாதார மண்டலங்களின் நோக்கங்களையும் பண்புகளையும் விளக்குக./ Explain the objectives and characteristics of SEZs.
சிறப்புப் பொருளதார மண்டலங்கள் (Special Economic Zones) அனுமதி வழங்குவதில் பெருகியிருந்த கட்டுப்பாடுகள், உள்கட்டமைப்பு வசதியின்மை, குறைவான நிதி போன்ற குறைபாடுகளைச் சமாளிக்கவும், நேரடி முதலீட்டை ஈர்க்கவும் 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறப்பு பொருளாதார மண்டலக் கொள்கை உருவாக்கபட்டது. பொருளாதாரச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக வணிக மற்றும் தொழில் காரணங்களுக்காக அரசாங்க நிலங்களை கையப்படுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. 2005 ம் ஆண்டின் சிறப்புப் பொருளாதார மண்டலக் சட்டத்தின்படி 400 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அறிவிக்கப்பட்டன. […]