State government organisation

தமிழ்நாட்டில், அமைச்சரவையின் பணிகள் பற்றி விளக்குக.

தமிழ்நாட்டில், அமைச்சரவையின் பணிகளும் அதிகாரங்களும்: மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு, மக்களின் பாதுகாப்பு மற்றும் மக்களின் சொத்துப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பராமரித்தல். மாநிலத்தின் கொள்கைகளை உருவாக்குவது, தீர்மானிப்பது மற்றும் அவைகளை சிறப்பாக அமுல்படுத்துவது. சட்டசபையின் சட்டமியற்றும் திட்டங்களை அது தீர்மானித்தல் மற்றும் அனைத்து முக்கிய மசோதாக்களையும் அறிமுகப்படுத்துதல். நிதிக்கொள்கையை முடிவு செய்தல் மற்றும் மாநிலத்தின் பொது நலத்திற்கான வரியமைப்பை வடிவமைத்தல். சமூகப் பொருளாதார மாற்றங்களுக்கான திட்டங்களை தீட்டுதல், பல்வேறு துறைகளில் மாநிலத்தைத் தலையெடுக்கச் செய்வது. துறைத்தலைவர்களின் முக்கியமான […]

தமிழ்நாட்டில், அமைச்சரவையின் பணிகள் பற்றி விளக்குக. Read More »

ஆளுநரின் அதிகாரங்களையும் பணிகளையும் விவாதிக்க

ஆளுநரின் அதிகாரங்களும், பணிகளும் ஆளுநர் மாநில செயல்துறையின் தலைவராகத் திகழ்கிறார். மற்றும் அதிகமான அதிகாரங்களையும் அவர் பெற்றுள்ளார். விதி 163-க்கிணங்க, ஆளுநர் தனது பணிகளையும் அதிகாரங்களையும் செயல்படுத்துகின்றபோது, சில குறிப்பட்ட விதிவிலக்குகளைத்தவிர, முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையால் வழிநடத்தப்படுகிறார். மாநில அளவிலான செயல்துறைத் தலைவராக ஆளுநர் பின்வருகின்ற பணிகளையும் அதிகாரங்களையும் பெற்றுள்ளார். செயல்துறை அதிகாரங்கள் சட்டத்துறை அதிகாரங்கள் நிதி அதிகாரங்கள் நீதித்துறை அதிகாரங்கள் தன்விருப்ப அதிகாரங்கள், மற்றும் இதர அதிகாரங்கள். செயல்துறை அதிகாரங்கள்.

ஆளுநரின் அதிகாரங்களையும் பணிகளையும் விவாதிக்க Read More »

முதலமைச்சரின் பங்கு மற்றும் பணிகளையும் விளக்குக

முதலமைச்சர் இந்திய அரசியலமைப்புக்கிணங்க, மாநிலச் செயல்துறையில் பெயரளவுத் தலைவராக ஆளுநரும் உண்மையான தலைவராக முதலமைச்சரும் உள்ளனர். மாநில அளவில் முதலமைச்சரின் நிலை மத்தியில் பிரதம மந்திரியின் நிலையைப் போன்றது. விதி 163-ன் படி, தன்விருப்ப அதிகாரங்களைத் தவிர, மற்ற அதிகாரங்களையும் பணிகளையும் ஆளுநர் செயல்படுத்துவதில் உதவியும் ஆலோசனையும் கூறுவதற்கு, முதலமைச்சரைத் தலைவராகப் பெற்றுள்ள ஒரு அமைச்சரவையை ஒவ்வொரு மாநிலமும் பெற்றிருக்கும். முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். நடைமுறையில், மாநில சட்டசபைக்கான பொதுத் தேர்தல்கள் நடந்து முடிந்தவுடன் மாநிலத்தில் அமைச்சகம்

முதலமைச்சரின் பங்கு மற்றும் பணிகளையும் விளக்குக Read More »

மாநில உயர்நீதிமன்றத்தின் அதிகாரம் மற்றும் பணிகள் பற்றி சிறு குறிப்பு வரைக.

மாநிலத்தின் உயர் நீதிமன்றம் மாநிலத்தில் உயரிய நீதி அமைப்பாக உயர்நீதிமன்றம் விளங்குகிறது.  அரசியலமைப்பின் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உயர் நீதிமன்றம் இருக்கும்.  எனினும் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கு பொதுவான ஒரு உயர் நீதிமன்றமும் இருக்கலாம்.  மாநில உயர் நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதியையும், குடியரசுத் தலைவர் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது நியமனம் செய்யும் இதர நீதிபதிகளையும் கொண்டிருக்கும்.  உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நிலையாகவும் ஒரே மாதிரியாகவுமா இருப்பதில்லை.  குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற

மாநில உயர்நீதிமன்றத்தின் அதிகாரம் மற்றும் பணிகள் பற்றி சிறு குறிப்பு வரைக. Read More »

மாநில அரசில் ஆளுநரின் அதிகாரம் மற்றும் பணிகளை சுருக்கி எழுதுக 

ஆளுநர் மாநில அரசின் தலைவராக மாநில ஆளுநர் இருப்பார் என இந்திய அரசியலமைப்பு சட்டம் குறிப்பிடுகிறது.  இந்திய குடியரசுத் தலைவரால் ஆளுநர் நியமிக்கப்படுகிறார். இவர் மாநில நிர்வாகத்தின் தலைவராக இருக்கிறார்.  பதவிக் காலம் மற்றும் நீக்கம் அவரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். எனினும் பதவிக்காலம் முடியும் முன்பாகவே அவரை அப்பதவியில் இருந்து குடியரசுத் தலைவர் நீக்கலாம், அல்லது தானாகவே தனது பதவியை ஆளுநர் ராஜினாமா செய்யலாம்.  ஆளுநரின் பதவிக் காலம் நீட்டிக்கப்படலாம் அல்லது வேறு

மாநில அரசில் ஆளுநரின் அதிகாரம் மற்றும் பணிகளை சுருக்கி எழுதுக  Read More »

மாநில அரசாங்கத்தின் செயல்பாடுகள் பற்றி சிறுகுறிப்பு வரைக   

மாநில அரசாங்கத்தின் செயல்பாடுகள் சட்டமன்ற செயல்பாடுகள்: சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் அதன் கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் வேண்டும்.  சட்டமன்றம் ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று முறை கூடும். மாநிலத்திற்கான சட்டங்களை இயற்றுவது சட்டமன்றத்தில் முக்கிய பணியாகும்.  சட்டமன்றம் மாநில பட்டியல் மற்றும் மத்தியப் பட்டியலில் உள்ள துறைகள் தொடர்பாக சட்டத்தை இயற்றலாம்.  எனினும் நெருக்கடி நிலை நடைமுறையில் உள்ள போது சட்டமன்றம் தனது சட்டமியற்றும் அதிகாரத்தை பயன்படுத்த இயலாது. மாநில சட்டமன்றம்

மாநில அரசாங்கத்தின் செயல்பாடுகள் பற்றி சிறுகுறிப்பு வரைக    Read More »

மாநில நிதி ஆணையத்தின் பணிகள் மற்றும் அதன் பங்கு பற்றி விவாதிக்க

மாநில நிதி ஆணையம் மாநில நிதி ஆணையம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, நகராட்சிகளின் நிதி நிலையை ஆராயும் பொருட்டும், தேவையான பரிந்துரைகளை வழங்கும் பொருட்டும், ஆளுநரால் அமைக்கப்படுகிறது. மாநில நிதி ஆணையத்தின் பணிகள்  மாநில அரசால் விதிக்கப்படும் வரிவருவாயை, மாநில அரசிற்கும், நகராட்சிகளுக்கும் இடையே பகிர்ந்து அளித்தல். நகராட்சிகளுக்கென ஒதுக்கப்படும் வரிகள், வருவாய் தொகையை நிர்ணயித்தல். தொகுப்பு நிதியிலிருந்து நகராட்சிகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகை மாநிலத்தில் இவற்றை நிர்ணயித்தலில் மாநில நிதி ஆணையம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மாநில நிதி ஆணையத்தின் பணிகள் மற்றும் அதன் பங்கு பற்றி விவாதிக்க Read More »

தமிழக சட்ட மன்றத்தின் அமைப்பு மற்றும் அதன் தேர்தல் முறைகள் குறித்து விவரித்து எழுதுக.

மாநில சட்டமன்றம் இந்தியாவில் மாநில சட்டமன்றம் என்பது ஆளுநரையும் ஒன்று அல்லது இரண்டு அவைகளையும் கொண்டிருக்கும்.  மேலவை என்பது சட்ட மன்ற மேலவை எனவும் கீழவை என்பது சட்டமன்றப் பேரவை எனவும் அழைக்கப்படுகிறது. சட்டமன்ற மேலவை ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவையானது 40 உறுப்பினர்களுக்கு குறையாமலும், அம்மநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது.  தேர்தல் முறை இதன் உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மூன்றில் ஒரு

தமிழக சட்ட மன்றத்தின் அமைப்பு மற்றும் அதன் தேர்தல் முறைகள் குறித்து விவரித்து எழுதுக. Read More »

முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி விவரித்து எழுதுக

முதலமைச்சர் மாநிலத்தில் உண்மையான நிர்வாக அதிகாரங்களைச் செயல்படுத்துவது முதலமைச்சர் மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவையாகும். ஆளுநரின் பெயரால் நிர்வாகத்தை முதலமைச்சர் மேற்கொள்கிறார். மைய அரசில் பிரதமரில் நிலை போன்றே மாநில நிருவாகத்தில் முதலமைச்சர் நிலை காணப்படுகிறது. முதலமைச்சர் அமைச்சரவையின் தலைவர் ஆவார்.  பதவி காலம் முதலமைச்சரின் பதவி காலம் நிலையான ஒன்று அல்ல. அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையான பலம் உள்ளவரை முதலமைச்சர் பதவியில் நீடிக்கலாம்.  சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை இழக்கும் போது அவர் பதவி விலகுதல் வேண்டும். 

முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி விவரித்து எழுதுக Read More »

தமிழகத்தில் நகராட்சிகள் பற்றி எழுதி அதன் அதிகாரங்கள் மற்றும் பணிகளை பற்றி குறிப்பிடுக

நகராட்சிகள் நகர உள்ளாட்சி அமைப்புகளில் அடுத்து வருவது நகராட்சிகளாகும். ‘நகராட்சி’ எனும் சொல், சுயாட்சியுள்ள நகரத்தை குறிப்பிடுகிறது.  மாநிலத்திற்கு மாநிலம் நகராட்சிகளின் எண்ணிக்கை வேறுபடுகின்றது.  நமது நாட்டில் 1500க்கும் அதிகமான நகராட்சிகள் உள்ளன.  மாநில அரசுகள் இயற்றும் நகராட்சிச் சட்டங்களால் நகராட்சிகள் நிர்வகிக்கப்படுகின்றன.  எந்த ஒரு சிறிய ஊரக அல்லது நகர்ப்புற பகுதியினையும் நகராட்சியென அறிவிக்கும் உரிமையை மாநில அரசு பெற்றுள்ளது.  ஒரு நகராட்சியை அமைப்பதற்குக் குறைந்த பட்சமாக மக்கட்தொகை 5000 த்திலிருந்து 50,000 க்கு இடைப்பட்டதாக

தமிழகத்தில் நகராட்சிகள் பற்றி எழுதி அதன் அதிகாரங்கள் மற்றும் பணிகளை பற்றி குறிப்பிடுக Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)