ஆளுநரின் அரசியலமைப்பு நிலையை பற்றி எழுதுக
அரசியலமைப்பு நிலை இந்திய அரசியலமைப்பு மத்தியிலும், மாநிலங்களிலும் பாராளுமன்ற அரசாங்க முறையை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக, ஒரு பெயரளவு நிர்வாகியாக மட்டுமே ஆளுநர் ஆக்கப்பட்டிருக்கிறார் மற்றும் முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவை உண்மையான செயல்துறையாக அமைகிறது. ஆகவே, முதலமைச்சரைத் தலைவராகப் பெற்றுள்ள அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையுடன், ஆளுநர் தனது அதிகாரங்களையும், பணிகளையும் செயல்படுத்தக் கடமைப்பட்டவர். உண்மையில், இந்தியக் கூட்டாட்சி முறையில் மாநிலத்தின் அரசியலமைப்புத்தலைவர், மத்திய அரசின் பிரதிநிதி ஆகிய இரட்டைத்தன்மையான பங்கினை ஆளுநர் பதவிக்கு அரசியலமைப்பு […]