ஐரோப்பியர்கள் வருகை – பிரெஞ்சுக்காரர்கள்
பிரெஞ்சுக்காரர்கள் 1664-ல் அமைச்சர் கால்பெர்ட்டின் அறிவுரையின்படி அரசர் பதினான்காம் லூயி பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி தொடங்கினார். 1668-ல் முதல் வணிக மையத்தினை பெர்பெர் என்பவர் ஔரங்கசீப்பிடம் அனுமதி வாங்கி சூரத்தில் நிறுவினார். தென்இந்தியாவில் தங்களது முதல் வணிக மையத்தை கோல்கொண்டா சுல்தானின் அனுமதியைப் பெற்று மசூலிப்பட்டினத்தில் 1669-ல் நிறுவினர். 1672-ல் மைலாப்பூரிலிருந்து டச்சுக்காரர்களை வெளியேற்றினர். பீஜப்பூரின் ஷேர்கான் லோடியிடம் அனுமதி பெற்று 1673-ல் நவீன பாண்டிச்சேரிக்கான அடித்தளத்தை பிரான்சிஸ் மார்டின் நிறுவினார். பாண்டிச்சேரியின் முதல் பிரெஞ்சு கவர்னராக […]