கி.பி.1453 இல் துருக்கியர்களால் கான்ஸ்டாண்டி நோபிள் என்ற பகுதி கைப்பற்றப்பட்ட பிறகு இந்தியாவிற்கும். ஐரோப்பாவிற்குமிடையிலான நிலவழி மூடப்பட்டது.
எனவே புதிய வழியை உடனடியாக கண்டடைய வேண்டிய தேவை உருவானது
அனைத்து ஐரோப்பிய அரசுகளும் புதிய வழியை கண்டுபிடிக்க மாலுமிகளை ஊக்குவித்தது.
போர்த்துக்கீசியர்களின் வருகை
பொதுவாக “மாலுமி ஹென்றி” என அறியப்பட்ட போர்ச்சுக்கீசிய இளவரசர் ஹென்றி உலகின் அறியப்படாத பகுதிகளை ஆராய நாட்டு மக்களை ஊக்குவித்தார்.
1487-ஆம் ஆண்டு பார்த்தலோமியோ டயஸ் தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்தார். மன்னர் இரண்டாம் ஜான் அவரை ஆதரித்தார்.
ஆனால் மோசமான வானிலை காரணமாக அவர் இந்தியாவை அடையவில்லை. அப்பகுதிக்கு புயல் முனை எனப்பெயரிட்டார். பின்பு அது நன்னம்பிக்கை முனை என பெயர் மாற்றப்பட்டது.
வாஸ்கோடகாமா
வாஸ்கோடகாமா 1498-இல் கள்ளிக்கோட்டையை அடைந்தார். அவரை மன்னர் சாமரின் வரவேற்றார்.
இரண்டாவது போர்ச்சுகீசிய மாலுமி பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல் 1500-ஆம் ஆண்டு கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார். சாமரின் அரசருக்கும் கேப்ரலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
வாஸ்கோடகாமா 1501-ல் இருபது கப்பல்களுடன் இரண்டாவது முறையாக இந்தியா வந்தடைந்தபொழுது கண்ணனூரில் ஒரு வர்த்தக மையத்தை நிறுவினார். பின்னர் கள்ளிக்கோட்டை, கொச்சின் பகுதிகளிலும் வர்த்தக மையத்தை நிறுவினார்.
கொச்சின் போர்ச்சுக்கீசிய கிழக்கிந்திய கம்பெனியின் முதல் தலைநகரமாயிற்று. 1524-ல் வாஸ்கோடகாமா மூன்றாவது முறையாக இந்தியா வந்த பொழுது நோய்வாய்ப்பட்டு டிசம்பர் 1524 இல் கொச்சியில் காலமானார்.
பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
இந்திய போர்ச்சுகீசிய பகுதிகளின் முதல் ஆளுநர்.
இவரின் கொள்கை “நீல நீர் கொள்கை” என அறியப்படுகிறது. இந்திய பெருங்கடலில் மேலாண்மை செலுத்துபவர்களே ஆசிய, ஐரோப்பிய வர்த்தகத்தை கட்டுப்படுத்த முடியும் என்பதே இக்கொள்கை ஆகும்.
சாமரின் மற்றும் எகிப்திய சுல்தானின் கடற்படையை தோற்கடித்தார்.
கண்ணூர் மற்றும் கொச்சினில் கோட்டை கட்டினார்.
சாவலுக்கு அருகில் நடைபெற்ற கடற்படை போரில் இஸ்லாமிய கூட்டுப்படையால் அல்மெய்டாவின் மகன் கொல்லப்பட்டார்.
டையூ அருகில் நடைபெற்ற போரில் அல்மெய்டா இஸ்லாமிய கூட்டு படையை தோற்கடித்தார்.
கி.பி.1509-ல் போர்ச்சுக்கீசியர் ஆசியாவில் கடற்படை மேலாண்மையைக் கோரினர்.
அல்போன்சோ டி அல்புகர்க்
இந்தியாவில் போர்ச்சுகீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவியவர்
நவம்பர் 1510-ல் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவை கைப்பற்றினார்.
1515-ல் பாரசீக வளைகுடாவில் உள்ள ஆர்மஸ் துறைமுகப் பகுதியில் போர்ச்சுகீசிய அதிகாரத்தை விரிவுப்படுத்தினார்.
இந்தியப் பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தார்.
விஜயநகரப் பேரரசுடன் நட்புறவை மேற்கொண்டார்.
சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை நிறுத்த முயன்றார்.
மலேசியாவின் மலாக்காவை கைப்பற்றினார்.
நினோ-டி-குன்ஹா
இவர் தலைநகரை கொச்சினில் இருந்து கோவாவிற்கு மாற்றினார்.