நிதி அதிகாரப் பகிர்வு
- கூட்டாட்சி ஆட்சிமுறையின் வெற்றிக்கு நிதி அதிகாரப் பகிர்வு மிகவும் முக்கியமானதாகும்.
- இந்திய அரசமைப்பு மத்திய மாநில அரசாங்கங்கள் இடையே நிதி அதிகாரப் பகிர்வை விரிவாக வழங்குகின்றது.
- இப்ப ஹீரோவானது இந்திய அரசாங்க சட்டம் 1935-யை பெரிய அளவில் பிரதிபலிக்கிறது.
- இரண்டு வகையான வருமானங்கள் நிதிப் பகிர்வில் காணப்படுகின்றன.
- வரி வருமான பகிர்வு
- இதர வருமானம் பகிர்வு
வரி வருமான பகிர்வு
- மத்திய மாநில நிதிப் பகிர்வில் வரி வருமான பகிர்வு ஐந்து வகைகளை தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- சுங்கவரி போன்றவைகள் முற்றிலும் மத்திய அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
- விற்பனை வரி போன்ற வரிகள் முற்றிலும் மாநில அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
- சில வரிகளை மத்திய அரசாங்கம் விதிக்கின்றது. மாநில அரசாங்கங்கள் அவ்வரிகளை வசூலித்து பயன்படுத்திக்கொள்கின்றன (எடுத்துக்காட்டு) முத்திரை வரி, கலால் வரி எனக்கூறலாம்.
- சில வரிகளை மத்திய அரசாங்கம் விதித்து வசூலிக்கிறது. ஆனால் அந்த வருமானம் மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக செய்தித்தாள்களில் வரும் விளம்பரங்கள் மீதான வரி.
- சில வரிகள் மத்திய அரசால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்ட மாநிலங்களிடையே பகிர்ந்து அளிக்கப் படுகின்றன. எடுத்துக்காட்டாக விவசாய வருமானம் தவிர்த்த பிற வருமானங்கள் மீதான வரி.
இதர வருமான பகிர்வு
- வரி தவிர இதர வருமானம் வழிகளில் மத்திய மாநிலங்களுக்கு அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ளன.
- மத்திய அரசாங்கம் தனக்கான வணிக மற்றும் தொழில் நிறுவனங்களை நடத்தி வருமானத்தை ஈட்டலாம்.
- எடுத்துக்காட்டாக தொழில் நீதி நிறுவனம். ரயில்வே துறை, ஒளிபரப்பு, அஞ்சல்துறை
- மாநில அரசாங்கங்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வணிக ,தொழில் நிறுவனங்கள் மூலமாக வருமானத்தை ஈட்டிக் கொள்ளலாம்.
- .மின்சாரம், நீர்ப்பாசனம் ,வனங்கள், தரைவழிப் போக்குவரத்து போன்ற துறைகளில் மாநில அரசாங்கங்கள் வருமானத்தை ஈட்டலாம்.