தமிழக அரசின் அறிவிப்பின்படி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறந்த பின்பு குரூப்-1 தேர்வு நடைபெறும். டிஎன்பிஎஸ்சி சார்பிலும் ஊரடங்கு முடிவடைந்த பின்னர் தேவையான கால அவகாசம் கொடுத்து தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.
இதன் காரணமாக குரூப்-1 தேர்வு நடப்பதற்கு ஆகஸ்ட் மாதத்திலிருந்து கணக்கிட்டால் குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் எடுத்துக் கொள்ளும்.
என்ன மாதிரி தயாரிப்புகளில் தற்போது ஈடுபடலாம்?
முதன்மைத் தேர்வுக்கு தேவையான குறிப்புகளை விடைகளை எழுதுவதற்கு தகுந்தார்போல் வடிவமைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தமிழக அரசு திட்டங்கள், மத்திய அரசின் திட்டங்கள், பொருளாதாரம் சார்ந்த கேள்வி பதில்கள் போன்றவற்றிற்கு விடை அளிக்கும் வகையில் தயாரான குறிப்புகள் வைத்துக்கொள்வது மிகவும் பயன்படும்.
முடிந்தவரை முதன்மை தேர்வுக்கு பயிற்சி செய்பவர்கள் முந்தைய ஆண்டு கேள்வித் தாள்களை எடுத்து வைத்துக்கொண்டு அதற்கு தேவையான பதில்களை சுயமாக ஒரு முறை எழுதிப் பார்த்தும் பின்னர் உங்களிடம் உள்ள புத்தகத்திலிருந்து அதற்கான விடை களுக்கான key point தயார் செய்து வைத்துக்கொண்டால் விடைகளுக்கான உத்தேச உங்களுக்கு கிடைத்துவிடும்.
முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள் மற்றும் அதற்கான உத்தேச விடைகள் தயாரித்த பின்னர் இன்னும் அதிகமான கேள்வி பதில்கள் தயார் செய்ய வேண்டுமெனில் நமது தளத்தில் மாதிரி கேள்விகள் அவ்வப்போது வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றது.
அதற்கான விடைகளை டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வில் கொடுக்கும் விடைத்தாளின் அவர்கள் நமது தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு தேவையான அளவு விடைகளை சுருக்கமாகவும், தெளிவாகவும் தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.