சட்டசபை
- தமிழ்நாடு சட்டத்துறை சட்டசபை என்ற ஒரே ஒரு அவையை மட்டுமே பெற்றுள்ளது.
அமைப்பு
- அரசியலமைப்பின் விதி 170-க்கிணங்க, ஒரு மாநில சட்டசபை 500-க்கு மிகாமலும் 50-க்கு குறையாமலும் உறுப்பினர்களைப் பெற்றிருக்கும்.
- எனினும், அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலமாக ஒரு சட்டசபையின் குறைந்தபட்ச பலத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை பாராளுமன்றம் பெற்றுள்ளது.
- தமிழ்நாட்டு சட்டசபை 235 உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறது.
- இதில் 234 உறுப்பினர்களை வயது வந்தோர் வாக்குரிமை அடிப்படையில் தேர்தல் தொகுதிகளிலிருந்து மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
- மற்றுமுள்ள ஒரு உறுப்பினர் ஆங்கிலோ-இந்திய இனத்திலிருந்து ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்.
- இருப்பினும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர்களுக்காக அவையில் இடங்கள் ஒதுக்கப்படும்.
தகுதிகள்
சட்டசபை உறுப்பினர் பதவிக்காக போட்டியிடும் ஒரு நபர் பின்வருகின்ற தகுதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
- அவர் ஒரு இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
- அவர் 25 வயது அடைந்திருக்க வேண்டும். மற்றும்
- பாராளுமன்றச் சட்டத்தால் வரையறை செய்யப்பட்ட மற்ற தகுதிகளையும் அவர் பெற்றிருக்க வேண்டும்.