தமிழகத்தில் நகராட்சிகள் பற்றி எழுதி அதன் அதிகாரங்கள் மற்றும் பணிகளை பற்றி குறிப்பிடுக

நகராட்சிகள்

  • நகர உள்ளாட்சி அமைப்புகளில் அடுத்து வருவது நகராட்சிகளாகும். ‘நகராட்சி’ எனும் சொல், சுயாட்சியுள்ள நகரத்தை குறிப்பிடுகிறது. 
  • மாநிலத்திற்கு மாநிலம் நகராட்சிகளின் எண்ணிக்கை வேறுபடுகின்றது. 
  • நமது நாட்டில் 1500க்கும் அதிகமான நகராட்சிகள் உள்ளன. 
  • மாநில அரசுகள் இயற்றும் நகராட்சிச் சட்டங்களால் நகராட்சிகள் நிர்வகிக்கப்படுகின்றன. 
  • எந்த ஒரு சிறிய ஊரக அல்லது நகர்ப்புற பகுதியினையும் நகராட்சியென அறிவிக்கும் உரிமையை மாநில அரசு பெற்றுள்ளது. 
  • ஒரு நகராட்சியை அமைப்பதற்குக் குறைந்த பட்சமாக மக்கட்தொகை 5000 த்திலிருந்து 50,000 க்கு இடைப்பட்டதாக இருத்தல் வேண்டும்.

பணிகள்

  • நகராட்சிகளின் பணிகள் ஏறத்தாழ மாநகராட்சிப் பணிகளுக்கு இணையாக உள்ளன. 
  • அவை அரசியலமைப்பின் பன்னிரண்டாவது இணைப்புப்பட்டியலின் அமைப்புக் கூட்டின் கீழ் வருகின்றன. 
  • எனினும், நகராட்சிப் பணிகளைக் கட்டாயப் பணிகள், தன் விருப்பப் பணிகள் எனவும் வகைப்படுத்தலாம்.

கட்டாயமான பணிகள்.

  • தூய்மையான குடிநீர் விநியோகம் செய்தல்.
  • பொதுச் சாலைகள் அமைத்துப் பராமரித்தல்.
  • தெருக்களில் விளக்கு மற்றும் குடிநீர் வசதிகளைச் செய்தல்.
  • தெருக்களை சுத்தம் செய்து கழிவுப் பொருட்களை அகற்றுதல்.
  • அபாயமிக்க வர்த்தகங்களையும் செயல்களையும் ஒழுங்கு முறைப்படுத்தல்.
  • மருத்துவமனைகளையும் பள்ளிக்கூடங்களையும் பராமரித்தல்.
  • பிறப்பு, இறப்புகளைப் பதிவு செய்தல்.
  • பொதுச் சாலைகள், பாலங்கள் மற்றும் ஏனைய பொது இடங்களில் தோன்றும் தடைகளையும், நீட்டிக் கொண்டிருப்பவைகளையும் அகற்றுதல்.
  • சாலைகளுக்குப் பெயரிட்டு, இல்லங்களுக்கு எண் வழங்குதல்.
  • பொதுச் சுகாதாரம், துப்புரவு, ஆபத்தான வியாதிகளைத் தடை செய்தல் மற்றும் பல்வேறு வகையிலான இறப்பினங்களை அடக்கம் செய்வதற்குரிய இடங்களை ஒழுங்குமுறைப் படுத்தல் போன்றவை சம்பந்தமான அனைத்துக் காரியங்களையும் செய்தல்.
  • தீயணைப்புப் படைகளுக்கான ஏற்பாடு செய்தல்.

விருப்பப் பணிகள்.

  • நகரப் பகுதிகளை வகுத்து அமைத்தல்.
  • பெண்டிர் காப்பு இல்லங்கள், அனாதை இல்லங்கள், தொழுநோயாளிகளின் இல்லங்கள், ஓய்விடங்கள், நூலகங்கள், பொது பூங்காக்கள், தோட்டங்கள் முதலானவற்றை நிறுவி பராமரித்தல்.
  • சாலையோரங்களில் மரங்களை நடுதல்.
  • நில அளவைகளை மேற்கொள்ளுதல்.
  • நலிவுற்ற பிரிவினருக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தல்.
  • நகராட்சிப் பணியாளரின் பொது நலத்தைப் பேணிக்காத்தல்.
  • நகராட்சிப் பகுதிக்குள் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி மக்களுக்கு கலாச்சாரம் மற்றும்பிற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல். 

வருவாய் ஆதாரங்கள்

  • சொத்து வரி.
  • தொழில் வரி.
  • பொருள்கள் மீதான வரிகள் – சுங்க வரிகள்.
  • கால்நடை மற்றும் வாகன வரி.
  • கேளிக்கை வரி.
  • குடிநீர் மற்றும் விளக்கு வரி.
  • அரசாங்கம் வழங்கும் மானியங்களும் கடன்களும்.
  • பொது நிர்வாகம், மருத்துவம் மற்றும் பொதுச் சுகாதாராம், கல்வி, பொது மராமத்துப் பணிகள், நீர் விநியோகம், விளக்குகள் அமைத்தல் மற்றும் பிற வசதிகளை செய்து கொடுத்தல் யாவும் நகராட்சியின் செலவு இனங்கள் ஆகும்.
  • நகராட்சிகள் தமது வருவாயைச் செலுத்தி செலவிற்கென பணத்தைப் பெற்றுக் கொள்ள நகராட்சி நிதிகளைக் கொண்டுள்ளன.

 

2 thoughts on “தமிழகத்தில் நகராட்சிகள் பற்றி எழுதி அதன் அதிகாரங்கள் மற்றும் பணிகளை பற்றி குறிப்பிடுக”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!