மகரந்தச்சேர்க்கை
- பூவின் மகரந்தப் பையிலிருந்து மகரந்தத்தூள், சூலக முடியைச் சென்று அடைவது மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
மகரந்தச்சேர்க்கையின் பயன்கள்
- மகரந்தச்சேர்க்கையைத் தொடர்ந்து கருவுறுதல் நடைபெற்று கனியும் விதையும் உருவாகின்றன.
- அயல் மகரந்தச்சேர்க்கையின் காரணமாக இருவேறுபட்ட ஜீன்கள் இணைவதால் புதிய வகைத் தாவரம் உருவாகிறது.
மகரந்தச்சேர்க்கையின் வகைகள்
- தன் மகரந்தச்சேர்க்கை
- அயல் மகரந்தச்சேர்க்கை
தன் மகரந்தச்சேர்க்கை (ஆட்டோகேமி)
- ஒரு மலரிலுள்ள மகரந்தத்தூள் அதே மலரில் உள்ள சூலக முடியை அல்லது அதே தாவரத்தில் உள்ள வேறொரு மலரின் சூலக முடியைச் சென்றடைவது தன் மகரந்தச்சேர்க்கை எனப்படும். எ.கா. ஹைபிஸ்கஸ்
தன் மகரந்தச்சேர்க்கையின் நன்மைகள்
- இருபால் மலர்களில் தன் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது.
- மலர்கள் புறக்காரணிகளைச் சார்ந்திருக்கத் தேவையில்லை.
- மகரந்தத்தூள்கள் வீணடிக்கப்படுவதில்லை
தன் மகரந்தச்சேர்க்கையின் தீமைகள்
- விதைகள் குறைந்த எண்ணிக்கையில் உருவாகின்றன.
- கருவூண் மிகச் சிறியது. எனவே விதைகள் மிக நலிவடைந்த தாவரங்களை உருவாக்கும்.
- புதிய வகைத் தாவரம் உருவாகாது.
அயல் மகரந்தச்சேர்க்கை
- ஒரு மலரின் மகரந்தத்தூள் அதே இனத்தைச் சார்ந்த மற்றொரு தாவரத்தின் மலரில் உள்ள சூலக முடியைச் சென்று அடைவது அயல் மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
- எ.கா. ஆப்பிள், திராட்சை, பிளம் முதலியன.
அயல் மகரந்தச்சேர்க்கையின் நன்மைகள்
- அயல் மகரந்தச்சேர்க்கையின் மூலம் உருவாகும். விதைகள், வலிமையான தாவரங்களை உருவாக்கும்.
- இதன் மூலம் புதிய வகைத் தாவரங்கள் உருவாகின்றன.
- நன்கு முளைக்கும் திறன் கொண்ட விதைகள் உருவாகின்றன.
அயல் மகரந்தச்சேர்க்கையின் தீமைகள்
- அயல் மகரந்தச்சேர்க்கை, புறக்காரணிகளை நம்பி இருப்பதால் மகரந்தச்சேர்க்கை தடைபடுகிறது.
- அதிக அளவில் மகரந்தத்தூள் வீணாகிறது.
- சில தேவையில்லாத பண்புகள் தோன்றுகின்றன.
- மலர்கள் புறக்காரணிகளைச் சார்ந்து இருக்கின்றன.