மாநில அரசாங்கத்தின் செயல்பாடுகள்
சட்டமன்ற செயல்பாடுகள்:
- சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் அதன் கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் வேண்டும்.
- சட்டமன்றம் ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று முறை கூடும். மாநிலத்திற்கான சட்டங்களை இயற்றுவது சட்டமன்றத்தில் முக்கிய பணியாகும்.
- சட்டமன்றம் மாநில பட்டியல் மற்றும் மத்தியப் பட்டியலில் உள்ள துறைகள் தொடர்பாக சட்டத்தை இயற்றலாம்.
- எனினும் நெருக்கடி நிலை நடைமுறையில் உள்ள போது சட்டமன்றம் தனது சட்டமியற்றும் அதிகாரத்தை பயன்படுத்த இயலாது.
- மாநில சட்டமன்றம் அமைச்சரவையின் மீது கட்டுப்பாட்டினை செலுத்துகிறது.
- மாநில அமைச்சரவை சட்டமன்றத்திற்கு பொறுப்புள்ள தாகும் மற்றும் பதில் அளிக்கவும் கடமைப்பட்டுள்ளது.
- அமைச்சரவையின் செயல்பாடுகளில் திருப்தி ஏற்படாவிட்டால் மாநில சட்டமன்றத்தில் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை இயற்றி அமைச்சரவையை நீக்கம் செய்திடலாம்.
நிதி செயல்பாடுகள்
- மாநிலச் சட்டமன்றம் ஆனது மாநிலத்தின் நிதியை கட்டுப்படுத்துகிறது.
- நிதி மசோதாவை சட்டமன்றத்தில் மட்டுமே கொண்டு வர இயலும்.
- சட்டமன்றத்தின் அனுமதி இல்லாமல் மாநில அரசாங்கம் வரியினை விதிக்கவோ, அதிகரிக்கவோ, குறைக்கவோ, விலகிக் கொள்ளவோ இயலாது.
தேர்தல் செயல்பாடுகள்
- சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் சட்டமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் பங்கு கொள்கின்றனர்.
அரசியலமைப்பு திருத்த செயல்பாடுகள்
- அரசியலமைப்பு திருத்தம் சில நேர்வுகளில் சட்டமன்றம் பங்கு வகிக்கிறது.
- எனவே அரசாங்கமானது சட்டத்தை உருவாக்குதல், சட்டத்தை நடைமுறை படுத்துதல், நீதியை உறுதி செய்தல் ஆகிய மூன்று அடிப்படை பணிகளை கொண்டுள்ளது.