முதலமைச்சர்
- மாநிலத்தில் உண்மையான நிர்வாக அதிகாரங்களைச் செயல்படுத்துவது முதலமைச்சர் மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவையாகும்.
- ஆளுநரின் பெயரால் நிர்வாகத்தை முதலமைச்சர் மேற்கொள்கிறார்.
- மைய அரசில் பிரதமரில் நிலை போன்றே மாநில நிருவாகத்தில் முதலமைச்சர் நிலை காணப்படுகிறது.
- முதலமைச்சர் அமைச்சரவையின் தலைவர் ஆவார்.
பதவி காலம்
- முதலமைச்சரின் பதவி காலம் நிலையான ஒன்று அல்ல.
- அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையான பலம் உள்ளவரை முதலமைச்சர் பதவியில் நீடிக்கலாம்.
- சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை இழக்கும் போது அவர் பதவி விலகுதல் வேண்டும்.
- முதலமைச்சர் பதவி விலகல் என்பது ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவி விலகுதலைக் குறிக்கும்.
தகுதிகள்
- முதலமைச்சர் மாநில சட்டமன்றத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
- முதலமைச்சராக பதவி ஏற்கும் போது உறுப்பினராக இல்லாவிட்டால் ஆறு மாதத்திற்குள் சட்டமன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் படுதல் வேண்டும்.
முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்
- முதலமைச்சர் மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார்.
- மாநில அரசாங்கத்தின் பல்வேறு முக்கிய முடிவுகள் அவரது தலைமையின் கீழ் எடுக்கப்படுகின்றன.
- மாநில முதலமைச்சர், அமைச்சரவையை, உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
- முதலமைச்சரின் ஆலோசனையின் பெயரில் அமைச்சர்களை ஆளுநர் நியமிக்கிறார்.
- பல்வேறு துறைகளை கண்காணித்து ஆலோசனை வழங்குகிறார்.
- மேலும் அவர் பல்வேறு துறைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.
- முதலமைச்சர் மாநில அரசாங்கத்தின் கொள்கைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
- அவர் மாநில அரசின் கொள்கைகள் மக்களின் நலனுக்கு எதிராக இல்லாததை உறுதி செய்கிறார்.
- மாநில அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் அவரது முடியவே இறுதியாக இருக்கும்.
- மாநில அரசாங்கத்தின் உயர்பதவிகளில் நியமனம் செய்யும் முக்கிய அதிகாரத்தை கொண்டுள்ளார்.
- முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் படியே ஆளுநர் பல்வேறு உயர் அதிகாரங்களை நியமிக்கிறார்.
எனவே, மாநிலத்தில் முதலமைச்சரே உண்மையான அதிகாரம் படைத்தவர் ஆவார்.