Contents show
பிளாசிப்போர் (1757):
- 1756-ல் அலிவர்திகான் இறப்பிற்குபின் அவரது பேரன் சிராஜ் உத் தௌலா வங்கத்தின் நவாப்பாக அரியணை ஏறினார்.
காரணம்:
- ஆங்கிலேயர் தஸ்தக் முறையை தவறாக பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்தனர்.
- நவாப்பின் சகோதரியின் மகனுக்கு அடைக்கலம் அளித்ததோடு அவரை நவாப்பிடம் ஒப்படைக்க மறுத்தனர்.
- நவாப் காசிம்பசார் வணிகமையத்தைக் கைப்பற்றியதோடு ஜூன் 1756-ல் வில்லியம் கோட்டையையும் கைப்பற்றினார்.
- சென்னையிலிருந்து கிளம்பிய இராபர்ட் கிளைவ் மற்றும் வாட்சன் படையினர் கல்கத்தாவை மீட்டு நவாப்புடன் அலிநகர் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டனர்.
- மார்ச் 1757-ல் பிரெஞ்சின் செராம்பூர் மையத்தை பிரிட்டிஷ் கைப்பற்றியதால் அவர்கள் நவாப்புடன் இணைந்தனர்.
ஃபார்மன்
- ஃபார்மன் என்பது 1717ல் முகலாய அரசர் பருக்சியார் கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கிய சுங்க வரியற்ற வணிக அனுமதி ஆகும். இதன் மூலம் கம்பெனி தனது நாணயங்களை அச்சிடவும் தஸ்தக் எனும் அனுமதிச்சீட்டு வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.
- தஸ்தக் முறை வாரன் ஹாஸ்டிங் பிரபுவால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இருட்டறை துயரச்சம்பவம் (1756)
- வில்லியம் கோட்டையின் சிறிய அறையில் 146 ஆங்கிலேய படைவீரர்கள் ஓரிரவு அடைக்கப்பட்டனர்.
- மறுநாள் காலை 23 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.
பிளாசிப்போர் 23 ஜூன் 1757:
- பிரிட்டிஷ், மீர்ஜாபர் (நவாப்பின் மாமா) மற்றும் ஜகத்சேத் எனும் வட்டிக்காரர்கள் நவாபிற்கு எதிராக பங்கேற்றனர்.
- பிரிட்டிஷ் படை நவாப்பை தோற்கடித்து வங்கத்தை கைப்பற்றினர்.
- மீர்ஜாபர் புதிய நவாப்பாக இராபர்கிளைவ்வால் நியமிக்கப்பட்டார்.
பக்சார் போர் 1764:
- மீர்ஜாபருக்கு பதிலாக இவரது மருமகன் மீர்காசிம் நவாப்பாக நியமிக்கப்பட்டார்.
- பிரிட்டிஷாருக்கு எதிராக தஸ்தக் முறையை சீரமைக்க முயன்றதாலும், சுதந்தரத்தை பெற விரும்பியதாலும் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
- மீர்காசிம் பிரிட்டிஷாருக்கு எதிராக முகலாய அரசர் இரண்டாம் ஷாஆலம் மற்றும் அயோத்தியின் நவாப் சுஜா உத்தௌலாவுடன் கூட்டணியை ஏற்படுத்தினார்.
- 22 அக்டோபர் 1764-ல் பீகாரின் பக்சார் எனும் இடத்தில் மூவர் கூட்டணி பிரிட்டிஷாருடன் மோதியது.
- இப்போரில் பிரிட்டிஷார் வெற்றிபெற்று, 1765- இரண்டாம் ஷா ஆலமுடன் அலகாபாத் உடன்படிக்கை செய்து கொண்டனர்.
- பீகார், வங்காளம் மற்றும் ஒரிஸா பகுதிகளின் திவானி உரிமை பிரிட்டிஷாருக்கு சொந்தமானது.
- 1765-ல் இராபர்ட் கிளைவ் இரண்டாம் முறையாக வில்லியம் கோட்டையின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேலும், இரட்டை ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தினார்.
இரட்டை ஆட்சிமுறை
- திவானி மற்றும் நிஷாமத் அதிகாரம் பிரிட்டிஸின் கைக்கு வந்தது.
- கம்பெனி துணை சுபேதாரை தேர்ந்தெடுத்தது. இவர் காவல் மற்றும் நீதித்துறையை கவனித்துக் கொண்டார்.
- இம்முறையில் நவாப் அமைதியையும். ஒழுங்கையும் நிலைநாட்டும் பொறுப்பு உடையவர் ஆனார். ஆனால் வருவாய்க்கும், படைக்கும் அவர் கம்பெனியைச் சார்ந்திருக்க வேண்டும்.
- கம்பெனி இராணுவத்தையும், வருவாயையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டது. இதனால் நவாபும் கம்பெனியும் மக்களின நல்வாழ்வில் அக்கறை கொள்ளவில்லை. இதனால் வங்கத்தில் பஞ்சம் ஏற்பட்டது.
- இம்முறை 1772-ல் வாரன்ஹேஸ்டிங்கால் ஒழிக்கப்பட்டது.