ஆங்கிலேயர்கள் காலத்தில் பெண்களுக்கான சட்டங்கள்

இந்தியாவில் பிரிட்டீசாரின் கல்வி மற்றும் சமூக சீர்திருத்தங்கள்

பெண்களுக்கான சட்டங்கள்

சதி ஒழிப்பு

  • இம்முறை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக இராஜ புத்திர பகுதிகளில் மிகுந்து காணப்பட்டது.
  • தொடக்க காலத்தில் இம்முறை விருப்பம் சார்ந்ததாக இருந்தபோதிலும் பிற்காலத்தில் கட்டாய முறையாக மாற்றப்பட்டது.
  • எனவே டிசம்பர் 4, 1829ல் இராஜா ராம்மோகன் ராயின் உதவியுடன் வில்லியம் பெண்டிங் பிரபு சதி ஒழிப்புச் சட்டத்தை வங்கத்தில் கொண்டுவந்தார்.
  • இதன்படி சதிச் செயலானது தண்டணைக்குரிய குற்றமாக மாற்றப்பட்டது.
  • 1830ல் இச்சட்டம் மும்பை மற்றும் சென்னை மாகாணங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

பெண் சிசு கொலை

  • கர்னல் டாடு, ஜான்சன் டங்கன் மற்றும் மால்கம் ஆகியோர் பெண் சிசு கொலைக்கு குடும்ப பெருமை, வரதட்சனை மற்றும் சரியான இணையை தேடுதல் போன்றவையே காரணம் என கூறினர்.
  • இதற்கு எதிராக 1795, 1802, 1804 மற்றும் 1870 ஆகிய வருடங்களில் பல சட்டங்கள் இயற்றப்பட்டன.

விதவை மறுமணம்

  • 19 நூற்றாண்டில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் போரினால் கைம்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
  • இதனால் பல சமூக சீர்திருத்தவாதிகள் பத்திரிக்கைகள் மூலம் விதவை மறுமணத்தை பரவலாக்க முயற்சி செய்தனர்.
  • விதவை திருமணத்திற்காக போராடியவர்களில் குறிப்பிடதக்கவர்கள் இராஜா ராம்மோகன் ராய் அவர்கள் மற்றும் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் ஆவர்.
  • ஜூலை 1856ல் டல்ஹௌசி பிரபுவின் ஆளுநர் குழுவின் உறுப்பினர் J.P. கிராண்ட் என்பவர் விதவைகள் மறுமண மசோதாவைக் கொண்டுவந்தார்.
  • ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் உதவியினால் 13 ஜூலை 1856ல் டல்ஹௌசி பிரபுவால் இந்து விதவைகள் மறுமணச் சட்டம் இயற்றப்பட்டது.

குழந்தைத் திருமணம்

  • 1870ல் கேசவ் சந்திர சென்னின் இந்திய சீர்திருத்த இயக்கம் குழந்தை திருமணத்திற்கு எதிராக வாதாடியது.
  • B.M.மலபாரியின் “மகாபாப் பால் விவாகா” எனும் பத்திரிக்கை குழந்தை திருமணத்திற்கு எதிராக வெளியிடப்பட்டது.
  • 1846ல் திருமண வயதானது 10 வயதாக நிர்ணயிக்கப்பட்டது.
  • 1891ல் இயற்றப்பட்ட வயதுவந்தோர் சட்டம் திருமண வயதை 12 வயதாக நிர்ணயித்தது.
  • 1929ல் இயற்றப்பட்ட சாரதா சட்டம் பெண்களுக்கான திருமண வயது 14 ஆகவும் ஆண்களுக்கு 18 ஆகவும் நிர்ணயித்தது.
  • 1978ல் பெண்ணின் திருமண வயது 18ஆகவும் ஆணின் திருமண வயது 21 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

பர்தா முறை

  • 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் இம்முறைக்கு எதிரான குரல்கள் வெளிவரத் தொடங்கின.
  • இம்முறை தென்னிந்தியாவில் காணப்படவில்லை என்றாலும் வட இந்தியாவில் குறிப்பாக இராஜஸ்தான் மற்றும் குஜராத் இந்துப் பெண்களிடம் மிகுந்து காணப்பட்டது.
  • சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டதன் மூலம் தனிச்சட்டம் எதுவுமின்றி இம்முறை வழக்கொழிந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!