ஆங்கிலோ மைசூர் போர்கள் (1767-1799)

முதல் ஆங்கிலோ மைசூர் போர் (1767 – 1769)

காரணம்:

  • தென்னிந்தியாவில் ஹைதர் அலியின் வளர்ச்சியும், பிரெஞ்சுக்காரர்களுடன் அவர் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பும்

நபர்கள்:

  • ஹைதர் அலி (Vs) ஜோசப் ஸ்மித், மராத்தியர்கள் மற்றும் ஹைதராபாத் நிஜாம்
  • 1767-ல் ஜெனரல் ஜோசப் ஸ்மித் மைசூரில் ஊடுருவ முயன்று தோல்வி அடைந்தார்.
  • இதைப் பயன்படுத்தி ஹைதர் அலி மங்களூரைக் கைப்பற்றினார்.
  • 1769-ல் ஹைதர் அலி சென்னையைத் தாக்கி முற்றுகையிட்டு பிரிட்டீஷாரை அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட வற்புறுத்தினார்.
  • எனவே ஏப்ரல் 4, 1769-ல் மெட்ராஸ் உடன்படிக்கை ஏற்பட்டது.
  • கைப்பற்றப்பட்ட பகுதிகள் பிரிட்டிஷிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரதிபலனாக மராத்தியர்கள் தாக்கும்போது ஹைதர் அலிக்கு உதவுவதாக பிரிட்டிஷ் உறுதி அளித்தது.

இரண்டாம் ஆங்கிலோ மைசூர் போர் (1780-1784):

காரணங்கள்:

  • 1771-ல் மராத்தியர்கள் மைசூரை தாக்கியபோது ஆங்கிலேயர்கள் உதவவில்லை.
  • ஹைதர் அலியின் பாதுகாப்பில் இருந்த பிரெஞ்சு வணிக மையமான மாஹியை பிரிட்டிஷார் கைப்பற்றினர்.
  • இதனால் ஹைதர் அலி, மராத்தியர்கள் மற்றும் நிஜாமுடன் சேர்ந்து பிரிட்டிஷாரை எதிர்த்தனர்.

நபர்கள்:

  • ஹைதர் அலி (Vs) சர் அயர்கூட்
  • 1781 – போர்டோ நோவா போர் ஹைதர் அலி, சர் அயர்கூட்டால் தோற்கடிக்கப்பட்டார்.
  • 1782-ல் ஹைதர் அலி புற்றுநோயால் இறந்தபின் திப்புசுல்தான் அரியணை ஏறினார்.
  • முதலாம் மராத்திய போருக்குப்பின் மராத்தியர்கள் மைசூருக்கு உதவி செய்யவில்லை.
  • 1783-ல் திப்பு சுல்தான் பிரிட்டிஷ் படையின் தளபதி மேத்யூவை சிறைபிடித்தார்.
  • அமெரிக்கப்போரின் தோல்வியை தொடர்ந்து வாரன்ஹேஸ்டிங் இப்போரை முடிவுக்கு கொண்டுவர எண்ணினார்.
  • மார்ச் 7, 1784-ல் மங்களூர் உடன்படிக்கையின் மூலம் இப்போர் முடிவுக்கு வந்தது.

மூன்றாம் ஆங்கிலோ மைசூர் போர் (1790-1792)

காரணம்:

  • பிரான்சு மற்றும் துருக்கிக்கு திப்புசுல்தான் தூதரை அனுப்பி பிரிட்டிஷை தோற்கடிக்க உதவி கோரினார்.
  • 1789-ல் பிரிட்டிஷின் நட்பு நாடான திருவிதாங்கூரை திப்பு சுல்தான் தாக்கியதால் பிரிட்டிஷ் அரசு போரை அறிவித்தது.

நபர்கள்:

  • திப்பு சுல்தான் (Vs) கேப்டன் மெடோ, காரன்வாலிஸ், மராத்தியர்கள் மற்றும் ஹைதராபாத் நிஜாம்.
  • காரன்வாலிஸ், கேப்டன் மெடோவின் கீழ் அனுப்பிய படையை திப்பு சுல்தான் தோற்கடித்தார்.
  • காரன்வாலிஸ் பெங்களூரைக் கைப்பற்றி சீரங்கத்தை அடைந்தார். ஆனால், படைபலம் இல்லாததால் பின்வாங்கினார்.
  • மீண்டும் மராத்தியர்களின் உதவியுடன் காரன்வாலிஸ் சீரங்கத்தை முற்றுகையிட்டதால் திப்புசுல்தான் அமைதி உடன்படிக்கைக்கு வந்தார்.
  • 1792-ல் திப்பு சுல்தான் சீரங்கப்பட்டின உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.
  • இதன் மூலம் தனது ஆட்சிப்பரப்பில் பாதியை அளித்ததோடு, 3.6 கோடி ரூபாய் போர் இழப்பீடு வழங்கவும் ஒத்துக்கொண்டார்.
  • போரின்மூலம் மலபார், குடகு, திண்டுக்கல் மற்றும் பாரமஹால் பகுதியை பிரிட்டிஷ் பெற்றனர்.

நான்காம் ஆங்கிலோ மைசூர் போர் (1799)

காரணம்:

  • மூன்றாம் மைசூர் போரின் தோல்விக்கு பழிவாங்க அரேபியா, துருக்கி, பிரான்சு மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு தூதர்களை அனுப்பி உதவி கோரினார்.
  • நெப்போலியனுடன் தொடர்பில் இருந்தார்.
  • ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ஜாக்கோபியன் கழகம் தொடங்கப்பட்டு, சுதந்திர மரமும் நடப்பட்டது.
  • 1799-ல் வெல்லஸ்லி திப்பு சுல்தானை துணைப்படைத்திட்டத்தில் கையெழுத்திட அழைத்தபோது அதை திப்புசுல்தான் மறுத்தார். எனவே வெல்லெஸ்லி பிரபு போரை அறிவித்தார்.

நபர்கள்:

  • திப்பு சுல்தான் (Vs) வெல்லஸ்லி, ஆர்தர் வெல்லஸ்லி, ஜெனரல் ஸ்டூவர்ட் மற்றும் டேவிட் பார்டு.
  • நான்கு பக்கங்களிலிருந்தும் மைசூர் மீது வெல்லஸ்லி தாக்குதல் தொடங்கினார்.
  • மேற்குபுறம் ஜெனரல் ஸ்டுவர்டின் கீழ் பம்பாய் படை மைசூரையும், ஆர்தர் வெல்லஸ்லியின் சென்னை படை ஸ்ரீரங்கத்தையும் தாக்கியது.
  • டேவிட் பார்டு படை ஸ்ரீரங்கப்பட்டினத்துள் நுழைந்தது. மே 4, 1799-ல் திப்பு சுல்தான் போரில் வீர மரணம் அடைந்தார்.
  • கிருஷ்ணராஜ உடையார் அரியணை ஏற்றப்பட்டு திப்புவின் குடும்பம் வேலூர் கோட்டைக்கு அனுப்பப்பட்டனர். 
  • 1806 வேலூர் கலகத்திற்குப்பின் கல்கத்தாவிற்கு மாற்றப்பட்டனர். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!