Contents show
இஸ்லாமிய சீர்திருத்தங்கள்
சர் சையத் அகமத்கான் & அலிகார் இயக்கம் (1875)
- சர் சையத் அகமத்கான் (1817-1898). டெல்லியில் உயர்குடி முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த சையத் அகமத்கான் படிப்பறிவின்மையே குறிப்பாக, நவீன கல்வியறிவின்மையே இஸ்லாமியர்களுக்குப் பெருந்தீங்கு விளைவித்து அவர்களைக் கீழ்நிலையில் வைத்துவிட்டது எனக்கருதினார்.
- மேலைநாட்டு அறிவியலையும், அரசுப்பணிகளையும் ஏற்றுக் கொள்ளும்படி அவர் இஸ்லாமியர்களை வற்புறுத்தினார்.
- மேலெழுந்துவரும் தேசிய இயக்கத்தில் இணைவதைக் காட்டிலும் ஆங்கில அரசுடன் நல்லுறவு மேற்கொண்டால் இஸ்லாமியர் நலன்கள் பேணப்படும் என அவர் நம்பினார். எனவே அவர் இஸ்லாமியருக்கு ஆங்கிலக்கல்வியைப் பயிலும்படியும் அதில் கவனம் செலுத்தும்படியும் அறிவுரை கூறினார்.
- 1864 ஆம் ஆண்டு காசிப்பூர் என்னும் இடத்தில் சையது அகமதுகான் ஓர் பள்ளியை நிறுவினார். பின்னர் இது அறிவியல் கழகம் (Scientific Society) என்று அழைக்கப்பட்டது
- அக்கழகம் பல்வேறு அறிவியல் நூல்களை உருது மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டது.
- 1857 ம் ஆண்டு அலிகாரில் இவரால் தோற்றுவிக்கப்பட்ட முகமதியன் ஆங்கிலோ ஓரியண்டல் (MAO) கல்லூரி இவரது சிறந்த சாதனையாகத் திகழ்கின்றது.
- இக்கல்லூரியே பிற்காலத்தில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகமாக வளர்ச்சி அடைந்தது.
- சர் சையது அகமதுகான் தொடங்கிய சீர்திருத்த இயக்கம், அலிகார் இயக்கம் என அழைக்கப்பட்டது.
- பெண்கள் முகத்திரை (பர்தா) அணிவதை நீக்கவும், பெண் கல்வி வளரவும் பாடுபட்டார்.
- முஸ்லீம்களிடையே தன்னுடைய சீர்திருத்தக் கொள்கைகளைப் பரப்புவதற்காக தாசில்-உத்-அஃலக் என்னும் தினசரி பத்திரிக்கையை நடத்தினர்.
- “இந்துக்களும், முஸ்லீம்களும் இந்தியா என்கின்ற அழுகிய பறவையின் இரு கண்கள்’ என்று கூறினார்.
அகமதியா இயக்கம் (1889)
- நிறுவியவர்: மிர்சா குலாம் அகமது (1835 – 1908)
- குரானில் சொல்லப்பட்டுள்ள உண்மையான கொள்கைகளுக்கு திரும்ப வேண்டும் என்று கூறிய அவர் தன்னை ஒரு தீர்க்கதரிசி எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
- சமூக நெறிமுறைகளில் அகமதியா இயக்கம் பழமைவாதக் கண்ணோட்டத்துடனே பலதாரமணம், பெண்கள் முகத்திரை அணிவது போன்றவற்றையும், விவாகரத்தைப் பொறுத்தமட்டில் பழமையான விதிகளையும் பின்பற்றினர்.
தியோபந்த் இயக்கம்
- தியோபந்த் இயக்கம் ஒரு மீட்பியக்கமாகும்.
- இவ்வியக்கம் பழமைவாத முஸ்லீம் உலேமாக்களால், இரு முக்கியக் குறிக்கோள்களுடன் தொடங்கப்பெற்றது.
- குரான் மற்றும் ஷரியத்தின் உண்மையான போதனைகளைப் பரப்புரை செய்தல்.
- இஸ்லாமல்லாத அயல்கூறுகளுக்கு எதிராகப் புனிதப்போர் செய்யும் உணர்வுகளை ஊக்குவித்தல்.
- இவ்வுலேமாக்கள் முகமது குவாசிம் நானோதவி (1832 – 1880), ரஷித் அகமத் கங்கோத்ரி (1828 – 1905) ஆகியோரின் தலைமையில் 1866 இல் உத்தரப்பிரதேசத்தில் சகரன்பூரில் ஒரு பள்ளியை நிறுவினார்.
- இப்பள்ளியின் பாடத்திட்டம் ஆங்கிலக்கல்வியையும் மேலைநாட்டுப் பண்பாட்டையும் புறக்கணித்தது.
- தியோபந்த் பள்ளி தனது மாணவர்களை அரசுப்பணிகளுக்குத் தயார் செய்யவில்லை. மாறாக இஸ்லாம் மத நம்பிக்கையைப் பரப்புரை செய்யத் தயார்செய்தது.
- தியோபந்த் பள்ளி 1885 இல் அகில இந்திய தேசியக் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதை வரவேற்றது.
- 1888 இல் தியோபந்த் உலேமா, சையத் அகமத்கானுடைய அமைப்புகளான ‘தி யுனைடெட் பேட்ரியாட்டிக் அசோசியேசன்‘ (The United Patriotic Association), ‘முகமதன் ஆங்கிலோ-ஓரியண்டல் அசோசியேஷன்’ (The Mohammedan Anglo-Oriental Association) ஆகியவற்றிற்கு எதிராக சமய ஆணையைப் (fatwa) பிறப்பித்தது.
- சர் சையத் அகமத்கானுடைய நடவடிக்கைகளை எதிர்ப்பது என்ற அவர்களின் உறுதிப்பாடே தியோபந்த் உலேமாக்களை இயக்கியது எனச் சொல்லப்பட்டது.
நடவத் – அல் – உலாமா
- 1894 இல் லக்னோவில் சிப்லி நுமானி எனும் வரலாற்று ஆசிரியராலும் வேறு சில அறிஞர்களாளும் உருவாக்கப்பட்டது.
- இறைமறுப்புக் கொள்கை எதிர்கொள்ள அறிவார்ந்த முறையில் சமயத்திற்கு விளக்கமளிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
ஃபரங்கி மஹால்
- இச்சிந்தனைப் பள்ளி லக்னோவிலுள்ள ஃபரங்கி ஹாலில் உருவானது.
- மற்ற இரண்டைப் போலல்லாமல் பிரங்கிமஹால் பள்ளி சூபியிஸத்தை மதிப்பு வாய்ந்த அனுபவமாகவும் அறிந்து கொள்வதற்கான களமாகவும் ஏற்றுக்கொண்டது.
- மற்றொரு மரபுசார்ந்த இயக்கம் அல் – இ – ஹதித் அல்லது நபிகள் நாயகம் கூறியவற்றை அப்படியே பின்பற்றுபவர்களாவர்.