Contents show
தீவிரவாத தேசியம்
- பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசுக்குள்ளே மிதவாத அரசியலுக்கு எதிராக வெளிப்படையான வெறுப்பு நிலவியது.
- மக்களின் தேசப்பற்று உணர்வுகளை மதத்தின் அடையாளங்களைப் பயன்படுத்தித் தூண்டினர்.
- இவ்வியக்கமே (1905-1916) காந்தியடிகளின் சகாப்தத்திற்கு முந்தைய இந்திய தேசிய இயக்கத்தின் மிக முக்கியக் கட்டமாகும்.
- பாலகங்காதர திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜபதி ராய் (லால்-பால்-பால் (Lal-Bal-Pal) எனக் குறிப்படப்படும் முப்பெரும் தலைவர்கள்) & அரவிந்த் கோஷ் ஆகியோர் தீவிர தேசியவாதத்தின் மையப்புள்ளிகளாகத் திகழ்ந்தனர்.
பாலகங்காதர திலகர்
- பாலகங்காதர திலகர் “சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழங்கினார்.
- இவர் “கேசரி” எனும் மராத்திய பத்திரிகையையும் “மராட்டா” எனும் ஆங்கில பத்திரிகையையும் நடத்தினார்.
- தேசியவாதத்தை வளர்க்க “கணபதி” மற்றும் “சிவாஜி” விழாக்களை நடத்தினார்.
- இல் பூனாவில் தன்னாட்சி இயக்கத்தை 1916ல் தொடங்கினார்.
லாலா லஜபதி ராய்
- பஞ்சாப்பில் சுதேசி இயக்கத்தில் முக்கிய பங்காற்றினார்.
- 1916ல் அமெரிக்காவில் இந்திய தன்னாட்சி கழகத்தை நிறுவினார்.
- சைமன் குழு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று போலீசால் தாக்கப்பட்டு உடல்நலம் பாதிக்கக்ப்பட்டு நவம்பர் 17, 1928 இல் உயிரிழந்தார்.
- இவர் “பஞ்சாப் கேசரி” (பஞ்சாப் சிங்கம்) என போற்றப்படுகிறார்.
பிபின் சந்திர பால்
- மிதவாதியாக இருந்து தீவிர தேசியவாதியாக மாறினார்
- சுதேசி இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் மிக முக்கியமானவர் ஆவார்.
- இந்திய புரட்சிகர சிந்தனையின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
அரபிந்த கோஷ்
- இவர் வந்தே மாதரம் எனும் பத்திரிகையை நடத்தி வந்தார்
- அலிப்பூர் சதிவழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
- சிறைச்சாலையிலிருந்து வெளிவந்தபின் ஆன்மிகப் பணியில் தனது வாழ்க்கையை செலவழித்தார்.
- 1926ல் ஸ்ரீ அரபிந்த கோஷ் மடத்தை பாண்டிச்சேரியில் அமைத்தார்.
சுயராஜ்ஜியம் அல்லது அரசியல் சுதந்திரம்
- தீவிர தேசியவாதத் தலைவர்களின் பொதுவான குறிக்கோள்களில் ஒன்று சுயராஜ்ஜியம் அல்லது சுயாட்சி என்பதாகும்.
- திலகரைப் பொறுத்தவரை சுயராஜ்ஜியம் என்பது, முழுமையான தன்னாட்சி மற்றும் அந்நிய ஆட்சியில் இருந்து முழுமையான விடுதலை பெறுவதாக இருந்தது.
- பிபின் சந்திரபாலின் கருத்துப்படி சுயராஜ்ஜியம் என்பது அந்நியர் ஆட்சியிலிருந்து முற்றிலுமாக விடுதலையடைதல் என்பதாகும்.
சூரத் பிளவு 1907
- கோகலே தலைமையிலிருந்த காங்கிரஸ் கர்சனையும், வங்க பிரிவினையையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது. சுதேசி இயக்கத்தை ஆதரித்தது.
- பொருட்களை விலக்குவதோடு அல்லாமல் அதை மக்கள் இயக்கமாக மாற்ற விரும்பினர்.
- சுயராஜ்யத்தை நோக்கமாக கொண்டு முழுவீச்சில் அரசியல் போராட்டத்தை தொடங்கலானார்கள்.
- 1906 இல் மிண்டோ பிரபு இந்திய அரசப் பிரதிநிதியாகப் பணியமர்த்தப்பட்டதிலிருந்து மிதவாத தேசியவாதிகளுக்கும் தீவிர தேசியவாதிகளுக்கும் இடையில் நிலவிய கருத்து வேற்றுமை மேலும் தீவிரமடைந்தது.
- 1906 இல் கல்கத்தா மாநாட்டில் மிதவாத தேசியவாதிகளின் கோரிக்கையை ஏற்று தாதாபாய் நௌரோஜி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் பிளவு தவிர்க்கப்பட்டது.
- பெரோஸ்ஷா மேத்தாவின் தலைமையிலான பல மிதவாத தேசியவாதிகள் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டனர்.
- இதைக் கண்ணுற்ற மிதவாத தலைவர்கள் 1906 ம் ஆண்டு கல்கத்தாவில் தாதாபாய் நௌரோஜி அவர்கள் தலைமையில் நடந்த மாநாட்டில் “சுயராஜ்யமே காங்கிரஸின் நோக்கம்” என அறிவிக்கப்பட்டது.
- சுதேசி புறக்கணிப்பு, தேசியக் கல்வி, சுயாட்சி ஆகியவை தொடர்பான நான்கு தீர்மானங்களைத் தீவிர தேசியவாதிகள் ஒருவாறு நிறைவேற்றினர்.
- காங்கிரசின் அடுத்த மாநாடு தீவிர தேசியவாதிகளின் கோட்டை எனக் கருதப்பட்ட பூனாவில் நடைபெறத் திட்டமிடப்பட்டது.
- கல்கத்தா மாநாட்டு முடிவுகளால் அச்சம் கொண்டிருந்த மிதவாத தேசியவாதிகள் மாநாடு நடைபெறுமிடத்தைச் சூரத் நகருக்கு மாற்றினர்.
- காங்கிரசின் அடுத்த தலைவர் பொறுப்புக்கு மிதவாத தேசியவாதிகளின் வேட்பாளரான ராஷ்பிகாரி கோஷ் என்பாருக்கு எதிராகத் தீவிர தேசியவாதிகள் லாலா லஜபதிராய் போட்டியிட மறுத்தார்.
- நான்கு தீர்மானங்களை நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கப்பட வேண்டுமெனக் கோரியது.
- பெரோஸ்ஷாவின் இத்தகைய திட்டத்தை எதிர்கொள்ளத் தீவிர தேசியவாதிகள் ராஷ்பிகாரி கோஷ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை எதிர்க்க முடிவு செய்தனர்.
- டிசம்பர் 1885இல் உருவான காங்கிரஸ் இப்போது மிதவாத தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகளென இரு குழுக்களாகப் பிரிந்தது.
- சூரத் பிளவுக்குப் பின் உருவான காங்கிரஸ் முன்பிருந்ததைக் காட்டிலும் ஆங்கிலேயரிடம் அதிக விசுவாசத்துடன் நடந்துகொண்டது.
- தீவிர தேசியவாதிகள் இல்லாத புதிய காங்கிரஸ் “மேத்தா காங்கிரஸ்” என அழைக்கப்பட்டது.