இந்தியாவில் தேசியவாதத்தின் எழுச்சி

தேசியவாதத்தின் எழுச்சி

தேசியவாதத்தின் எழுச்சிக்கான காரணங்கள்

அரசியல் ஒற்றுமை

  • இந்தியாவின்  பல்வேறு பகுதிகளும் அரசியல் அடிப்படையிலும் ஆட்சியடிப்படையிலும் முதன்முறையாக ஒரு குடையின்கீழ் (பிரிட்டிஷ் ஆட்சி) கொண்டுவரப்பட்டது.
  • ஒரே சீரான சட்டமும் அரசும் அறிமுகப்படுத்தப்பட்டன.

தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வளர்ச்சி

  • இரயில் பாதைகள், தந்தி, அஞ்சல் சேவைகள் மற்றும் சாலைகள் கால்வாய்கள் மூலமான போக்குவரத்து வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டதால் மக்களிடையே தகவல் தொடர்பு எளிதாகியது.
  • இந்தியர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாயினர். மேலும், அகில இந்திய அடிப்படையில் தேசிய இயக்கம் தோன்றவும் இது வழிவகுத்தது.

ஆங்கில மொழியும் மேலைநாட்டுக் கல்வியும்

  • நாட்டில் தேசியம் வளர ஆங்கில மொழி பெரும் பங்காற்றியது.
  • ஆங்கிலம் கற்ற இந்தியர்கள் தேசிய இயக்கத்தை வளர்த்து தலைமை தாங்கி நடத்திச் சென்றனர்.
  • மேலை நாட்டுக்கல்வி மூலம், சுதந்திரம், சமத்துவம். கருத்துக்கள் விடுதலை, தேசியம் போன்ற மேலைநாட்டு தேசியம் இந்தியாவில் தோன்றலாயிற்று.

பத்திரிக்கைகளின் பங்கு 

  • இந்தியாவில் வெளியான ஆங்கிலம் மற்றும் நாட்டு மொழி பத்திரிக்கைகள் தேசியச் சிந்தனையைப் பரப்பின.
  • ராஜாராம் மோகன் ராய் வங்க மொழியில் சம்வாத் கௌமுடி மற்றும் பாரசீக மொழியில் மிராத் உல் அக்பர் பத்திரிகையையும் நடத்தினார்.
  • 1878 ஆம் ஆண்டு வட்டார மொழிப் பத்திரிக்கைச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன 
  • G.சுப்ரமணியனார் மற்றும் வீரராகவாச்சாரியார் இணைந்து இந்து பத்திரிகையை 1878 தொடங்கினர்.
  • விரைவில் பத்திரிக்கைகள் தேசியத்தை பரப்பும் ஒரு வாகனமாக செயல்பட்டது.

19 ஆம் நூற்றாண்டு சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

  • பிரம்ம சமாஜம், இராமகிருஷ்ண இயக்கம், ஆரிய சமாஜம், பிரம்ம ஞான சபை போன்ற அமைப்புகள் தாய்நாட்டின் பெருமைகளை மக்களிடையே எடுத்துரைத்து நாட்டுப்பற்று குறித்த உணர்வைத் தூண்டின.

பிரிட்டிஸாரின் பொருளாதாரச் சுரண்டல்

  • இந்தியாவை ஆட்சிபுரிந்த பிரிட்டிஷாரின் பொருளாதாரக் கொள்கை மக்களிடையே பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியது.
  • இந்திய வணிகத்தையும் கைத்தொழிலையும் ஆங்கிலேயர் திட்டமிட்டு அழித்தனர்.
  • எனவே, பிரிட்டிஸாரின் பொருளாதாரச் சுரண்டல் இந்திய தேசியம் தோன்றுவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.

இனப்பாகுபாடு

  • 1857 ஆம் ஆண்டு கலகம் பிரிட்டிஷாருக்கும் இந்தியருக்கும் இடையே தீராத வெறுப்புணர்வையும் பரஸ்பர சந்தேக உணர்வையும் ஏற்படுத்தியிருந்தது.
  • இந்தியாவும், இந்திய மக்களும் பல்வேறு அவமானங்களுக்கும் ஒடுக்குதல்களுக்கும் உட்படுத்தப்பட்டனர்.

லிட்டனது நிர்வாகம்

  • லிட்டன் பிரபு, இந்தியாவின் பெரும்பகுதி பஞ்சத்தினால் துன்பத்தில் துவண்டு கிடந்தபோது டெல்லி தர்பாரை நடத்தினார்.
  • 1878 நாட்டு மொழி செய்தித்தாள் சட்டத்தை கொண்டுவந்து இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரத்தை ஒடுக்கினார்.
  • ஆயுதங்கள் சட்டம் 1878 இந்தியர்கள் ஆயுதங்கள் வைத்துக் கொள்வதற்கு தடை விதித்தது.
  • லிட்டனின் இத்தகைய நடவடிக்கைகள் இந்தியரிடையே பரவலான வெறுப்பை ஏற்படுத்தியது.

இல்பர்ட் மசோதா சச்சரவு (1883) 

  • ரிப்பன் பிரபு ஆட்சிக் காலத்தில் மத்திய சட்டசபையில் இல்பர்ட் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
  • நீதிமன்றங்களில் ஐரோப்பிய நீதிபதிகளுக்கும் இந்திய நீதிபதிகளுக்கும் இடையே நிலவிய இன வேறுபாட்டை களைவதற்காக இம்மசோதா கொண்டுவரப்பட்டது. 
  • இந்தியாவில் வாழ்ந்த பிரிட்டிஷார் இதனை கடுமையாக எதிர்த்தனர். இறுதியில் இது திரும்பப் பெறப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!