இந்தியாவில் பிராந்தியவாதத்தை ஒழிப்பதற்கான தீர்வுகளை பட்டியலிடுக

பிராந்தியவாதத்தை ஒழிப்பதற்கான தீர்வுகள்:

  • பிராந்தியவாதம் இந்திய அரசியலின் ஒரு முக்கிய அம்சமாகும் மற்றும் இது நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கின்றது.
  • எனவே, அத்தகைய போக்குகளைக் குறைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம்.

வளர்ச்சி நடவடிக்கை

  • புறக்கணிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல். அப்பொழுதுதான் தாங்களும் தேசிய நீரோட்டத்தில் இணைகிறோம் என்கிற உணர்வு மேலோங்கும்.

மத்திய அரசு மாநில அரசு ஒற்றுமை

  • மத்திய அரசு மாநில அரசு விவகாரங்களில் தவிர்க்க முடியாத தேசிய நலன் தொடர்பான விஷயங்கள் தவிர பெரும்பாலும் தலையிடக்கூடாது.

மக்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வுகள்

  • மக்களுடைய பிரச்சனைகள் அமைதியாகவும் அரசியலமைப்பு முறையிலுமே தீர்க்கப்பட வேண்டும்.
  • பிராந்திய கோரிக்கைகளின் சிக்கலை தவறாக பயன்படுத்த அரசியல்வாதிகளை அனுமதிக்கக் கூடாது.

மத்திய மாநில உறவுகள் 

  • மத்திய மாநில உறவுகளில் மாநிலங்கள் சார்பான மாற்றத்தை கொண்டு வருவது அவசியமாகும்.

தேசிய கல்வி முறை

  • தேசிய கல்வி முறையை அறிமுகப்படுத்துதல் வேண்டும். அப்பொழுதுதான் பிராந்திய உணர்வுகளை மக்களிடத்தில் வென்று தேசம் உடனான இணைப்பை நோக்கி மக்களை மேம்படுத்த முடியும்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் 

  • தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளைத் தவிர, மாநிலங்களுக்கு தங்கள் சொந்த விவகாரங்களை கையாள சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.

 

1 thought on “இந்தியாவில் பிராந்தியவாதத்தை ஒழிப்பதற்கான தீர்வுகளை பட்டியலிடுக”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!