இந்தியாவில் வேலையின்மைக்கான காரணங்களை பட்டியலிட்டு அதற்கான தீர்வுகளை எழுதுக

  • இந்தியாவில் வேலையின்மை ஒரு நீண்டகால பிரச்சனையாக இருந்து வருகிறது. 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் வேலையின்மை விகிதம் 7.75% ஆக இருந்தது. இது நகர்ப்புறப் பகுதிகளில் 7.38% ஆகவும், கிராமப்புறப் பகுதிகளில் 7.91% ஆகவும் இருந்தது.
Contents show

காரணங்கள்:

அதிக மக்கள்தொகை வளர்ச்சி

  • மக்கள் தொகை அதிகமான அளவு உயர்ந்து உள்ளதால், வேலையின்மைக்குரிய சிக்கல்களை மேலும் அதிகரித்து உள்ளது.

போதுமான பொருளாதார வளர்ச்சி வீதம் இன்மை

  • இந்தியா ஒரு வளர்ந்து வரும் நாடாக இருந்தபோதும், பொருளாதார வளர்ச்சி வீதம் மிகவும் குறைவாகவே உள்ளது.
  • காரணம் மொத்த உழைப்பின் வலிமைகளும் பயன்படா நிலையே.
  • இந்தியாவில் வேலைவாய்ப்புக்கள் போதுமான அளவில் இல்லை.

வேளாண்மை தவிர பிற துறைகளில் வேலை வாய்ப்பு குறைவு

  • இந்தியாவில் விவசாயத் துறையில் மட்டுமே போதுமான வேலைவாய்ப்பு உண்டு.
  • மற்ற துறைகளில் போதுமான அளவுக்கு வேலைவாய்ப்பு வசதிகள் குறைந்து காணப்படுகிறது.
  • இதனால் நிலத்தின் அழுத்தம் மிகவும் அதிகமாக உள்ளதனால் 2/3 பகுதி உழைப்பு சக்திகள் விவசாயத் துறையிலேயே பயன்படுத்தப்படுகின்றனர்.

பருவகால வேலை வாய்ப்பு

  • இந்தியாவில் விவசாயத்தில் பருவகால வேலையின்மை நிலவுகிறது.
  • பருவகாலம் இல்லாத நேரத்தில் விவசாயத் தொழிலாளர்கள் வேலையில்லா நிலையில் காணப்படுகின்றனர்.

கூட்டுக் குடும்ப அமைப்பு

  • இந்தியாவில் கூட்டுக்குடும்ப முறை இருப்பதால் மறைமுக வேலையின்மை அதிகமுள்ளது.
  • தேவைக்கு அதிகமாக தொழிலாளர்கள் தங்களுடைய குடும்ப தொழிலில் அமர்த்தப்படுகிறார்கள்.

இந்தியப் பல்கலைக்கழகத்திலிருந்து பெருகிவரும் மாணவர்கள்

  • கடந்த பத்தாண்டுகளாக இந்தியப் பல்கலைக்கழகத்திலிருந்து உருவாக்கப்படும் பெருவாரியான பட்டதாரிகள் கூடுதலாக இருப்பதால் படித்தவர்களுக்கு வேலையின்மை அதிகரித்துக் கொண்டுள்ளது.
  • தொழில்துறையின் பட்டதாரிகளுக்கு இடையே வேலையின்மை நிலவுகிறது.
  • மேலும் நமது நாட்டில் தொழில் கல்வியும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

குறைவான தொழில் வளர்ச்சி

  • நமது நாட்டில் தொழில்துறை போதுமான அளவு வளர்ச்சியடையவில்லை.

இந்தியாவில் வேலையின்மை பிரச்சனைகளுக்கு தீர்வு

  • ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டங்களிலும் வேலைவாய்ப்பை பெருக்குவதே பொருளாதார வளர்ச்சியின் முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளது.

பெரிய நிறுவனங்களுக்கு எதிராக சிறிய நிறுவனங்களை ஊக்குவித்தல்

  • பெரிய தொழில் நிறுவனங்களைக் காட்டிலும் சிறிய நிறுவனங்களுக்கு நேரடியான அதிக முதலீடு செய்யப்படும்போது வேலைவாய்ப்பு நோக்கமும் உற்பத்தியின் நோக்கமும் நிறைவுச் செய்யப்படும்.
  • தற்போது அரசாங்கமானது வளர்ச்சியின் பணிகளை பகிர்ந்தளிக்கும்போது சிறுத் தொழில் நிறுவனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது.
  • இதனால் அத்தொழில்களுக்கு அதிக கடன் வசதி, உரிமம், முறையான கச்சாப் பொருள்கள் பகிர்வு மற்றும் இதரக் கொள்கைகள் வழங்கப்படுவதன் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி கணிசமான அளவில் ஒரே சீராக அதிகரிக்கக்கூடும்.

தொழில்நுட்ப முறைகளில் காணப்படும் பிரச்சனைகளை தேர்ந்தெடுத்தல்

  • நடுத்தரமான தொழில்நுட்ப முறைகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் தொழில் மயமாகுதலின் போக்கில் புதிதாக வரும் உழைப்பு சக்திகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும்..

சிறுநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் புதிய வளர்ச்சி மையங்களை ஊக்குவித்தல் – கல்விக் கொள்கையில் புத்தாக்கம்

  • படித்தவர்களிடையே வேலையின்மை அதிகமாக இருப்பதால் கல்வி முறையில் புத்தாக்கம் செய்வது மிகவும் அவசியமான தேவையாக கருதப்படுகிறது.
  • அப்படி செய்வதன் மூலம் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்கமுடியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!