இந்திய திட்டமிடலின் பரிணாம வளர்ச்சி – பல்வேறு திட்டங்கள்

விஸ்வேஸ்வரய்யா திட்டம்

  • இந்தியாவின் முதல் பொருளாதாரத் திட்டம் 1934-ல் கர்நாடகாவின் புகழ்பெற்ற பொறியாளரும் மைசூர் அரசின் முன்னாள் திவானுமான சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா அவர்களால் இந்தியாவிற்கான திட்டமிடப்பட்ட பொருளாதாரம் (Planned Economy for India) எனும் நூல் மூலமாக முன் வைக்கப்பட்டது.

இந்திய வர்த்தக மற்றும் தொழிற் கூட்டமைப்பின் திட்டம் (FICCI)

  • 1934 ல் இந்திய தொழிலதிபர்களின் கூட்டமைப்பான இது இந்தியா போன்ற பின் தங்கிய நாடுகளின் வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதற்கென தேசிய திட்டக்குழு ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் பரிந்துரை செய்தது.

காங்கிரசின் திட்டம்

  • 1938ல் தேசிய திட்டக்குழு இந்திய தேசிய காங்கிரசால் நேருவின் தலைமையில் உருவாக்கப்பட்டது.
  • சுபாஷ் சந்திரபோஸின் பெருமுயற்சியே இதற்குக் காரணம் ஆகும்.

பம்பாய்த் திட்டம்

  • இந்தியாவின் முன்னனி முதலாளித்துவர்களான புருஷோத்தமதாஸ் தாகூர்தாஸ், ஜெ.ஆர்.டி.டாட்டா, ஜி.டி.பிர்லா, லாலா ராம், கஸ்தூரிபாய் லால்பாய், .டி.ஸ்ரோப், அவ்தேஷிர் தலால் மற்றும் ஜான் மதாய் அவர்களால் 1944 – 1945 ல் உருவாக்கப்பட்டது.

காந்தியத் திட்டம்

  • 1944 ல் ஸ்ரீமன் நாரயண் அகர்வால் என்பவரால் முன் வைக்கப்பட்டது.
  • வேளாண்மை, கிராமப்புறத் தொழில் முன்னேற்றம் ஆகியவை அதன் அடிப்படை அம்சங்கள், பகிர்வு செய்யப்பட்ட பொருளாதார முறை மற்றும் கிராம சுயசார்புப் பொருளாதாரம் ஆகியவையே இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டனவாகும்.

மக்கள் திட்டம்

  • 1945 ல் தொழிற்சங்கவாதியான எம்.என்.ராய் அவர்களால் முன் வைக்கப்பட்டது.
  • மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மார்க்சிய பொதுவுடைமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. வேளாண்மை மற்றும் தொழிலுக்கு சம முக்கியத்துவம் அளித்தது.

சர்வோதயா திட்டம்

  • 1950-ல் ஜே.பி. நாராயணன் அவர்களால் வழங்கப்பட்டது.
  • காந்தியக் கொள்கைகளையும், ஆச்சார்யா வினோபா பாவேவின் சர்வோதயக் கொள்கைகளையும் கொண்டிருந்தது.
  • இந்த ஏழுத்திட்டங்களையும் கவனமாக ஆராய்ந்து திட்டக்குழுவை அமைத்து ஐந்தாண்டுத் திட்டங்களாக செயல்படுத்த ஜவஹர்லால் நேரு முடிவெடுத்தார்.
  • ஜவஹர்லால் நேரு – இந்திய அரசின் திட்டக் குழுவின் முதல் தலைவராவார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!