இந்திய பெருங்கலகம் 1857 – காரணங்கள்

இந்திய பெருங்கலகம் 1857

  • இந்திய பெருங்கலகம் 1857 என்பது பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் சிப்பாய்கள் மே 10, 1857 இல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும்.

காரணங்கள்

  • கலகத்திற்கான காரணங்கள் சமூகம், கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் அரசியல் என அனைத்து பகுதிகளிலிருந்தும் உருவானது.
  • கம்பெனியின் ஆட்சியில் அரசர்கள், ஜமீன்தார்கள், குடியானவர்கள், வணிகர்கள் மற்றும் கைவினைஞர்கள் 61601 அனைவரும் பாதிக்கப்பட்டதால் இக்கலகத்தில் இணைந்து போராடினர்.

அரசியல் காரணங்கள்

  • பிரிட்டீசின் துணைப்படைத் திட்டம் நாட்டின் இறையாண்மையில் பாதிப்பு ஏற்படுத்தியதோடு நிர்வாக முறைகேட்டையும் ஏற்படுத்தியது.
  • இதைப் பயன்படுத்தி பிரிட்டீஸ் முறையற்ற ஆட்சியின் கீழ் இவ்வரசுகளை கைப்பற்றியது.
  • வாரிசு இழப்புக் கொள்கை இந்து வாரிசு சட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு பல இந்து அரசுகளை பிரிட்டீஸ் இணைத்துக் கொண்டது.
  • அயோத்தியை இணைத்துக் கொண்டதும் இரண்டாம் பகதூர்ஷாவின் மகன் இளவரசன் ஃபக்ரூதினின் இறப்பிற்குப்பின் முகலாய அரசு முடிவிற்கு வருமென கானிங் பிரபு அறிவித்தது இஸ்லாமியர்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியது.
  • 1852ல் இனாம் குழுவின்பரிந்துரையில் 21,000 நிலங்கள் தாலுக்தார்களிடமிருந்து பறிக்கப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியது.

நிர்வாகக் காரணங்கள்

  • பிரிட்டீசாரின் நிர்வாகப் பிரிவான காவல் துறை, நீதித்துறை, அரசு அலுவலகங்கள் என அனைத்தும் ஊழலில் திளைத்தது.
  • நீதிமன்றங்களில் ஆங்கில மொழி பாரசீக மொழிக்கு மாற்றாக வந்ததை மக்கள் விரும்பவில்லை.
  • நீதி அமைப்பானது விலையுயர்ந்ததாகவும், நேரம் மிகுதியாக இருந்ததும் மக்கள் தங்களது உடமைகளுக்கும் நிலங்களுக்கும் பாதுகாப்பற்ற தன்மை நிலவியதாக எண்ணினர்.
  • இந்தியர்கள் அனைத்து உயர் பதவிகளிலும் விலக்கப்பட்டனர். இளைஞர்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியது. 

பொருளாதார காரணங்கள்

  • பிரிட்டீசாரின் நில வருவாய் முறை விவசாயிகளை மட்டுமின்றி ஜமீன்தார்களையும் பாதித்தது.
  • பிரிட்டீசார் நிலவருவாயை வரியாக அல்லாமல் வாடகை போன்று வசூலித்தனர்.
  • நில வருவாய் செலுத்தத் தவறியதால் பல ஜமீன்தார்களுக்கு பதிலாக வட்டிக் கடைக்காரர்கள் மற்றும் வணிகர்கள் புதிய ஜமீன்தார்களாக நியமிக்கப்பட்டனர்.
  • நிரந்தர நிலவருவாய்ச் சட்டம் நிலத்தின் உரிமையாளர்களை குத்தகைக்காரர்களாக மாற்றியது.
  • குடியானவர்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இயலாதபோது அவர்களது நிலங்கள் வட்டிக்கடைக்காரர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது.
  • பிரிட்டீசாரின் கொள்கைகள் இந்திய கைவினைஞர்களை வேறு வேலையைத் தேடிச் செல்ல தூண்டியது.
  • இந்தியச் சந்தையில் குவிந்த மலிவு விலை பிரிட்டீஸ் துணிகள் மற்றும் இந்திய துணிகளின் மீதான அதிக வரி இந்திய பருத்தி ஆடை தொழிலை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது.
  • வில்லியம் பெண்டிங் பிரபுவால் 1833 கொண்டுவரப்பட்ட தோட்டமுறை குடியானவர்களை பாதித்ததோடு, வங்கம் மற்றும் பீகார் பகுதிகளில் 1866 முதல் 1943 வரை பல பஞ்சங்களை ஏற்படுத்தியது.

சமூக மற்றும் மதக் காரணங்கள்

  • பிரிட்டீசாரின் சீர்திருத்தங்கள் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதை நோக்கமாக கொண்டது என இந்து மக்கள் பயப்படலாயினர்.
  • சதி ஒழிப்பு, பெண் சிசு கொலை ஒழிப்பு மற்றும் விதவை மறுமணச் சட்டம் ஆகியன இந்துக்களின் பண்பாட்டிற்குள் அரசு தலையிடுவதாக இந்துக்கள் எண்ணினர்.
  • 1850ல் கொண்டுவரப்பட்ட மத இயலாமைச் சட்டம் கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களுக்கு சொத்தில் உரிமை வழங்கியதை இந்துக்கள் எதிர்த்தனர்.
  • கோவில்கள் மற்றும் மசூதிகளின் மேல் பிரிட்டீசார் வரி விதித்தது மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது.
  • 1856ல் கொண்டுவரப்பட்ட பொதுச் சேவைச் சட்டம் உயர்சாதிகளை இராணுவத்தில் சேர அனுமதித்ததோடு இந்திய வீரர்களை மற்ற நாடுகளிலும் சேவையாற்ற வற்புறுத்தியது. கடல் பயணம் அக்காலத்தில் தடைசெய்யப்பட்டிருந்த போதிலும் வீரர்கள் வெளிநாடு செல்ல வற்புறுத்தப்பட்டனர். 

இஸ்லாமிய அறிவாளிகளின் வெளியேற்றம்

  • பிரிட்டீசாரின் ஆட்சிக்கு முன்பு இஸ்லாமியர்கள் பெரும்பாலும் அரசு வேலைகளையே சார்ந்திருந்தனர்.
  • ஆங்கிலம் அலுவலக மொழியாக அறிமுகப்படுத்தப்பட்டதும் மேற்கத்திய கல்வியின் அறிமுகமும் இஸ்லாமிய அறிவாளிகளை முக்கிய பதவிகளிலிருந்து வெளியேற்றியது.
  • நீதிமன்றத்தில் பாராசீக மொழிகளின் வெளியேற்றம் மற்றும் குடிமைத்தேர்வின் அறிமுகம் இஸ்லாமியர்களின் அரசு வேலைவாய்ப்பை குறைத்தது.

சிப்பாய்களின் பிரச்சனைகள்

  • ஐரோப்பிய சிப்பாய்கள் போன்று இந்திய சிப்பாய்கள் சமமாக நடத்தப்படவில்லை.
  • இந்தியர்கள் ஐரோப்பியர்கள் போன்று உயர் பதவிகளில் அமர்த்தப்படவில்லை.
  • இந்தியர்கள் அதிகபட்சமாக சுபேதார் பதவி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
  • இராணுவத்தில் சாதிய மற்றும் மத அடையாளங்கள் மீது விதிக்கப்பட்ட தடைகள் மதத்திற்கு எதிரானது என சிப்பாய்கள் நினைத்தனர்.
  • இந்திய சுபேதார்களின் வருமானம் ஐரோப்பிய சிப்பாய்களின் வருமானத்தைவிட குறைவாக இருந்தது.
  • இந்தியர்கள் சிந்து மற்றும் பஞ்சாப் பகுதிகளில் சேவை செய்யும் பொழுது அவர்களுக்கு அளிக்கப்பட்ட பேட்டா என்னும் சேவை வருவாய் நிறுத்தப்பட்டது.
  • பெரும்பாலான சிப்பாய்கள் அயோத்தியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அயோத்தியின் பிரிட்டீஸ் இணைப்பை எதிர்த்தனர்.
  • 1856ல் கானிங் பிரபுவால் கொண்டுவரப்பட்ட பொதுச் சேவை சட்டம் வங்கத்தை சேர்ந்தவர்களை கடல் கடந்து வேலை செய்ய வற்புறுத்தியது.
  • பிரிட்டீசாரின் பொருளாதாரக் கொள்கை சாதி, மதம் கடந்து அனைவரையும் பாதித்தது. இது இந்தியச் சிப்பாய்களையும் பாதித்தது.
  • 1857 கலகத்திற்கு முன்பே 1804 ல் வங்கத்திலும் 1806ல் வேலூரிலும் 1825ல் பாரக்பூரிலும் கலகங்கள் ஏற்பட்டன.
  • 1806 வேலூர் கலகம் 1857 கலகத்தின் முன்னோடி என அழைக்கப்படுகிறது.

உடனடிக் காரணங்கள்

  • புதிய என்பீல்ட் துப்பாக்கியின் அறிமுகமே உடனடிக் காரணமாகும். துப்பாக்கியின் தோட்டா குப்பியின் மேல் உறையானது பசு மற்றும் பன்றியின் கொழுப்பால் ஆனது என வதந்தி பரவியது.
  • இதன் விளைவாக கலகம் தொடங்கியது.
  • பசு இந்துக்களுக்கு புனிதமானது என்பதாலும் பன்றி இஸ்லாமியர்களுக்கு விலக்கப்பட்டது என்பதாலும் இத்துப்பாக்கியை பயன்படுத்த மறுத்தனர். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!