இரட்சணிய யாத்திரிகம்

இரட்சணிய யாத்திரிகம் – எச்.ஏ. கிருட்டிணனார்

அன்பு, ஆர்வம், நெகிழ்ச்சி, தொண்டில் மகிழ்ச்சி என்பன மனிதத்தின் இயல்புகள்.

இயேசுவின் வாழ்க்கை வரலாறு

பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (Pilgrims Progress)

ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய நூல் பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (Pilgrims Progress),

இரட்சணிய யாத்திரிகம்

  • இரட்சணிய யாத்திரிகம் பில்கிரிமஸ் புரோகிரஸ் (Pilgrims Progress) நூலின் தழுவலாக படைக்கப்பட்டது.
  • இரட்சணிய யாத்திரிகம் 3788 பாடல்களைக் கொண்ட ஒரு பெரும் உருவகக் காப்பியம்
  • இரட்சணிய யாத்திரிகம் 5 பருவங்கள் கொண்டது. அவை, ஆதி பருவம் ,குமார பருவம், நிதான பருவம்,ஆரணிய பருவம், இரட்சணிய பருவம்.
  • இசயசுவின் இறுதிக்கால நிகழ்ச்சிகள் குமார பருவத்தி உள்ள இரட்சணிய சரிதை படலத்தில் இடம்பெற்றுள்ளன.
  • திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த ‘நற்போதகம்’ எனும் ஆன்மீக மாத இதழில் 13 ஆண்டுகள் தொடராக இரட்சணிய யாத்திரிகம் வெளிவந்தது.
  • இரட்சணிய யாத்திரிகம் முதல் பதிப்பு மே மாத 1884ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
  • பொறுத்தாரை இவ்வுலகம் பொன் போல் போற்றும் என்பதே இரட்சணிய யாத்திரிகத்தின் கருத்து

எச்.ஏ. கிருட்டிணனார்

  • இரட்சணிய யாத்திரிகம் ஆசிரியர் எச்.ஏ. கிருட்டிணனார்.
  • போற்றித் திருஅகவல் இரட்சணிய மனோகரம் முதலிய நூல்களையும் எச்.ஏ. கிருட்டினனார் இயற்றியுள்ளார்.
  • கிறித்துவக் கம்பர் என்று எச்.ஏ. கிருட்டினனாரை போற்றுவர்.

பாடலின் முக்கிய வரிகள்

  • பாசம் என உன்னலிர் பிணித்தமை பகைத்த நீசமனு மக்களை நினைந்து உருகும் அன்பின் நேசம்
  • எனும் வல்லியதை நீக்க வசம் இன்றி ஈசன் மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின் -1421
  • என்கொல் மேதினி கீண்டு வெடித்திலது என்பார்! என்கொல் வானம் இடிந்து விழுந்திலது என்பார்|
  • என்கொல் வாரிதி நீர் சுவறாததும் என்பார்! என்கொலோ முடிவு இத்துணை தாழ்த்ததும் என்பார்! -1540

பாடலில் வரும் குறிப்புகள்

  • ஆளுநர் -பிலாத்து (யூதர்)
  • கொடியோர் ஒன்று கூடிக் கூறிய இகழ்ச்சி மொழி எனும் கொடிய தீக்கொள்ளியானது இறைமகன் இதயத்தில் அழுந்தியது
  • இறைமகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டு போந்திய பிலாத்து என்னும் ஆளுநர்.
  • வற்றிய சிறிய கிணறு தனக்குள் கடலை அடக்கிக்கொள்ள முடியுமா? முடியாது
  • வெள்ளாடையைக் கழற்றிவிட்டு முருக்க மலர் போன்று சிவந்த ஓர் அங்கியை அவருக்குப் போர்த்தினர் கூர்மையான முள் செடியினால் பின்னப்பட்ட ஒரு முடியை தலையில் வைத்து இரத்தம் பிறிட்டு ஒழுகுமளவு அழுத்தினர்.
  • கையிலிருந்த கோலினைப் பிடுங்கி எடுத்துக் கொண்டனர்.
  • மக்கள் ‘இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் இவ்வுலகம் பிளந்து வெடிக்கவில்லையே! இது என்னே!! என்பர்.
  • வானம் இடிந்து விழவில்லையே! இது என்னே!’ என்பர்: ‘கடல் நீர் வற்றிப் போகவில்லையே! இது என்னே!’ என்பர்.
  • பொல்லாத யூதர்களும் போர்ச் சேவகர் கூட்டமும் எல்லாம் வல்ல இறைமகனை இகழ்ந்து பேசி புறக்கணித்தது.

இரட்சணிய யாத்திரிகம் எச்.ஏ.கிருட்டிணனார்

இயேசுவின் வாழ்க்கை வரலாறு

இயேசு

நிறைய அன்பு. குறையாத ஆர்வம், தொடரும் நெகிழ்ச்சி தொண்டில் மகிழ்ச்சி என்பன மனிதத்தின் இயல்புகள்.

இம்மனிதமே அனைத்துச் சமயங்களின் அடிப்படைக் கொள்கை.

இக்கொள்கையைப் பேச்சாலும் வசையாலும் வாழ்வில் வதை பல பட்டு வெளிப்படுத்தியவர். இயேசு பெருமானார்.

இறை மகனின் எளிய நிலை

  1. பாசம் என உன்னலிர் பிணித்தமை பகைத்த நீசமனு மக்களை நினைந்து உருகும் அன்பின் நேசம் எனும் வல்லியதை நீக்க வசம் இன்றி ஈசன் மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின் -1421

பா வகை: அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

  1. பாதகர் குழுமிச் சொற்ற பழிப்புரை என்னும் கொள்ளி ஏதமில் கருணைப் பெம்மான இருதயத்து ஊன்ற ஊன்ற வேதனை உழந்து சிந்தை வெந்து புண்பட்டார் அல்லால் நோதகச் சினந் மாற்ற நுவன்றிலர் கரும் நோக்கி *-1448

ஆளுநர் முன்  நிறுத்துதல்

3 எண்ண மிட்டவர் பொந்திய பிலாத்தேனும் இறைமுன் அண்ணலைத் தளி நிறுவம், ஆக்கினைத் தீர்ப்பப் பண்ணவும் என நிண்ணயம் பண்ணினர் பலககொ எடு ஒண்ணுமோ வறுங் கூவலுக்கு உத்தியை ஓடுக்க! -1464

ஆளுநர் விதித்த கொலைத்தண்டனையை நிறைவேற்ற இழுத்துச் சென்று துன்புறுத்துதல்

4 மூன்னுடை களைந்து ஒரு மு க்கு அலர்ந்தெனச் செந்நிற அங்கி மேல் திகழர் சேர்த்தினர் கொல்நுனை அழுந்தி வெம் குருதி பீறிடப் பின்னிய முடி சிரத்துப் பெய்தனார்

  1. கைதுறுங் கோலினைக் கவர்ந்து கண்டகர் வெய்துறத் தலைமிசை அடித்து வேதனை செய்தனர். உமிழ்ந்தனர் திருமுகத்தினே வைதனர். பழித்தனர். மறங்கொள் நீசரே – 1526

மக்கள் புலம்பல்

6.என்கொல் மேதினி கீண்டு வெடித்திலது என்பார்! என்கொல் வானம் இடிந்து விழுந்திலது என்பார்!

என்கொல் வாரிதி நீர் சுவறாததும் என்பார்! என்கொலோ முடிவு இத்துணை தாழ்த்ததும் என்பார்! -1540

பொல்லாங்கு பொறுத்தல்

7.பொல்லாத யூதர்களும் போர்ச்சேவ கர்குழுவும் வல்லானை எள்ளிப் புறக்கணித்து வாய்மதமாய்ச்

சொல்லாத நிந்தை மொழி சொல்லித் துணிந்தியற்றும் பொல்லாங்கை யெல்லாம் நம் ஈசன் பொறுத்திருந்தார் -1564

சொல்லும் பொருளும்

  • உன்னவிர் – எண்ணாதீர்கள்
  • நீச – இழிந்த
  • வல்லியதை – உறுதியை
  • பாதகர் – கொடியவர்
  • பழிப்புரை – இகழ்ச்சியுரை
  • ஊன்ற -அழுந்த
  • நுவன்றிலர் – கூறவில்லை
  • நிண்ணயம் – உறுதி
  • கூவல் – கிணறு
  • களைந்து – கழற்றி
  • சேர்த்தினர் -உடுத்தினர்
  • கைதுறும் – கையில் கொடுத்திருந்த
  • வெய்துற – வலிமை மிக
  • மேதினி – உலகம்
  • வாரிதி – கடல்
  • நிந்தை – பழி
  • பிணித்தமை – கட்டியம்
  • நேசம் – அன்பு
  • ஓர்மின் – ஆராய்ந்து பாருங்கள்
  • குழுமி – ஒன்றுகூடி
  • ஏதமில் – குற்றமில்லாத
  • மாற்றம் – சொல்
  • ஆக்கினை – தண்டனை
  • ஒண்ணுமோ – முடியுமோ
  • உததி – கடல்
  • திகழ – விளங்க
  • சிரத்து – தலையில்
  • கண்டகர் – கொடியவர்கள்
  • வைதனர் – திட்டினர்
  • கீண்டு – பிளந்து
  • வல்லானை – வலிமை வாய்ந்தவரை
  • பொல்லாங்கு – கெடுதல், தீமை

பாடலின் பொருள்

  • இறை மகன் தன்னைப் பிறர் கயிற்றால் கட்டும் அதற்கு உடன்பட்டு நின்றார். அச்செயலானது இயல்பாக மனிதர்களிடம் காணப்படுகிற சாதாரண அன்பு செயல் என்று கருத வேண்டியதில்லை.
  • தம் மீது பகை கொண்டு தனக்கு இழிவான செயல்களைச் செய்த இம்மனிதர்கள் தாங்கள் வாழும் காலம் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களோ என்று எண்ணி அவர்களுக்காக இரக்கப்படுகிற தன்மையே காரணம்
  • அந்த அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல் தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுட நின்றார் இதை நீங்கள் எண்ணிப் பாருங்கள்.
  • கொடியோர் ஒன்று கூடிக் கூறிய இகழ்ச்சி மொழி எனும் கொடிய தீக்கொள்ளியானது மாசில்லாத அருள் நிறைந்த இறைமகன் இதயத்தில் அழுந்தியது
  • அவர் மிக வேதனையடைந்து மனம் வெந்து புண்பட்டாரே அல்லாமல் தம்மைத் துன்புறுத்துகிறவர்கள் மீது சினந்து வருந்தத்தக்க ஒரு மறுசொல்லும் கூறாமல் நின்றார்.
  • தாம் கருதி வந்த வேலை நிறைவேறுவதற்காக அவர் அமைதி காத்தார்.
  • பெருந்தகையரான இறைமகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டு போந்திய பிலாத்து என்னும் ஆளுநரின் முன் தனியாகக் கொண்டுபோய் நிறுத்தினர்.
  • அவருக்குத் தண்டனை பெற்றுத் தரவும் உறுதியாக இருந்தனர். வற்றிய சிறிய கிணறு தனக்குள் கடலை அடக்கிக்கொள்ள முடியுமா? முடியாது.
  • இறைமகனை இழுத்துச் சென்ற அக்கொடியவர்கள். அவர் அணிந்திருந்த வெள்ளாடையைக் கழற்றிவிட்டு, முருக்க மலர் போன்று சிவந்த ஓர் அங்கியை அவருக்குப் போர்த்தினர்.
  • துன்பம் தரும் கூர்மையான முள் செடியினால் பின்னப்பட்ட ஒரு முடியை அவருடைய தலையில் வைத்து இரத்தம் பிறிட்டு ஒழுகுமளவு அழுத்தினர்.
  • கொடுமணம் படைத்த அந்த முரடர்கள், இறை மகனுடைய கையிலிருந்த கோலினைப் பிடுங்கி எடுத்துக் கொண்டனர்.
  • முள்முடிசூட்டப்பட்ட அவர் தலையின் மேல் வன்மையாக அடித்து வேதனை செய்தனர்
  • மேலும் அவருடைய திருமுகத்தில் எச்சிலை உமிழ்ந்து, திட்டிப் பழித்துக் கேலி செய்தனர்
  • மக்கள் “இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் இவ்வுலகம் பிளந்து வெடிக்கவில்லையே! இது என்னே!” என்பர்
  • ‘வானம் இடிந்து விழவில்லையே! இது என்னே!’ என்பர்; ‘கடல் நீர் வற்றிப் போகவில்லையே! இது என்னே!’ என்பர்.
  • மேலும், ‘இந்த உலகம் இன்னும் அழியாமல் தாமதிப்பதும் ஏனோ’ என்பர்.
  • பொல்லாத யூதர்களும் போர்ச் சேவகர் கூட்டமும் எல்லாம் வல்ல இறைமகளை இகழ்ந்து பேசியும் புறக்கணித்தும் வாயில் வந்தபடி சொல்லத் தகாத பழிமொழிகளைக் கூறினர்.
  • அவர்கள் செய்த பொல்லாங்குகளை எல்லாம் நம் இறைமகன். பொறுத்திருந்தார்.

முந்தைய ஆண்டு வினாக்கள்

இரட்சணிய யாத்திரிகம் என்பதன் பொருள் (2 Times Asked)
(A) இறைவனின் பயணம்
(B) இறைவனை நோக்கிச் செல்லும் பயணம்
(C) அடியார்களின் பயணம்
(D) கிறிஸ்துவத்தை நோக்கிய பயணம்

———————————————————————————

TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

Org Code : owvff

Desktop / Laptop
http://web.classplusapp.com 

Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff

iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563

———————————————————————————

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!