Contents show
ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன்
கவிதை
“யாழ் நகரில் என் பையன் கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை தள்ளாத வயதினிலே தமிழ்நாட்டில் என் அம்மா
சுற்றம் பிராங்க்பர்ட்டில் ஒரு சகோதரியோ ப்ரான்ஸ் நாட்டில்
நானோ வழிதவறி அலாஸ்கா வந்துவிட்ட ஒட்டகம் போல் ஓஸ்லோவில்”
-ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன்
புலம்பெயர் இலக்கியம்
- சங்க இலக்கியத்தில் தலைவன். தலைவி பிரிந்து போவதை பொருள்வயின் பிரிவு என்று சொல்வார்கள்.
- பொருள் தேடப் போவதால் புலம் பெயர நேரிடுகிறது.
- சினம் கொண்ட அரசனின் கொடுமை தாங்க முடியாமல் துயருற்று, சொந்த ஊரைவிட்டு
- ஓடியவர்களின் கதையை நற்றிணை 153 ஆவது பாடலில் தனிமகனார் கூறிகிறார்.
- வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி, வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ்’ என்கிறார் நற்றிணை 153 ஆவது பாடலில் தனிமகனார்.
- தமிழ் அகதிகள் கனடாவுக்குக் குடிபெயரத் தொடங்கியது 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தான்.
உலக அரங்கில் தமிழ்
- உலகம் முழுவதும் தமிழர்கள் எட்டுக் கோடிப் பேர் இருக்கிறார்கள்.
- நியூசிலாந்திலிருந்து அலாஸ்கா வரை பரந்து போய்ப் புலம்பெயர் தமிழர்கள் பத்து லட்சம் பேர் வாழ்கிறார்கள்.
- தமிழர்கள் கனடாவில் மட்டும் மூன்று லட்சம் என்று கணக்கெடுப்புச் சொல்கிறது.
- ஒரு காலத்தில் பிரித்தானிய அரசைச் சூரியன் மறையாத அரசு என்று அழைத்தார்கள். இப்போதோ சூரியன் மறையாத தமிழ்ப்புலம் என்று சொல்கிறார்கள்.
- 2012ஆம் ஆண்டு முதல் எல்லா வருடங்களிலும் ஜனவரி 14 ஆம் நாள், தமிழர் பாரம்பரிய நாள் எனப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.
- முதல் முறையாக ஒரு புதிய பாதை ஒன்றுக்கு வன்னி வீதி என்று பெயர் உலகத்தில் இரண்டாவது பெரிய தேசமான கனடாவில் சூட்டப்பட்டிருக்கிறது.
- வன்னி வீதி, தமிழர்களுக்குச் சொந்தமான வீதி
- நூலகத்தை எரித்ததுப்போல வன்னி வீதியை ஒன்றும் சிதைக்க முடியாது. இதை அழிக்க முடியாது.
பனியும் பனி சார்ந்த நிலமும்
- புலம்பெயர்ந்த பத்து லட்சம் மக்கள் சென்றடைந்தது பனி பிரதேசத்திற்கு தான்.
- சங்க இலக்கியத்தின எட்டுத்தொகையில் ஒன்று ஐங்குறுநூறு.
- ஐவகை நிலத்திற்கும் ஒவ்வொரு நூறுப் பாடலாக ஐநூறு பாடல்கள் கொண்டது ஐங்குறுநூறு.
- எட்டுத்தொகை நூலில் பனியும் பனி சார்ந்த நிலத்துக்கும் பாடல்கள் இல்லை.
- ஈழத்திலிருந்து புலம்பெயந்தவர்களின் ஆறாம் திணை பனியும் பனி சார்ந்த நிலமும்.
ஆறுமணிக்குருவி
- ஈழத்திலிருந்து புலம்பெயந்தவர்கள் இந்த எல்லையே கிடையாது. ஆறுமணிக்குருவி போல அவர்களுக்கு
- முத்துலிங்கத்தின் சொந்த கிராமம் கொக்குவில், அங்கே காகம் இருந்தது. ஆறுமணிக்குருவியும் இருந்தது.
- சரியாக காலை ஆறு மணிக்கு ஆறுமணிக்குருவி சத்தமிடும்.
- காகத்துக்குப் பறக்கும் எல்லை (இரண்டு) 2 மைல் தூரம்.
- ஆறுமணிக்குருவிக்கு எல்லையே கிடையாது. இமயமலைக்குப் பறந்துப் போய் மீண்டும் திரும்பும்.