- பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் உடுமலை நாராயண கவி.
- தமிழ்த திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர் உடுமலை
- நாராயண கவி. தனது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பியவர் உடுமலை நாராயண கவி.
- நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர் உடுமலை நாராயண கவி.
Contents show
ஒன்றல்ல இரண்டல்ல – உடுமலை நாராயண கவி
- தமிழ்நாட்டின் வளம், தமிழ்மொழியின் இலக்கிய, இலக்கண வளம், தமிழக மன்னர்கள், வள்ளல்களின் கொடைத்திறன் பற்றி கூறும் கவிதை
கவிதை
ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில் தென்றல் தரும் இனிய தேன் மணமும் கமழும் செங்கனியும் பொன் கதிரும் தந்துதவும்
நன்செய் வளம்
பகைவென்ற திறம்பாடும் பரணி வகை செழும் பரிபாடல் கலம்பகங்கள் எட்டுத்தொகை
வான் புகழ்கொண்ட குறளோடு அகம்புறமும் செம் பொருள் கண்ட தமிழ்ச்சங்க இலக்கியப்
பெருஞ்செல்வம்
முல்லைக்குத் தேர்கொடுத்தான் வேள் பாரி ***
வான் முகிலினும் புகழ்படைத்த உபகாரி **
கவிச்சொல்லுக்குத் தலைகொடுத்தான் அருள் மீறி * **
இந்த வள்ளலாம் குமணன் போல் வாழ்ந்தவர் வரலாறு ஒன்றல்ல இரண்டல்ல தம்பி…
– உடுமலை நாராயண கவி
சொல்லும் பொருளும்
- ஒப்புமை – இணை
- முகில் – மேகம்
- அற்புதம் – விந்தை
- உபகாரி – வள்ளல்
முந்தைய ஆண்டு வினாக்கள்
‘பகுத்தறிவுக் கவிராயர்’ எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர் (3)
(A) பெரியார்
(B) அண்ணா
(C) பாரதியார்
(D) உடுமலை நாராயண கவி