உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology) என்றால் என்ன? அதன் பயன்பாடுகளை விவரி

உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology)

  • உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology) என்பது நுண்ணுயிர்கள் மற்றும் நன்மை பயக்கும் மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டு வேளாண்மை, மருத்துவம், சுற்றுச்சூழல் மற்றும் தொழிற்துறைகளில் பயன்படுத்தப்படும் நுட்பமாகும்.
  • அறிவியல் அடிப்படையில் உயிரினங்களில் மேற்கொள்ளப்படும் மாற்ற முயற்சிகளை உயிர் தொழில்நுட்பம் என்று கூறலாம்.

பயன்பாடுகள்:

மருத்துவதுறையில் பயன்பாடுகள்:

  • உயிரிதொழில்நுட்ப தொழிற்சாலை மூலம் தடுப்பூசி மருந்து (Vaccine). நொதிகள், உயிர் எதிர்ப் பொருட்கள் பால் சார்ந்த தயாரிப்புகள், பானங்கள் (Beverages) போன்றவற்றை உற்பத்தி செய்யப்படுகிறது.
  • உயிர்தொழில்நுட்பத்தின் மூலம் உயிரி சில்லுகளை (biochips) அடிப்படையாக கொண்ட உயிரிய கணினி உருவாக்குதல் ஓர் சாதனையாகும்.
  • மனிதர்களில் இன்சுலின் குறைப்பாட்டு நோயை சரி செய்யவும் ஈ.கோலையை பயன்படுத்தி மனித இன்சுலின் மற்றும் இரத்த பரதத்தை உருவாக்க மருத்தவ பயன்படுகின்றன.
  • உயிர் தொழில்நுட்பவியல் துறையில், மரபணு சிகிச்சை, மறுசேர்க்கை டி.என்.ஏ. தொழில்நுட்பம், பாலிமரேஸ் சங்கிலி வினை போன்ற தொழில்நுட்பங்களை மரபணு பொறியியல் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • அவை மரபணுக்களையும் டி.என்.ஏ மூலக்கூறுகளையும் பயன்படுத்தி நோய்களை கண்டறிந்து பாதிப்படைந்த செல்களை நீக்குகிறது.

சுற்று சூழல்

  • சூழல்சார் உயிரிதொழில்நுட்பத்திற்காக, உயிரித்திரள் ஆற்றல் (Biomass energy), உயிரி எரிபொருள், உயிரிவழி திருத்தம், தாவர வழிதிருத்தம் போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன.

வேளாண்மைத்துறையில் பயன்பாடுகள்:

  • உணவுத் தொழிற்சாலையில் ஸ்பைருலினா (Spirulina)-வைப் பயன்படுத்தி தனி செல் புரதம் பெறப்படுகிறது.
  • இரண்டாம் நிலை வளர்சிதைப் பொருட்கள், உயிரி உரங்கள், உயிரி தீங்குயிரிக் கொல்லிகள், நொதிகள் போன்றவை உற்பத்தி செய்யப்படுகிறது..
  • மரபணு மாற்றத் தாவர வகைகளைப் பெறுவது போன்ற அதிக மதிப்புள்ள விளைவுகளைப் பெற்றுள்ளது.
  • எடுத்துக்காட்டுகளாக மரபணு மாற்றமடைந்த பருத்தி (Bt – பருத்தி), அரிசி, தக்காளி, புகையிலை, காலிஃபிளவர், உருளைக்கிழங்கு, வாழை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
  • வேளாண் பயிர்களில் களைக்கொல்லி எதிர்ப்புத்தன்மை, இறுக்க எதிர்ப்புத் தன்மை (strees resistant), நோய் எதிர்ப்புத்தன்மை போன்றவற்றைக் கொண்ட வகைகளை உருவாக்குவது உயிரிதொழில்நுட்பத்தின் மகத்தான விளைவு ஆகும்.
  • உயிர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக மகசூல் தரும் பயிர்கள்,
  • திசு வளர்ப்பு – தயாரிக்கப்பட்ட ஊடகத்தில் விலங்கு/தாவர திசுக்களை வளர்க்க பயன்படும் அறிவியல்.
  • உயிரி உரங்கள் – நுண் உயிரினங்கள் வளிமண்டலத்திலிருந்து நேரடியாக வாயு நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸை உறிஞ்சி தாவரங்களுக்கு வழங்குகின்றன.
Summary
Article Name
உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology) & பயன்பாடுகள்
Description
உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology) என்பது நுண்ணுயிர்கள் மற்றும் நன்மை பயக்கும் மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டு வேளாண்மை, மருத்துவம், சுற்றுச்சூழல் மற்றும் தொழிற்துறைகளில் பயன்படுத்தப்படும் நுட்பமாகும்.
Author
Publisher Name
Exam Machine

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!