உலோக அரிமானத்தைத் தடுக்கும் முறைகளை வரிசைப்படுத்துக.

அரிமானத்தைத் தடுக்கும் முறைகள்

உலோகக் கலவையாக்கல்

  • உலோகங்களை ஒன்றோடொன்று கலந்து கலவையாக்கல் மூலம், அரிமானத்தை தடுக்கலாம். எ.கா துருப்பிடிக்காத இரும்பு.

புறப்பரப்பை பூசுதல்

  • உலோகத்தின் மீது பாதுகாப்புக் கலவை பூசுதல் அரிமானத்தை தடுக்கும். இதன் வகைகளாவன

நாகமுலாம்பூசுதல்:

  • இரும்பின் மீது துத்தநாக மின் முலாம் பூசுவதற்கு நாகமுலாம் பூசுதல் என்று பெயர்.

மின்முலாம் பூசுதல்:

  • ஒரு உலோகத்தை மற்றொரு உலோகத்தின் மேல், மினசாரத்தின் மூலம் பூசுதல் மின்முலாம் பூசுதல் ஆகும்.

ஆனோட்டாக்கல்:

  • உலோகத்தின் புறப்பரப்பை, மின் வேதிவினைகளின் மூலம், அரிமான எதிர்புள்ளதாய் மாற்றும் நிகழ்வு ஆனோடாக்கல் ஆகும்.
  • அலுமினியம் இந்த முறைக்கு பயன்படுகிறது.

கேத்தோடு பாதுகாப்பு:

  • எளிதில் அரிமானம் அடையும் உலோகத்தை ஆனோடாகவும், பாதுகாக்க வேண்டிய உலோகத்தைக் கேத்தோடாகவும் கொண்டு, மின் வேதி வினைக்கு உட்படுத்தும் நிகழ்வு கேத்தோடு பாதுகாத்தல் ஆகும்.
  • இவ்வினையில் எளிதில் அரிபடும் உலோகம் தியாக உலோகம் எனப்படும்.

Also Read

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!