மேயர் மற்றும் துணை மேயர்
- மேயர் மாநகராட்சியின் அரசியல் ரீதியிலான தலைவர் ஆவார்.
- அவர் நகரத்தின் முதற்குடிமகன் மற்றும் தந்தை என அழைக்கப்படுகின்றார்.
- மேயரை மக்களே நேரடியாகத் தேர்நதெடுக்கின்றனர். கவுன்சிலர்கள் தமக்குள்ளிலிருந்து ஒருவரை துணை மேயராக தேர்ந்தெடுக்கின்றனர்
பதவிக்காலம்
- ஐந்து ஆண்டுகளாகும்.
நீக்கம்
- மாநகராட்சியின் மேயர் மாநகராட்சி சட்டதிட்டங்களுக்கு முரணாக செயல்பட நேரிட்டால், மாநகராட்சியின் மொத்த உறுப்பினர்களில் ஐந்தில் மூன்று பகுதியினர் எழுத்துமூலமாக மாநகராட்சி ஆணையருக்குத் தெரிவித்து, அதன் மீது ஐந்தில் நான்கு பகுதியினர் மேயருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்படவேண்டும்.
- மேற்படி தீர்மானத்தை அரசு பரிசீலித்து மேயரின்விளக்கத்தினைப் பெற வேண்டும்.
- மேயரின் விளக்கம் அரசுக்கு ஏற்புடையதாக இல்லை எனில், அரசு மேயரை நீக்குவதற்கு ஆணையிடலாம். இதில் அரசின் முடிவே இறுதியானது.
- தகம் செய்யலாம் அல்லாதார். தீய நடத்தையின் கோ தலைமை தாங்கி, மேயர் ஒரு விழாத் (அலங்கார) தலைவராகத் திகழ்கின்றார்.
அவரின் பங்கு
- விழாக்களில் அவர் மாநகரின் சார்பில் பங்கேற்கிறார்.
- மன்றக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கி, ஒழுங்கையும், அமைதியையும் பராமரிக்கின்றார்.
- தீய நடத்தையின் பொருட்டு அவர் உறுப்பினர்களை சபை நீக்கம் செய்யலாம் அல்லது வெளியேற்றலாம். மன்றத்தின் நடவடிக்கைகளிலிருந்து தடை செய்யப்படுவற்குரிய எப்பகுதியினையும் அவர் ஒதுக்கலாம் அல்லது நீக்கலாம்.
- மன்றத்தின் சிறப்புக் கூட்டங்களைக் கூட்டுவிக்க மேயர் அதிகாரம் படைத்துள்ளார்.
- மாநகரத்தின் நிர்வாகம் பற்றிய எப்பொருள் மீதும் அவர் ஆணையரிடம் இருந்து தகவலைக் கோரமுடியும். மன்றத்தின் முடிவுகள் சரிவர நிறைவேற்றப்பட்டு வருவதை அவர் கவனித்துக் கொள்கிறார்.
- எழுத்து மூலமாக மேயர், துணை மேயருக்கு தனது அதிகாரங்கள் சிலவற்றை ஒப்படைவு செய்யலாம்.
- மாநில அரசாங்கத்திற்கும் மாநகராட்சிக்கும் இடையிலான ‘தகவல் தொடர்பு அனைத்தும் மேயரின் வாயிலாக செல்ல வேண்டும்.
- எனினும், மேயர் அதை நிறுத்தி வைக்க முடியாது.
குழுக்கள்
- மாநகராட்சியின் குழுக்கள் மன்றத்தின் பல்வேறு நடவடிக்கைகளைக் கவனித்துக் கொள்வதில் முக்கியமானதோர் பங்குப்பணியை ஆற்றுகின்றன.
- மாநகராட்சியின் பணிகளின் திறமையான செயல்பாட்டிற்கு அவை துணை புரிகின்றன. இக்குழுக்களான நிலைக்குழு, பள்ளிகள் குழு, மருத்துவமனைகள் குழு, மின் விநியோகம் மற்றும் போக்குவரத்துக் குழு, மாநகர மேம்பாட்டுக் குழு, சுகாதார குழு, வரிவிதிப்பு மற்றும் நிதிகுழு, மாநகர நீர் மராமத்துக் குழு மற்றும் இன்னும்பிற. குழுக்கள் அனைத்திலும் தலையாயது நிலைக்குழுவாகும்.
- இக்குழு செயலாக்க மேற்பார்வை, நிதி மற்றும் பணியாளர் குழாம் ஆகியவற்றின் மீது தேவையான அதிகாரங்களைப் பெற்றுள்ளது.
- மாநகராட்சி ஆணையர் ஆணையர் மாநகராட்சியின் தலைமை நிருவாகி ஆவார். மாநகராட்சி மன்றத்தால் இயற்றப்படும் கொள்கைகளைச் செயல்படுத்துவது அவருடைய தலையாயப் பொறுப்பாகும்.
- ஆணையர் பெரும்பாலும் இந்திய ஆட்சித்துறை பணியாளர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவர் மாநில அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்படுகின்றார்.
ஆணையாளரின் அதிகாரங்கள்
- மாநகராட்சி சட்டத்தின்படியும் மாநகராட்சி கவுன்சில் மற்றும் நிலைக்குழுக்களின் ஆலோசனையின் படியும் அவர் செயல்படுகிறார்.
- மாநகராட்சிப் பணியாட்கள் மீது மேற்பார்வையினையும் கட்டுப்பாட்டையும் அவர் செலுத்துகின்றார்.
- நிதி நிலை அறிக்கையைத் தயாரிப்பது ஆணையரின் பொறுப்பாகும்.
- 74-வது, அரசியல் அமைப்புச் சட்டத்திற்குமுன் தேர்தல் நடத்தும் பணிகளை அவர் பெற்றிருக்கவில்லை.
- மாநகராட்சியின் நிர்வாகத்தில் அச்சாணியாக ஆணையர் திகழ்கின்றார்.
- மாநகராட்சியின் மன்றத்திலும் பல்வேறு குழுக்களின் கூட்டங்களிலும் கலந்து கொண்டு உரையாற்றும் உரிமையை அவர் பெற்றுள்ளார்.
- கவுன்சிலர்களுக்கு தேவையான தகவல்களையும் விளக்கங்களையும் அவர் வழங்குகின்றார்.
- அவர்கள் வாதங்கள் புரிவதற்கு வழித்துணையாக இருந்து மாநகராட்சியின் இன்றியமையா பங்குப் பணியினை ஆணையர் ஆற்றுகின்றார்.