எழுத்தறிவின்மை என்றால் என்ன? கல்வியறிவின்மைக்கான காரணங்கள் யாவை?

எழுத்தறிவின்மை

  • 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் வரையறைப்படி ஏதாவது ஒரு மொழியில் படிக்கவும் எழுதவும் முடியாதவர்கள் கல்வியறிவற்றவர்கள் எனப்படுகின்றனர்.
  • இந்த நிலை எழுத்தறிவின்மை நிலை எனப்படுகிறது

கல்வியறிவின்மைக்கான காரணங்கள்

  • பள்ளி மற்றும் கல்வி முறையில் குறைபாடு
  • டிஸ்லெக்ஸியா, டைசோர்த்தோகிராஃபியா போன்ற கற்றல் குறைபாடுகள்
  • மக்கள் தொகை வளர்ச்சியின் உயர் விகிதம் காரணமாக வயது வந்தோர் கல்வியறிவின் வளர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது.
  • தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை மற்றும் தொடர் வருகை திட்டங்களின் குறைபாடு.
  • கீழ்தட்டு மக்கள், சில கூடுதல் வருமானத்திற்காகவோ அல்லது வீட்டில் இளைய உடன்பிறப்புகளை கவனிப்பதற்காகவோ குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
  • வறுமையின் உச்சநிலை
  • அரசின் கல்வித்துறைக்கான நிதி குறைவாக ஒதுக்கப்படுகிறது.
  • விழிப்புணர்வு இல்லாமை மற்றும் கல்வி மேம்பாட்டு திட்டங்களை முறையற்ற முறையில் செயல்படுத்துதல்.
  • பாலினம், வருமானம், மாநிலம், சாதி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஏற்றத்தாழ்வுகள், நாட்டில் நிலவும் கல்வியறிவு விகிதங்களை வடிவமைக்கின்றன.
  • பெற்றோரின் குறைந்த கல்வியறிவு
  • பள்ளியை விட்டு இடைநிற்றல்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!