ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் (ICDP)
- குழந்தைகளுக்கு துணை ஊட்டச்சத்து, நோய்த்தடுப்பு மற்றும் ஆரம்பக்கல்வி வழங்கும் திட்டம்.
- இது 1975 இல் தொடங்கப்பட்ட அரசாங்கத்தின் முதன்மை திட்டமாகும்.
- குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கான சேவைகளின் ஒருங்கிணைந்த தொகுப்பு
- ஒன்றியத்தால் நிதியுதவி அளிக்கப்பட்டு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் செயல்படுத்தப்படும் திட்டம்.
- நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியது.
- இத்திட்டத்திற்கு அங்கன்வாடி சேவைகள் என மறுபெயரிடப்பட்டுள்ளது.
நோக்கங்கள்
- குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்துதல் (0-6 ஆண்டுகள்)
- குழந்தையின் சரியான உளவியல், உடல் மற்றும் சமூக வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தல்
- இறப்பு, நோயுற்ற தன்மை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பள்ளி இடைநிற்றலைக் குறைத்தல்.
- குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பல்வேறு துறைகளிடையே கொள்கை மற்றும் செயல்பாட்டில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல்.
- தரமான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் சார்ந்த கல்வி மூலம் தாயின் திறனை மேம்படுத்தி அதன் மூலம் குழந்தையின் உடல் நலம் மற்றும் ஊட்டசத்துத் தேவைகளை கவனிக்கச் செய்தல்.