ஒழுங்குமுறைச் சட்டம் 1773 & பிட்ஸ் இந்திய சட்டம் 1784

1857க்கு முன்பான பிரிட்டீசின் முக்கியச் சட்டங்கள்

ஒழுங்குமுறைச் சட்டம் 1773

  • கல்கத்தாவின் ஆளுநர், தலைமை ஆளுநராக மாற்றப்பட்டு சென்னை மற்றும் மும்பை மாகாணங்கள் அவரின் தலைமைக்கு கீழ் கொண்டு செல்லப்பட்டது.
  • கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் ஏற்படுத்த வழிவகுத்தது. இதன்படி 1774ல் கல்கத்தாவில் உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டு இந்தியாவின் முதல் தலைமை நீதிபதியாக சர் எலிஜா இம்பே நியமிக்கப்பட்டார்.
  • தலைமை ஆளுநருக்கு உதவி செய்ய 4 பேர் அடங்கிய நிர்வாக் குழு ஏற்படுத்தப்பட்டது. தலைமை ஆளுநருக்கு அறுதி வாக்குரிமை வழங்கப்பட்டது.
  • இயக்குநர் குழுவின் பதவிக்காலம் 1 ஆண்டிலிருந்து 4 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டது.
  • போர் மற்றும் அமைதி சார்ந்த விசயங்களில் தலைமை ஆளுநரும் அவர் குழுவும் உச்ச அதிகாரத்தை கொண்டிருந்தனர்.
  • கம்பெனியின் ஊழியர்கள் தலைமை நீதிபதி மற்றும் தலைமை ஆளுநர் பரிசுகள் பெறுவது தடைசெய்யப்பட்டது. 

சட்டத்தின் சாதகங்கள்

  • கம்பெனியின் நடவடிக்கைகள் முதன் முறையாக பிரிட்டீஸ் பாராளுமன்றத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
  • இந்திய மக்களின் நன்மையின் மேல் பாராளுமன்றம் அக்கறை கொண்டிருப்பதாக இச்சட்டம் காட்டியது.
  • கம்பெனியின் தன்னிச்சை நடவடிக்கைகளுக்கு முடிவுகட்டியது.
  • இந்தியாவை ஆட்சி செய்வதற்கான கட்டமைப்பை ஏற்படுத்தியது.

பாதகங்கள்

  • இச்சட்டம் உச்ச நீதிமன்றம், தலைமை ஆளுநர் மற்றும் நிர்வாக குழுவின் அதிகாரங்களை சரியாக வரையறுக்கவில்லை.
  • இதன் விளைவாக சென்னை மற்றும் மும்பை மாகாணங்கள் தலைமை ஆளுநரின் அதிகாரத்திற்கு கட்டுப்படவில்லை.
  • இச்சட்டம் நிர்வாக குழுவை தலைமை ஆளுநரைவிட அதிகாரமிக்கதாக மாற்றியது.
  • இச்சட்டத்தின் குறைகளை நீக்க தீர்வுச் சட்டம் 1781 மற்றும் பிட்ஸ் இந்தியச் சட்டம் 1784 ம் கொண்டுவரப்பட்டது.

பிட்ஸ் இந்திய சட்டம் 1784

  • இச்சட்டம் இங்கிலாந்து பிரதமர் வில்லியம் பிட் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • தலைமை ஆளுநர் அரசரால் நியமிக்கப்படுவார்.
  • தலைமை ஆளுநர் குழுவின் உறுப்பினர் எண்ணிக்கை 4லிருந்து 3ஆக குறைந்தது.
  • கட்டுப்பாட்டு குழு உருவாக்கப்பட்டு கம்பெனியின் அரசியல் செயல்பாடுகளை
  • கட்டுப்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது.
  • தலைமை ஆளுநர் பிரிட்டீஸ் படையின் தலைமை தளபதியாகவும் சென்னை மற்றும் மும்பை மாகாணத்தின் அனைதது நிர்வாகத்தின் தலைமையாகவும் மாற்றப்பட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!