கல்யாண்ஜி (வண்னதாசன்)
- கல்யாண்ஜியின் இயற்பெயர் கல்யாண சுந்தரம்.
- வண்னதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்திலும் பங்களிப்புச் செய்துவருகிறார் கல்யாண்ஜி
- கல்யாண்ஜி எழுதிய ஒரு சிறு இசை என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக 2016ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
- கல்யாண்ஜியின் பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு, ‘சில இறகுகள் சில பறவைகள்’ என்ற பெயரில் வெளியானது.
- கட்டுரை, புதினம், சிறுகதை, கவிதை எனத் தொடர்ந்து எழுதி வருபவர் கல்யாண்ஜி.
கல்யாண்ஜி எழுதியுள்ள சிறுகதை தொகுப்புகள்
- ஒளியிலே தெரிவது
- தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
- கலைக்க முடியாத ஒப்பனைகள்
- உயரப் பறத்தல்
கல்யாண்ஜி எழுதியுள்ள கவிதைகள்
- அந்நியமற்ற நதி
- ஆதி
- முன்பின்
- மணல் உள்ள ஆறு
- புலரி
கல்யாண்ஜி எழுதியுள்ள கட்டுரைத் தொகுப்பு
- அகமும் புறமும்
கல்யாண்ஜி எழுதியுள்ள கடிதங்கள் தொகுப்பு
- சில இறகுகள் சில பறவைகள்
அக்கறை – கல்யாண்ஜி
வசன கவிதையில் இருந்து புதுக்கவிதை
- உரைநடையில் கவிதை எழுதுவதைப் பாரதி தம் வசன கவிதைகளின் வழியாகத் தொடங்கினார்.
- வசன கவிதைகளின் தொடர்ச்சியான கவிதைகளே புதுக்கவிதைகள்.
- அவ்வகையில் புதுக்கவிதையின் வரலாறு நூறு ஆண்டுகளை எட்டுகிறது எனலாம்.
- புதுக்கவிதைகள் மனித நேயத்தை வலியுறுத்துவனவாக இருக்கின்றன.
- பரபரப்பான இந்நூற்றாண்டு வாழ்வின் நெருக்கடியில் மனிதம் நசுங்கிவிடக்கூடாது என்பதைப் புதுக்கவிதைகளின் வாயிலாகக் கவிஞர் பலர் பல படிநிலைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
- கல்யாண்ஜி கவிதைகளிலும் மனிதம் பரவலாக வலியுறுத்தப்படுகிறது.
கவிதை
சைக்கிளில் வந்த தக்காளிக் கூடை சரிந்து முக்கால் சிவப்பில் உருண்டது அனைத்துத் திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே வேலை இருப்பதாய்க் கடந்தும் நடந்தும் அனைவரும் போயினர் **
பழங்களை விடவும் நசுங்கிப் போனது அடுத்த மனிதர்கள் மீதான அக்கறை ***
-கல்யாண்ஜி
இரா. மீனாட்சி
- இரா. மீனாட்சி, 1970களில் எழுதத் தொடங்கியவர்.
- இரா. மீனாட்சி பாண்டிச்சேரி ஆரோவில்லில் வாழ்ந்து வருகிறார்.
- ஆசிரியப்பணி மற்றும் கிராம மேம்பாட்டில் ஈடுபாடு கொண்டவர் இரா. மீனாட்சி.
இரா. மீனாட்சி எழுதியுள்ள கவிதைகள்
- வாசனைப் புல்
- கொடி விளக்கு
- சுடு பூக்கள்
- நெருஞ்சி
- உதய நகரிலிருந்து
- தீபாவளிப் பகல்
- மறு பயணம்
பிள்ளைக்கூடம் – இரா. மீனாட்சி
- ‘கோடி விளக்கு’ என்னும் நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது
கவிதை
சொந்த மொழி கற்பிக்கும் இந்தப் பள்ளிக்கூடம் மிகவும் பிடித்துப் போய்விட்டது
இங்கே, ஐம்பதாண்டு (50 ஆண்டு) வேம்பு கோடையில் கொட்டும் பூக்களை எண்ணச் சொல்கிறார்கள் ***
வேலி ஓணான் கருங்கல் தூணில் வந்து அமர்ந்து தியானிக்கும் நேரத்தைக் குறித்து வைக்கச் சொல்கிறார்கள் *
வெட்டவெளியில் தட்டுக்கூடையில் சர்க்கரைப் பண்டம் வைத்தவுடன் எங்கிருந்தோ வந்து சேரும் எறும்புகளின் வேகத்தை அளக்கச் சொல்லுகிறார்கள்
மழை பெய்ய ஆரம்பித்தால் வட்டரங்க நடுமேடையில் வீழ்ந்து வழியும் துளிகளின் வடிவத்தை ஓவியமாய்த் தீட்ட, செம்மண் தாளும் வண்ணக்குச்சிகளும் தருகிறார்கள் *
மேலும், காலையில் மயிலுடன் நடக்க வேண்டுமாம். மாமரக் குயிலுடன் இசைக்க வேண்டுமாம். வண்ணத்துப்பூச்சியுடன் பறந்து ஆடித்திரிய வேண்டுமாம்
மாலையில் மரங்களின் முதுகினைச் செல்லமாய் குறுஞ்செடிகளுடன் உற்சாகமாய்ப் பேச வேண்டுமாம் * வருடிவிட வேண்டுமாம்.
இந்தப் பள்ளியில் சேர்ப்பார்களா என் பெற்றோர்கள்?
தாய்மொழியிலே பயின்று யாதும் ஊரென உலகின் உறவாகவே விரும்புகிறவன் நான் ****
– (இரா. மீனாட்சி)