கிராம நிர்வாக அலுவலர்
- தமிழ்நாட்டில் வருவாய்த்துறை நிர்வாக அமைப்பின் கீழ், கீழ்நிலை நிர்வாக அமைப்பாக வருவாய் கிராம நிர்வாகம் இருக்கிறது.
- இவ்வாறு குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி இயங்குகின்ற வருவாய் கிராம நிர்வாக அமைப்பின் பொறுப்பு அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் ஆவார்.
- இந்த வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக கிராம நிர்வாக அலுவலர் இருக்கிறார்.
கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள் மற்றும் கடமைகள்
- தமிழ்நாடு அரசு வருவாய்த் துறை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கடமைகளும், பொறுப்புகளும் விதித்துள்ளது.
- கிராம கணக்குகளைப் பராமரித்தல், மற்றும் பயிர் ஆய்வு பணி பார்த்தல்
- சர்வே கற்களைப் பராமரிப்பது, காணாமல் போன கற்களைப் பற்றி அறிக்கை அனுப்புவது.
- நில வரி , கடன்கள் , அபிவிருத்தி வரி, மற்றும் அரசுக்குச் சேரவேண்டிய தொகைகளை வசூல்செய்வது.
- பிறப்பு, இறப்புகளை பதிவு செய்து , சான்று வழங்குவது, அது தொடர்பான பதிவேடுகளைப் பராமரிப்பது.
- தீ விபத்து, வெள்ளம், புயல் முதலியவற்றின் போது உடனுக்குடன் உயர் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பிக்கொண்டிருப்பது.
- கொலை, தற்கொலை, அசாதாரண மரணங்கள் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தல்.
- காலரா, பிளேக் மற்றும் கால்நடை நோய்கள், தொற்று நோய்கள் குறித்து அறிக்கை அனுப்புதல்.
- இருப்பு பாதை கண்காணிப்பிற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வது.
- கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.
- அரசுக் கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் போன்ற அரசுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்.
- புதையல் பற்றி உயர் அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தல்.
- முதியோர் ஓய்வூதியம் வழங்குவது குறித்து அறிக்கை சமர்ப்பிப்பது.
- முதியோர் ஓய்வூதிய பதிவேட்டைப் பராமரித்தல்.
- பொதுச் சொத்துக்கள் பற்றிய பதிவேட்டைப் பராமரித்தல்.
- வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற சேவை நிறுவனங்களுக்குத் தேவையான விவரங்கள் அளித்தல்.
- கிராம பணியாளர்களுடைய பணியினைக் கண்காணித்தல்.
- சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்றங்கள் நடந்த உடனே அறிக்கை அனுப்புதல், சட்டம் ஒழுங்கு பேணுதற்காக கிராம அளவில் அமைதிக் குழுவைக் கூட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல்.
- தேர்தல் பணிகள் மேற்கொள்வது.
- கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விவரங்களைச் சேகரித்து வட்ட அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்புதல்.
- பொதுச் சுகாதாரம் பராமரித்தல்.
- நில ஆக்கிரமிப்புகளைத் தடுப்பது மற்றும் உயர் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பி உடனடி நடவடிக்கை எடுத்தல்.