கீரைப்பாத்தியும் குதிரையும் (இரட்டுற மொழிதல்)

காளமேகப்புலவர்

  • காளமேகப்புலவரின் இயற்பெயர் வரதன்.
  • மேகம் மழை பொழிவது போல கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார்.
  • காளமேகப்புலவரின் தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன.

காளமேகப்புலவர் எழுதியுள்ள நூல்கள்

  • திருவானைக்கா உலா
  • சரசுவதி மாலை
  • பரபிரம்ம விளக்கம்
  • சித்திர மடல்

தனிப்பாடல் திரட்டு நூலிலிருந்து காளமேகப்புலவரின் ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

 

கீரைப்பாத்தியும் குதிரையும் (இரட்டுற மொழிதல்) –  காளமேகப்புலவர்

பாடல்

கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால் வெட்டி மறிக்கின்ற மேன்மையால்

முட்டப்போய் மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன் ஏறப் பரியாகுமே

காளமேகப்புலவர்

பாடலின் பொருள்

கீரைப்பாத்தி

  • மண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர்
  • மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர்.
  • வாய்க்காலில் மாறி மாறி நீர் பாய்ச்சுவர்.
  • நீர் கடைமடையின் இறுதி வரை சென்று மாற்றி விடத் திரும்பும்.
  • இக்காரணங்களால் கீரைப் பாத்தியும், ஏறிப்பயணம் செய்யும் குதிரையும் ஒன்றாகக் கருதப்படும்.

குதிரை

  • வண்டிகளில் கட்டி, அடித்து ஓட்டப்படும்.
  • கால் மாறிமாறிப் பாய்ந்து செல்லும்
  • எதிரிகளை மறித்துத் தாக்கும்
  • போக வேண்டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பி வரும்.

சொல்லும் பொருளும்

கால் – வாய்க்கால், குதிரையின் கால்

வண்கீரை – வளமான கீரை

மறித்தல் – தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல்), எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்

முட்டப்போய் – முழுதாகச் சென்று

பரி – குதிரை

 

தனிப்பாடல் திரட்டு (சிலேடை கவிதை) – சுந்தர் கவிராசர்

மரமது(1) மரத்தில்(2) ஏறி                    

 மரமதை(3) தோளில் வைத்து        

மரமது(4) மரத்தைக்(5) கண்டு                

மரத்தினோல்(6) மரத்தைக்(7) குத்தி

மரமது(8) வழியே சென்று

வளமனைக் கேகும் போது

மரமது(9) கண்ட மாதர்                           

மரமுடன்(10) மரம்(11) எடுத்தார்”        

 சுந்தர் கவிராசர்

1.அரன் (அரச மரம்)

2.மா- குதிரை (மாமரம்)

3. வேல்(கருவேலம்)

4.அரசன்                               

5.புலி (வேங்கை)

6.வேல்

7.புலி (வேங்கை)

8.காட்டு வழி

9.அரசன்

10.ஆல் (ஆல மரம்)

11 அத்தி (அத்தி மரம்)

குறிப்பு: ஆல் + அத்தி – ஆரத்தி *

முந்தைய ஆண்டு வினாக்கள்

‘கவி காளமேகம்’ எந்த சமயத்திலிருந்து எந்த சமயத்திற்கு மாறினார்?
(A) சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறினார்
(B) சைவத்திலிருந்து வைணவத்திற்கு மாறினார்
(C) வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்
(D) வைணவத்திலிருந்து பௌத்தத்திற்கு மாறினார்

———————————————————————————

TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

Org Code : owvff

Desktop / Laptop
http://web.classplusapp.com 

Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff

iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563

———————————————————————————

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!