- குழந்தைத் தொழிலாளர் பெருக்கத்திற்கு பல்வேறு சமூகப் பொருளாதார காரணிகள் காரணமாகின்றன.
வறுமையும் கடனும்:
- வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு, குழந்தையின் உழைப்பின் மூலம் பெறப்படும் பணமானது அக்குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு முக்கியமானதாகும்.
- குடும்பத்தின் கடன் பளூவால், குழந்தைகள் கட்டாய வேலையில் அமர்த்தப்படுகின்றனர்.
குழந்தைத் தொழிலாளர் முறைக்கான காரணங்கள்
- சம்பளம் குறைவான நிலையிலும் முதலாளியின் கட்டளைக்கு இணங்க வேலை செய்தல்.
- தங்கள் உரிமைகளை குறித்து அறியாமை.
- குறைந்தபட்ச கல்வி, திறன் மேம்பாடு கிடைக்கப்பெறாமை.
- வீட்டில் பெரியோர் வேலைவாய்ப்பில்லா நிலை அல்லது குறைந்த வேலைவாய்ப்பும் குழந்தைத் தொழிலாளரை ஊக்குவிக்கிறது.
- பெற்றோரின் கல்வியறிவின்மையும், அறியாமையும்
- பெரிய குடும்பங்கள், குறைந்த வருமானம்
- பாரம்பரிய முறைப்படி, குழந்தைகள் தங்கள் குடும்ப வேலையை செய்தல்.
- பாகுபாடும், இடப்பெயர்வும்.
- நிலமில்லாமை அதிகரிப்பதால் ஊதியம் மற்றும் ஒப்பந்த வேலையை சார்ந்திருக்க வேண்டி உள்ளது.
- சட்டங்களின் நடைமுறையில் குறைபாடு