குழந்தைத் தொழிலாளர்
- குழந்தைத் தொழிலாளர் (child labour) என்பது தொடர்ந்து, நீடித்த பணியில் குழந்தைகள் தொழிலாளர்களாக ஈடுபடுவதைக் குறிக்கிறது.
குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் அரசின் நடவடிக்கைகள்:
தேசிய குழந்தைத் தொழிலாளர் கொள்கை (1987):
- ஆபத்தான பணிகளில் ஈடுபட்டுள்ள குழந்தைத் தடுத்தலை விட, மறுவாழ்வியல் வழங்குவதை குறிக்கோளாக கொண்டுள்ளது.
தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம்:
- மத்திய தொகுதித் திட்டம்
- தேசிய குழந்தைத் தொழிலாளர் கொள்கை, 1987ன் கீழ் இது கொண்டு வரப்பட்டது.
- அனைத்து நிலை குழந்தைத் தொழிலாளர்களையும் ஒழித்தல், அவர்களை கண்டறிதல், பணியில் இருந்து திரும்ப அழைத்தல், அவர்களை கல்விக்கு தயார் செய்தல் மற்றும் தொழில்துறை பயிற்சி அளித்தல்.
தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி:
- NCLP திட்டம் இல்லா மாவட்டங்களில், தொண்டு நிறுவனங்களுக்கு நேரடியாக பணவுதவி அளித்து குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்தல்.
குழந்தைகளுக்கான தேசிய செயல்பாட்டுத் திட்டம், 2005:
- பெண்கள் (ம) குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்.
- குறிக்கொள்கள்: குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை கூடுதல், MMR, IMRI ஐ குறைத்தல்
சைல்ட் லைன் அறக்கட்டளை (CLF);
- குழந்தைகளின் நலனுக்காக ஆலோசனை வேண்டி பயன்படுத்தக்கூடிய கட்டணமில்லா தொலைப்பேசி எண் (1098)
- தரமான குழந்தைகள் இணைப்பு நாடு முழுவதும் கண்காணிக்கிறது.
சிசு கிரே திட்டம்:
- குறிக்கோள்: ஊக்குவித்தல், கைவிடப்பட்ட / தத்தெடுத்தலை காப்பகங்களில் உள்ள குழந்தைகளின் குறைந்தபட்ச பராமரிப்பு தரத்தை உறுதி செய்தல்,
- 10 குழந்தைகள் வரை உள்ள காப்பகங்களுக்கு ரூ. 6 லட்சம் வரை நிதியுதவி.
குழந்தைகளுக்கான நிதி மசோதா:
- குழந்தைகளுக்கான வள ஒதுக்கீடுகளை ஆய்வு செய்தல்.
- குழந்தைகளுக்கான நிதி ஒதுக்கீட்டு வழிமுறைகளை கண்டறிதல்.
- சமூக திட்டங்கள், குழந்தைகளுக்கான திட்டங்களின் நிதிப் பயன்பாட்டை ஆய்தல்.
குழந்தை நலனுக்கான தேசிய விருது:
- 1979ல் நிறுவப்பட்டது.
- குழந்தைகள் நல வாழ்விற்கான சேவையில் ஈடுபட்டுள்ள தனிநபர்களை ஊக்குவித்து பாராட்டுதல்.
ராஜீவ் காந்தி மானாவ் சேவா விருது:
- 1994ல் நிறுவப்பட்டது
- குழந்தைகளுக்கான சேவையில் ஈடுபட்டுள்ள தனிநபர்களை ஊக்குவித்து பாராட்டுதல்
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம், 1975:
- பெண்கள் (ம) குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இத்திட்டத்தை குழந்தை வளர்ப்பு மற்றும் மேம்பாட்டிற்காக நிறுவியது.
PENCIL
- மத்திய, மாநில அரசுகள், மாநகராட்சிகள், பொது மக்களை இணைக்கும் மின்னணு தளம்.
- குறிக்கோள்: குழந்தைத் தொழிலாளர் இல்லாத சமூகத்தை அடைதல்.
- ஐந்து உறுப்புகள்: குழந்தை கண்காணிப்பு முறை, புகார் முனையம், மாநில அரசு, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் மற்றும் இணைத்தல்.