சித்தர் உலகம் -சித்தர் பாடல்கள்
சித்தர்களை பற்றி அறிஞர்கள் கூற்று
- சித்தர்களை, கிளர்ச்சியாளர்கள் என்று அறிஞர் க.கைலாசபதி கூறுகின்றார். *
- எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில் – பாரதியார்*
சிறப்பு பெற்ற சித்தர்கள்
- சித்தர்களின் ஆதி சித்தராகக் கருதப்படுபவர் திருமூலர்
- சித்தர்களில் கலகக்காரர் என்று கருதப்படுபவர் சிவவாக்கியர்
- தற்காலத்தில் தத்துவக் கருத்து கூறிய முப்பெரும் ஞானியர்கள் வள்ளலார், தாயுமானவர், பாரதியார்.
ஆதி சித்தர் – திருமூலர்*
- சித்தர்களின் ஆதி சித்தராகக் கருதப்படுபவர் திருமூலர்.
- இவரது காலம் கி.பி. 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டு என்பர்.
கலகக்கார சித்தர் – சிவவாக்கியர்*
- சித்தர்களில் கலகக்காரர் என்று கருதப்படுபவர் சிவவாக்கியர்
- சிவவாக்கியரின் காலம் 9 ஆம் நூற்றாண்டு.
மற்ற சித்தர்கள் காலம்
- திருமூலர், சிவவாக்கியர் தவிர மற்றவர்கள் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு முதல் வாழ்ந்தவர்கள் என்று கூறுவர்.
சித்தர்களின் சிறந்த மேற்கோள்கள்
- மனமது செம்மையானால் திரம் செபிக்க வேண்டாம்.
- ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்பது திருமூலர்.
- “ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை” – திருமந்திரம்
- “சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ?” – சிவவாக்கியர்
- நாடொணாத அமிர்தமுண்டு நான் அழிந்து நின்ற நாள் – சிவவாக்கியர்
- “ஒன்றென்றிரு, தெய்வம் உண்டென்றிரு” என்பது பட்டினத்தார்
- “சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்” – பாம்பாட்டிச் சித்தர்
- “ஆதி கபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே சாதி வகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்” – பத்திரகிரியார்.
- நந்தவனத்திலோர் ஆண்டி – அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் கொண்டு வந்தானொரு தோண்டி – அதை கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி என்று கடுவெளிச் சித்தர்,
- தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே! – ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே! நாதர் முடி மேலிருக்கும் வெண்ணிலாவே! – அங்கே நானும் வர வேண்டுகின்றேன் வெண்ணிலாவே!- வள்ளலார்
- “மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்”
- “நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்” என்பன போன்ற பாடலடிகள் இதை மெய்ப்பிக்கின்றன.
இடைக்காட்டுச் சித்தர்
- இடைக்காடு என்ற ஊரில் பிறந்ததனால் இவர்
- இடைக்காட்டுச் சித்தர் என்று அழைக்கப்பட்டார்.
- இடைக்காட்டுச் சித்தர் போகரின் சீடர். ‘இடைக்காடர் ஞான சூத்திரம் எழுபது’ என்பது இடைக்காட்டுச் சித்தருடைய நூல்.
- மெய்ப்பொருளின் தன்மையினையும் பிறவியற்ற பேரின்ப நிலையை எய்தும் வழியினையும் இடைக்காட்டுச் சித்தர் பாடியுள்ளார்.
இடைக்காட்டுச் சித்தர் பாடல்
பாடல்
கண்ணுள் மணியைக் கருதிய பேரொளியை விண்ணின் மணியை விளக்கொளியைப் போற்றீரே!
பாலிற் சுவை போலும் பழத்தில் மது போலும் நூலிற் பொருள் போலும் நுண்பொருளைப் போற்றீரே! எள்ளில் தைலம் போல் எங்கும் நிறை பொருளை உள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே!
– இடைக்காட்டுச் சித்தர்
பாடலின் பொருள்
- நம் கண்ணில் இருக்கும் கருமணி போன்றவனை, நாம் கருதுகின்ற மாபெரும் ஒளியைப் போன்றவனை.
- விண்ணில் விளங்கும் சுடர் போன்றவனை. திருவிளக்கின் ஒளியாய்த் திகழ்பவனை எந்நாளும் போற்றுவீராக.
- பாலில் மறைந்துள்ள சுவை போலவும் பழத்தில் மறைந்துள்ள இனிமை போலவும்
- நூல்களில் மறைந்துள்ள நுட்பமான கருத்துகள் போலவும் உலகப் பொருள்களில்
- எல்லாவற்றிலும் நுட்பமாய் மறைந்திருக்கும் இறைவனைப் போற்றுவீராக.
- எள்ளின் உள்ளிருக்கும் எண்ணெய்யைப் போல எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை உள்ளத்தில் இருத்தி. உணர்வுடன் போற்றுவீராக.
குதம்பைச் சித்தர்
- குதம்பைச் சித்தருடைய பாடல்களில் ‘குதம்பாய்’ என்று மகடூஉ முன்னிலை வருவதால், இவர் ‘குதம்பைச் சித்தர்’ என்று அழைக்கப்பட்டார்.
- சித்தர்களின் இயல்புகள் குதம்பைச்சித்தர் பாடல்களில் பேசப்படுகின்றன.
– குதம்பைச் சித்தர் பாடல்
பாடல்
வெட்டவெளி தன்னை மெய்யென்று இருப்போர்க்குப் பட்டயம் ஏதுக்கடி – குதம்பாய்! பட்டயம் ஏதுக்கடி.
மெய்ப்பொருள் கண்டு விளங்கும் மெய்ஞ் ஞானிக்குக் கற்பங்கள் ஏதுக்கடி – குதம்பாய்! கற்பங்கள் ஏதுக்கடி.
முத்தமிழ் கற்று முயங்கும் மெய்ஞ் ஞானிக்குச் சத்தங்கள் ஏதுக்கடி – குதம்பாய்! சத்தங்கள் ஏதுக்கடி.
பாடலின் பொருள்
- குதம்பாய்! உலகம் நிலையற்றது. வெட்டவெளியாகிய உலக இயக்கமே நிலையானது என்ற கொள்கையுடைய சான்றாண்மை உடையோருக்கு அதற்கான உரிமை ஆவணம் எதற்கு?
- மெய்ப்பொருளைக் கண்டுணர்ந்த மெய்ஞ் ஞானியர்க்குப் புற உடலுக்கு வலிமை தரும் காயகற்ப மருந்துகள் எதற்கு?
- மூன்று தமிழையும் கற்று மெய்ப்பொருளோடு இணைந்துவிட்ட மெய்ஞ் ஞானிகளாகிய சித்தர்களுக்குச் சத்தமிட்டுப் பாடும் வெற்றுக் கூப்பாடுகள் எதற்கு
– குதம்பைச் சித்தர்
சித்து – சித்தி
- ”சித்து’ என்ற சொல் அறிவு என்னும் பொருளைக் குறிக்கும்.
- மனம், கருத்து, ஆன்மா என்ற பொருள்களைக் கொண்டது தமிழில் ‘சித்து’ என்னும் சொல். **
- தமிழ்ப் பேரகராதியின்படி சித்தி என்ற சொல் மெய்யறிதல், வெற்றி, காரியம் கைகூடல் என்று பொருள்படும் **
சித்தன்-சித்தர்கள்
- சித்தர் என்னும் சொல் அறிவுடையோர் என்ற பொருளைத் தரும்.
- சித்தர்கள் என்றால் நிறைவடைந்தவர் என்பது பொருள். *
- சித்தத்தை வென்று ‘சித்து’ என்னும் பேரறிவினைப் பெற்றவர்கள் சித்தர்கள்.*
- ‘நிறைமொழி மாந்தர்’ என்னும் தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் காணப்படும் சொல்லுக்கும் உரியவர்கள் சித்தர்கள். *
- சித்தர்கள் ‘சித்தன்’ என்று சிலப்பதிகாரத்தில் நாடுகாண் காதையில் இடம்பெறும் சொல்லுக்கும் உரியவர்கள். *
- அறிவு வேறு, ஞானம் வேறு என்று உலகிற்கு விளக்கியவர்கள் சித்தர்கள். அதனால் தான், ‘பிறப்பறுத்தவர்கள்’ என்று சித்தர்கள் அழைக்கப்பட்டனர்.
- சித்தர்களின் கொடை பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சியாகும்.
- சித்தர்கள் யோக மார்க்கத்தையும் ஞான மார்க்கத்தையும் தங்களின் உயர் நெறிகளாகக் கொண்டனர்.
- சித்தர்கள் சிறப்பு அவர்கள் வாழும் கலையை அறிந்தவர்கள், விழிப்பு நிலையை உணர்ந்தவர்கள்.
- சித்தர்கள், எண் வகைச் சித்திகளைக் கைவரப் பெற்றவர்கள் என்றும் வரையறுக்கலாம்.
- வானவியல், யோகாசனம், வர்மம், பஞ்சபட்சி சாஸ்திரம்,மருத்துவம், மந்திரம், இரசவாதம், யோகம், ஞானம் போன்ற பல்துறைகளில் சித்தர்கள் பாடிய பாடல்கள் தமிழ்மொழியின் அறிவுப் பெட்டகம் எனலாம். *
- சித்தர்கள், மருத்துவத்தில் ‘சித்த மருத்துவம்’ என்ற தனிப்பிரிவு தோன்றும்படி பல்வேறு நோய்களையும் அவை தீர்க்கும் மருந்துகளையும் கண்டறிந்தவர்கள்.
சித்தர்களின் கொள்கைகள்
- ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ என்பதே சித்தர் நோக்கம்
- சித்தர் இலக்கியம் சடங்குகள், சம்பிரதாயங்கள், சமூக ஏற்றத்தாழ்வு ஆகியவற்றிற்கு எதிரான விமர்சனத்தை முன்வைத்தது. அதே சமய மெய்யியல் அனுபவங்களையும் முன் வைத்தவர்கள் சித்தர்கள்.
- சித்தர்கள் உருவ வழிபாடுகளை எதிர்த்துள்ளனர். சாதி, சமய ஏற்றத்தாழ்வையும் எதிர்த்துள்ளனர்.
- சித்தர்கள் தம் பாடல்களின் வழி சமூகத்தில் நிலவிய மூடப் பழக்கவழக்கங்களை எதிர்த்தவர்கள்.
- சித்தர்கள் பெரிதும் மனித வாழ்வின் நிலையற்ற தன்மையைக் கூறி, மனத்தையும் உடலையும் யோகப் பயிற்சியால் ஒருமுகப்படுத்தலாம் என்னும் தத்துவத்தைத் தந்துள்ளனர்.
- சித்தர்கள் தமது கண்டுபிடிப்புகளையும் ஆற்றல்களையும் மக்களின் நன்மைக்கே பெரும்பாலும் பயன்படுத்தினர்.
- சித்தர்கள் எதைப் பாடினாலும் அதன் அடிப்படையையே ஆய்ந்து சிந்தித்துப் பாடியுள்ளனர்.
- ஆரவாரத்துக்கோ மேலோட்டமான பார்வைக்கோ அவர்களின் பாடல்களில் மருந்துக்கும் இடமில்லை.
சித்தர்கள் எண்ணிக்கை
- சித்தர் காலத்தைப் போலவே சித்தர்களின் எண்ணிக்கையும் ஆய்வுக்குரியதாகவே உள்ளது. சித்தர் தொகை குறித்த பட்டியல்கள் ஒவ்வொன்றும் மாறுபடுகின்றன.
- பதினெண் சித்தர்கள் என்ற வழக்கில் 18 என்பது எண்ணிக்கையைக் குறிக்கவில்லை, மாறாக அவர்கள் பெற்ற 18 பேறுகளைக் குறிக்கிறது என்னும் கருத்தும் உண்டு.
சித்தர்களின் சமூக உணர்வு
- சித்தர் பாடல்கள் என்றதும் முதலில் நம் நினைவுக்கு வருவது அவர்களுடைய ஆழ்ந்த சமூகவுணர்வே ஆகும்.
- சித்தர்களை, `கிளர்ச்சியாளர்கள்’ என்று அறிஞர் க.கைலாசபதி கூறுகின்றார். *
- சாதிக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி – சிவவாக்கியர், பாம்பாட்டிச் சித்தர்
- சித்தர்கள் இன்றைய சமூகத்தை மிகவும் அல்லல்படுத்தும் சாதிக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் பாடியவர்கள்.
- “சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ?” என்று சிவவாக்கியர் பாடியுள்ளனர். *
- “சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்” என்று பாம்பாட்டிச் சித்தர் பாடியுள்ளனர். *
- “ஆதி கபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே சாதி வகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்” என்று பத்திரகிரியார் பாடியுள்ளனர். *
கடவுள் கொள்கை
- “ஒன்றென்றிரு, தெய்வம் உண்டென்றிரு” என்பது பட்டினத்தார் கூறும் கடவுட்கொள்கை. *
- ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்பது திருமூலர் சொல்லும் கடவுட்கொள்கை
- மனிதர்கள் கடவுளின் பெயரால் கருத்து வேறுபாடு கொண்டு தமக்குள் கலகம் விளைவித்துக் கொள்வதில் சித்தர்களுக்கு உடன்பாடு இல்லை.
தன்னை அறியும் ஞானம்
- “ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை” என்கிறது திருமந்திரம் (பா. எண். 1467). *
- ஆன்மாவை உள்ளுணர்வினால் அறிவது தமிழ்ச் சித்தர்களின் மெய்யுணர்வு..
- ஞானத்தினால் மட்டுமே முக்தியை அடைய முடியும். ஞானம் அல்லாத வேறு வழிகள் முக்தியை அளிக்காது.
காயமே இது மெய்யடா – உடலின் அவசி
- நந்தவனத்திலோர் ஆண்டி- அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் கொண்டு வந்தானொரு தோண்டி – அதை கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி. என்று கடுவெளிச் சித்தர் சொல்கிறார். *
- சித்தர்களிலே சிலர் உடம்பை அவ்வளவு மேன்மையாகக் கருதியதில்லை. ஆனால், பெரும்பான்மையான சித்தர்கள் அதனைப் பெருமைப்படுத்தியே பேசுகிறார்கள்
- திருமூலர் உடம்பின் இன்றியமையாமையைப் பல பாடல்களில் வலியுறுத்துகின்றார்.
- “உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே”, என்று திருமந்திரம் கூறுகிறது.*
- “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்பதை திருமந்திரத்தில் காணலாம். *
வீடுபேறு
- சித்தர்களைப் பொறுத்த அளவில் வீடுபேறு என்பதே கூடத் ‘தன்னை அறிதல்’ தான்.
- தன்னை அறிந்த நிலையில் ஆன்மா தானே தனக்குத் தலைவனாய் நிற்கும் என்பது திருமூலர் வாக்கு.
- தன்னை அறிதல் என்பது தன் உண்மை நிலையை அறிதல்.
- தன்னை அறிவதற்கு ‘நான்’ என்னும் அகங்காரம் அழிய வேண்டும்.
- நாடொணாத அமிர்தமுண்டு நான் அழிந்து நின்ற நாள். – சிவவாக்கியர். .
- மனித உடலுக்கு ஓர் உள்ளார்ந்த தகவு இருப்பதாகச் சித்தர்களின் பாடல்கள் வழிப் புலனாகிறது.
சித்தர்களும் இரசவாதமும்
- சித்தர்களை இரசவாதிகள் என்று கருதும் போக்கு, தமிழகத்தில் பரவலாகக் காணப்படுகிறது. சித்தர்கள் தங்களின் யோக சாதனையை உள்ளார்ந்த ஆன்மீக இரசவாதமென்றே கருதினார்கள்.
- இரசவாதி எவ்வாறு தாழ்ந்த உலோகத்தைத் தங்கமாக மாற்றுகிறானோ அவ்வாறே சித்தரும் தம்முடைய உடலையும் உள்ளத்தையும் சார்ந்து நிற்கும் உயிரை எந்தச் சார்புமற்ற உயர்ந்த ஆன்ம நிலைக்கு மாற்றுகிறார். எனவே, ஒவ்வொரு சித்தரும் ஓர் ஆன்மீக இரசவாதியாகிறார்.
சித்தர் மருத்துவம்
- சித்தர்கள் இயற்கையின் இரகசியங்களை அறிந்தவர்கள்.
- அண்டத்தில் உள்ளது பிண்டம்; பிண்டத்தில் உள்ளது அண்டம் என்பது சித்தர் மொழியாகும்.
- சித்த மருத்துவம் என்ற தனிப்பிரிவு தோன்ற சித்தர்களே காரணமானவர்கள்
- நாடிகளைப் பிடித்து நோய் அறியும் திறன் பெற்ற சித்தர்கள் மருந்து தயாரிக்கும் வேதியியல் கூறுகளையும் அறிந்திருந்தனர்.
- சித்தர்கள் மரம், செடி, கொடி பற்றிய அறிவும் அவற்றின் இலை, பூ, காய், கனி என அனைத்திலும் நோய் தீர்க்கும்மருந்துகளை உருவாக்கும் அறிவும் உடையவர்களாக இருந்தனர்.
சித்தர்களின் குழூஉக்குறி
- தமிழ்ச் சித்தர்களின் பாடல்கள் எளிமையாக இருப்பினும் மறை எழுதப்பட்டுள்ளன. ருள் கூற்றுகளாக, குழூஉக்குறிகளாகவே
- சித்தர்களின் பாடல்கள், யோகம், தந்திரம், மருத்துவம் மூன்று கூறுகளையும் அறிந்தவர்களால் மட்டுமே பொருள் காணத்தக்கவையாக அமைந்திருக்கின்றன.
- ‘மாங்காய்ப் பால்’ எனும் சொல், குண்டலினி சக்தி | உச்சியில் ஏற்றி அமுதம் உண்ணும் நிலையைக் கூறும். *
- இவ்வாறு குறியீட்டுச் சொற்கள் கொண்ட பாடல்கள் சித்தர் இலக்கியங்களில் குவிந்திருக்கக் காணலாம்.
- தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே! – ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே! நாதர் முடி மேலிருக்கும் வெண்ணிலாவே! – அங்கே நானும் வர வேண்டுகின்றேன் வெண்ணிலாவே! – வள்ளலார்
அட்டமா சித்திகள் (8 வகை) ஆற்றல்கள்
- அணிமா – அணுவைப்போல சிறுத்து நிற்கும் ஆற்றல்
- மகிமா – வரையறையற்று விரிந்து படரும் ஆற்றல்
- லகிமா – காற்றில் மிதக்கும் ஆற்றல்
- கரிமா – எங்கும் வியாபித்திருக்கும் ஆற்றல்
- பிராகாமியம் – இயற்கைத் தடைகளைக் கடக்கும் ஆற்றல்
- ஈசத்துவம் – படைக்கவும் அடக்கவும் கொண்ட ஆற்றல்
- வசித்வம் – உலகப் படைப்புகளை எல்லாம் அடக்கி ஆளும் ஆற்றல்
- காமாவசாயித்வம் – விரும்பியதை முடிக்கும் ஆற்றல்.
முந்தைய ஆண்டு வினாக்கள்
வைதோரைக் கூட வையாதே – இந்த வையமுழுதும் பொய்த்தாலும் பொய்யாதே -இவ்வரியை பாடியவர்
(A) குடும்பைச் சித்தர்
(B) கடுவெளிச்சித்தர்
(C) திருமூலர்
(D) கவிமணி
வெட்டவெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர்
(A) பாம்பாட்டிச் சித்தர்
(B) கடுவெளிச் சித்தர்
(C) குதம்பைச் சித்தர்
(D) அழுகுணிச் சித்தர்
பொருந்தாததைத் தேர்ந்தெடுத்து எழுதுக. கடுவெளிச் சித்தர் அறிவுரைகள்
(A) பெண்களைப் பழித்துப் பேசாதே!
(B) பாம்போடு விளையாடாதே!
(C) போலி வேடங்களைப் போடாதே!
(D) தீயொழுக்கம் செய்யாதே!
பாம்பினைப் பற்றி ஆட்டாதே – உன்றன் பத்தினிமார்களைப் பழித்துக் காட்டாதே எனப் பாடிய சித்தர்
(A) தேரையர்
(B) பாம்பாட்டிச்சித்தர்
(C) போகர்
(D) கடுவெளிச்சித்தர்
உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியைக் கடவுளாக வழிபட்ட சித்தர்
(A) கடுவெளிச்சித்தர்
(B) பாம்பாட்டிச் சித்தர்
(C) குதம்பைச் சித்தர்
(D) அழுகுணிச் சித்தர்
சித்தர் பாடல்கள் என்றதும் முதலில் நம் நினைவுக்கு வருவது?
(A) பக்தி உணர்வு
(B) ஒற்றுமை உணர்வு
(C) இயற்கை உணர்வு
(D) சமூக உணர்வு
உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர்
(A) பாம்பாட்டிச் சித்தர்
(B) குதம்பைச் சித்தர்
(C) அழுகுனிச்சித்தர்
(D) கடுவெளிச் சித்தர்
சித்தர் பாடலில் ‘கடம்’ என்பதன் பொருள் யாது?
(A) பாம்பு
(B) இறுமாப்பு
(C) உடம்பு
(D) வேம்பு
உடற்பிணியைப் போக்கும் மருத்துவ நூல்கள் இயற்றிய சித்தர்கள்
1. அகத்தியர்
2. தேரையர்
3. போகர்
4. புலிப்பாணி
(A) 1, 4 – சரி
(B) 1,3,4 சரி
(C) 2.4 – சரி
(D) 1,2,3,4 – சரி
யார் பாடிய சித்தர் பாடல்கள் “ஞானப்பாமாலை” என்று வழங்கப்படுகிறது?
(A) பாம்பாட்டிச் சித்தர்
(B) அகத்தியர்
(C) சிவவாக்கியர்
(D) கடுவெளிச் சித்தர்
நந்த வனத்திலோர் ஆண்டி அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தானொரு தோண்டி
என்ற வரிகளைப் பாடியவர் -யார்?
(A) பத்ரகிரியார்
(B) கடுவெளிச் சித்தர்
(B) அகத்திய ஞானம்
(D) சிவவாக்கியர்
———————————————————————————
TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
Org Code : owvff
Desktop / Laptop
http://web.classplusapp.com
Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff
iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563
———————————————————————————