சிந்துவெளி நாகரிகம்
- இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலும் பாகிஸ்தானிலும் பொ.ஆ.மு. 3000 கால அளவில் தோன்றிய நாகரிகங்களும் பண்பாடுகளும் மொத்தமாகச் சிந்து நாகரிகம் எனப்படும்.
- இந்நாகரிகம் அடையாளம் காணப்பட்ட முதல் இடம் ஹரப்பா என்பதால், இது ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது.
- இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும் .அதைவிட தொன்மையானது சிவகங்கையில் வைகை நதியில் அமைந்துள்ள கீழடி ஆகும்.
- நாகரிகம் என்ற வார்த்தை பண்டைய லத்தீன் மொழி வார்த்தையான சிவிஸ் (CIVIS) என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் நகரம் ஆகும்.
- கார்பனின் கதிரியக்க ஐசோடோப் ஆன கார்பன் 14(C-14)-ஐப் பயன்படுத்தி, ஒரு பொருளின் வயதை அறியும் முறை கதிரியக்க கார்பன் முறை அல்லது கார்பன் 14 முறை என்று அழைக்கப்படுகிறது,
ஹரப்பாவின் வரலாறு
- சிந்தி மொழியில் ஹரப்பா என்னும் சொல் புதையுண்ட நகரம் எனும் பொருளைக் குறிக்கிறது.
- இரவி–சட்லெஜ் ஆறுகளுக்கு இடையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட (1920) தொல்பொருள் சின்னம் ‘ஹரப்பா’ எனப்படுவதாகும்.
- ஹரப்பா நகரத்தின் இடிபாடுகளை முதன்முதலில் சார்லஸ் மேசன் என்ற ஆங்கிலேயர் தமது நூலில் விவரித்தார்.
- ஹரப்பாவுக்கு முதன்முதலில் 1826இல் வருகை தந்தவர் சார்லஸ் மேசன் எனும் இங்கிலாந்து நாட்டவர்.
- 1831இல் அம்ரி என்னும் ஹரப்பா பண்பாட்டோடு தொடர்புடைய இடத்திற்கு அலெக்சாண்டர் பர்ன்ஸ் வருகை தந்தார்.
- லாகூரிலிருந்து முல்தானுக்கு ரயில் பாதை அமைப்பதற்காக ஹரப்பா அழிக்கப்பட்டது.
- இப்பகுதியிலிருந்து ஒரு முத்திரை இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் முதல் அளவையரான அலெக்சாண்டர் கன்னிங்ஹாமுக்குக் கிடைத்தது.
- ஹரப்பாவின் முக்கியத்துவத்தையும் அதன் நாகரிகத்தையும் உணர்ந்து, அங்கு ஆய்வு நடத்தக் காரணமாக இருந்தவர் சர் ஜான் மார்ஷல் ஆவார்.
- 1922 ல் சிந்து மாகாணத்தில் எழுபது அடி உயரமுள்ள மண்மேடு ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டது.
- இச்சின்னத்தை ‘மொகஞ்சதாரோ‘ என்பர்.
- சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியின் போது இந்திய தொல்பொருள் ஆய்வின் இயக்குநர் ஜெனரல் சர்ஜான் மார்ஷல்.
- 1940 களில் ஆர்.இ. எம்.வீலர் ஹரப்பாவில் அகழாய்வுகள் நடத்தினார். இவர் சிந்து நாகரிகம் என்னும் நூலின் ஆசிரியர்.
- சிந்துவெளி நாகரிகம் ஒரு ‘நகர நாகரிகம்‘ என்பதை உறுதிசெய்தார்.