சிற்பி பாலசுப்பிரமணியம் (பிறப்பு: 29 ஜூலை 1936)

  • சிற்பி பாலசுப்பிரமணியம் இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.
  • ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலிற்காகவும் மொழிபெயர்ப்புக்காகவும் இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர் சிற்பி பாலசுப்பிரமணியம்.
  • சாகித்திய அகாதமியின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார் சிற்பி பாலசுப்பிரமணியம். சிற்பி பாலசுப்பிரமணியம் தமிழத்துறைத் தலைவராகப் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்.

சிற்பி பாலசுப்பிரமணியம் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகள்

  • மலையாளம்
  • கன்னடம்
  • மராத்தி
  • இந்தி
  • ஆங்கிலம்

சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதியுள்ள கவிதைகள்

  • சூரிய நிழல்
  • ஒளிப்பறவை
  • ஒரு கிராமத்து நதி
  • சரப்ப யாகம்
  • பூஜ்யங்களின் சங்கிலி

சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதியுள்ள உரைநடை நூல்கள்

  • அலையும் சுவடும்
  • மலையாளக் கவிதை
  • இலக்கியச் சிந்தனைகள்

 

  • சிற்பி பாலசுப்பிரமணியம் மலையாளத்திலிருந்து கவிதைகளையும் புதினங்கைளயும் தமிழில் மொழிபெயரத்துள்ளார். சிற்பி பாலசுப்பிரமணியம் பேராசிரியர், மொழிபெயர்பாளர், இதழாசிரியர், கவிஞர் எனப் பன்முகம் கொண்டவர்.

 

இளந்தமிழே! – சிற்பி பாலசுப்பிரமணியம்

  • தமிழை போற்றும் தொழிலாளர் வியர்வை வெள்ளம்
  • சிற்பி பாலசுப்பிரமணியத்தின் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

கவிதை

செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்! 

தம் கைகள் அதனைப்போல் சிவந்து நோகத் தாமுழைக்கும் தொழிலாளர் வியர்வை வெள்ளம் **

விம்முகின்ற தோள் மீதில் முத்துமுத்தாய் வீற்றிருக்கும், அவையெல்லாம் வியந்து பாட

எம்மருமைச் செந்தமிழே! உன்னை யல்லால் ஏற்ற துணை வேறுண்டோ? இயம்பிடாயே!

மூண்டு வரும் கவிதை வெறிக்கு உணவாய் எங்கள் முத்தமிழே! நீ உள்ளாய்*** 

முன்னம் ஓர் நாள் பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தாய்! பாரி முதல் வள்ளல்களை ஈன்று தந்தாய்!

மீண்டுமந்தப் பழமை நலம் புதுக்குதற்கு மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா, வா! ** 

கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம் போலக் குளிர்பொதிகைத் தென்தமிழே! சீறி வா, வா!

– சிற்பி பாலசுப்பிரமணியம்

முந்தைய ஆண்டு வினாக்கள்

கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்
(A) ஒளிப் பறவை
(B) சிரித்த முத்துக்கள்
(C) ஒரு கிராமத்து நதி
(D) நிலவுப் பூ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!