சுயதொழிலில் ஈடுபடுவோர் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டிற்காக அரசு நடவடிக்கைகள் பற்றி விவரித்து எழுதுக

தேசிய மேம்பாடு மற்றும் தொழில் முனைவுத்திறன் விருதுகள் திட்டம்:

  • திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவுத்திறன் அமைச்சகத்தால் 2016-ம் ஆண்டு இத்திட்டம் துவங்கப்பட்டது.’

குறிக்கோள்கள்:

  • இந்தியர்களிடையே தொழில்முனைவுத்திறன் கலாச்சாரத்தை வளர்த்தல்.
  • இந்திய இளைஞர்கள் சொந்த நிறுவனங்களை அமைக்கவும், மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதையும் ஊக்குவித்தல்.
  • சிறந்த இளம் தொழில்முனைவோரின் சாதனைகளை முன்னிலைப்படுத்துதல்,
  • முதல் தலைமுறை தொழில் முனைவோரின் முயற்சி (ம) சாதனைகளை அங்கீகரித்து கவுரவித்தல்.

தொடங்கிடு இந்தியா திட்டம் (Startup India)

  • புதிய தொழில் தொடங்குவதற்கு ஏதுவான சூழலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
  • அதிக அளவிலான வேலைவாய்ப்பினை உருவாக்குவதுடன் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுகிறது.
  • ரூ.10,000 கோடி நிதியத்தை உருவாக்கி, நிதியுதவி செய்தல்.
  • மூலதன லாபங்கள் மீது வரிவிலக்கு, புதிய நிறுவனங்களுக்கு ஆண்டுகளுக்கு வரிவிலக்கு அளித்தல்.
  • புதிய நிறுவனங்கள் தொழிலில் இருந்து விரைவாக வெளியேறும் வசதி.

நிதி (National Initiative for Developing and Harnessing Innovations) கிராண்ட் சேலஞ்ச் திட்டம்:

  • இத்திட்டம் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் தொடங்கப்பட்டது.
  • இந்த திட்டம் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு முதலீடு நிதியை வழங்குகிறது.
  • மாணவர்களால் தொடங்கப்படும் புதிய நிறுவனங்களை ஊக்குவித்தல்.
  • பிரதமரின் இளைஞர்களுக்கான திட்டம் (பிரதான் மந்திரி யுவ யோஜனா)

மத்திய நிதியுதவித் திட்டம்

  • தொழில்முனைவுத்திறன் குறித்து பயிற்சியளிக்க திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவுத்திறன் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் திட்டமாகும்.
  • திட்டகாலம்: 5 ஆண்டுகள் (2016-2017 முதல் 2020-2021 வரை)

நோக்கங்கள்:

  • இளைஞர்களுக்கு தொழில் முனைவுச் சூழலமைவுகளை அதிகரித்தல்
  • மின்னணு பயிலுதல் மற்றும் வகுப்பறை கற்பித்தலில் கவனம் செலுத்துதல். உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அனைத்து நிறுவனங்களையும் ஊக்குவித்தல்.
  • இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான வழிப்பாதையை உருவாக்க தகவல்கள், வழிகாட்டுநர் வலை அமைப்புகள் போன்ற சேவைகளும் இத்திட்டம் மூலம் வழங்கப்படுகிறது.

மகிளா சம்ரிதி யோஜனா

  • இது பெண் தொழில் முனைவோருக்கு சிறுகடன் வழங்குதல்.
  • அதிக பட்ச கடன் வரம்பு: ரூ.60,000
  • ஒரு சுய உதவிகுழுவில் அதிகபட்சமாக 20 பெண்கள் இடம் பெற்றிருக்கலாம்.
  • பெண்கள் சார்ந்துள்ள குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.31,00,000 மிகாமல் இருக்க வேண்டும்.
  • ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்திற்குள் உள்ளவர்களுக்கு மொத்த கடனில் 50 சதவீதத்தை வங்கிகள் வழங்குகின்றன.
  • கடனை 48 மாதங்களுக்குள் காலாண்டு தவணைகளில் திருப்பி செலுத்தலாம்.

பெண்களுக்கான புதிய ஸ்வர்னிமா சிறப்புத் திட்டம்:

  • வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் தகுதி வாய்ந்த பின்தங்கிய வகுப்பைச் சார்ந்த பெண்கள் சுயமாக தங்களைத் தாங்களே சார்ந்திருக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • இரு பயனாளிக்கு அதிகபட்ச ரூ.1,00,000-கடன் வழங்கப்படுவதுடன் ஒரு வருடத்திற்கு 5% வட்டி விதிக்கப்படும்.

MSME க்களுக்கான வட்டி குறைப்புத் திட்டம்.

  • உற்பத்தித்துறை மற்றும் சேவைத்துறையில் உற்பத்தித்திறனை அதிகரிக்க ஊக்குவிப்பதுடன், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு சலுகைகளையும் இத்திட்டம் வழங்குகிறது.
  • பொருளாதாரத்தை முறைப்படுத்தவும், கடன் செலவைக் குறைக்கவும் இத்திட்டம் உதவுகிறது.
  • செயல்பாட்டுக் காலம் நிதியாண்டுகள் 2019 (ம) 2020.

பிரவாசி கவுசல் விகாஸ் யோஜனா:

  • இது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் திறன் மேம்பாட்டு முயற்சியாகும்.
  • திறன் மேம்பாடு (ம) தொழில் முனைவுத் திறன் அமைச்சகத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
  • செயல்படுத்தும் அமைப்பு – தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!