செந்தமிழ்ச் செம்மல் என்று அழைக்கப்படுபவர் டாக்டர் ஜி.யு. போப் ஆவார்.
ஜி.யு. போப் பாதிரியார் கனடா நாட்டில் பிறந்தவர் ஆவார்.
டாக்டர் ஜி.யு. போப், 1839-ஆம் ஆண்டில் தென்னிந்தியாவுக்கு வந்தார்.
ஜி.யு. போப் முதன் முதலாக தமிழ் உரையைப் படித்துச் சென்னை சாந்தோமில் சொற்பொழிவாற்றினார்.
ஆங்கிலேயரான ஜி.யு. போபின் தமிழுரை கூடியிருந்த சென்னை சாந்தோம் தமிழர்களுக்குப் பெருவியப்பளித்தது.
ஜி.யு. போப் சிறிது காலத்திலேயே தமிழ் மொழியைப் பயிலத்தொடங்கினார்.
ஜி.யு. போப். திருக்குறள், திருவாசக ஆகிய நூல்களை ஆங்கில மொழிபெயர்ப்பு செய்தார்.
ஜி.யு. போப் அவர்கள் தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தஞ்சாவூரில் வாழ்ந்த போது தெளிவுற அறிந்தார்.
தஞ்சாவூரில் வாழ்ந்த போது தொல்காப்பியம், நன்னூல் முதலிய பேரிலக்கண நூல்களைப் பாடசாலை மாணவர் படிப்பது எளிதன்று என்பதைக் கண்டு, சிறிய தமிழ் இலக்கண நூல்கள் எழுதி வெளியிட்டார்.
தமிழ் மொழியை ஐரோப்பியர் கற்றுக் கொள்வதற்கு Tamil Hand Book நூல் ஒன்றை எழுதினார் ஜி.யு. போப்.
தமிழ் நூல்களை ஐரோப்பியரும் படித்துப் பயன்பெற வேண்டுமென்ற எண்ணத்தில், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார் ஜி.யு. போப்.
ஜி.யு. போப் ஆங்கில மொழியில் எழுதப் பெற்றிருந்த தமிழ்நாட்டு வரலாறு நூலை, தமிழில் எழுதிப் பதிப்பித்தார்.
பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்துத் துறைக் கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகைய கல்வியே பயனளிக்குமென்றும் ஜி.யு. போப் கருதினார்.
ஜி.யு. போப் தமிழோடு (எழுபது) 70 ஆண்டுகள் வாழ்ந்திருந்து, தமிழுக்கு நலம் செய்தார்.