தமிழகத்தில் வேளாண்மை
- வரலாற்று ரீதியாக தமிழகம் ஒரு வேளாண் மாநிலமாகும். தற்போது தமிழகத்தில் ஏழு வேளாண் காலநிலை மண்டலங்கள் (AGRO CLIMATIC ZONES) உள்ளது.
- இங்கு பல்வேறு வகையான மண் வளம் இருப்பதால் பழங்கள், காற்கறிகள், மசாலா பொருட்கள், தோட்டப் பயிர், மலர்கள் மற்றும் மருத்துவத் தாவரங்கள் போன்றவை பயிரிட ஏதுவாக உள்ளது.
- தமிழகம் தேசிய உதிரி பூக்கள் உற்பத்தியில் முதலிடத்திலும் பழங்கள் உற்பத்தியில் மூன்றாமிடத்திலும் உள்ளது.
- தமிழகத்தில் வேளாண்மையானது மிக அதிக அளவில் ஆற்றுநீர் மற்றும் பருவமழையை நம்பியுள்ளது.
- தற்போது இந்தியாவின் நெல் உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக மேற்கு வங்கத்திற்கு அடுத்ததாக உள்ளது.
- மிகப்பெரிய அளவில் மஞ்சள் உற்பத்தி செய்யும் மாநிலமாகவும் உள்ளது.
- கம்பு, சோளம், நிலக்கடலை, எண்ணெய் வித்துகள், கரும்பு போன்றவை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ளது.
- தோட்டப் பயிர் வாழை, தேங்காய் உற்பத்தியில் முதலிடத்திலும், இரப்பர் உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும்,
- மிளகு உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், கரும்பு உற்பத்தியில் நான்காவது இடத்திலும் உள்ளது.
- அனைத்து வகைப் பயிர்களுக்கான மொத்த உற்பத்திப் பரப்பு 2013-14ல் 97 இலட்சம் ஹெக்டேர்களாக உள்ளது.
- உணவு தானிய உற்பத்திப் பரப்பு 9% ஆகவும் பிற பயிர்களுக்கான உற்பத்திப் பரப்பு 27.1% ஆகவும் உள்ளது.
- உணவுப் பயிர்களில் நெல் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிற பயிர்களில் கடலை மற்றும் தேங்காய் முக்கியப்பங்கு வகிக்கிறது.
உணவு தானிய உற்பத்தி
- உணவு தானிய உற்பத்தியில் நெல் உற்பத்தி 49 இலட்சம் டன் (2014-15) உற்பத்தியோடு முதலிடம் பெற்றுள்ளது.
- சிறு தானியங்கள் 79 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
- பருப்பு உற்பத்தி 2011-12ல் 59 இலட்சம் டன்னிலிருந்து 2014-15ல் 7.67 இலட்சம் டன்னாக குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
- 2015-16ல் பருவ மழை பொய்த்ததால் உற்பத்தி சிறிதளவு குறைந்தது.
இந்திய அளவில் உற்பத்தித்திறனில் தமிழகத்தின் நிலை
- தமிழக அரசு வேளாண் விளை பொருள் உற்பத்திக்கும், உற்பத்தித் திறனுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.
- இதன் காரணமாக தமிழகம் உணவு தானியங்கள் மற்றும் பிற தானியங்களின் உற்பத்தித் திறனில் முதன்மை மாநிலமாக உள்ளது.
- மக்காச் சோளம், கம்பு, நிலக்கடலை, எண்ணெய் வித்துக்கள், பருத்தி ஆகியவற்றின் உற்பத்தியில் முதலிடத்திலும் நெய், தேங்காய் ஆகியவற்றில் இரண்டாவது இடத்திலும், கரும்பு, சூரியகாந்தி, சோளம் ஆகியவற்றில் மூன்றாவது இடத்திலும் மிளிர்கிறது.
தேசிய அளவில் தமிழ்நாட்டின் உற்பத்தித்திறன் நிலை
தானிய வகை | தேசிய அளவில் தமிழக நிலை |
மக்காச் சோளம் | 1 |
கம்பு | 1 |
கடலை | 1 |
எண்ணெய் வித்துக்கள் | 1 |
பருத்தி | 1 |
தேங்காய் | 2 |
நெல் | 2 |
கரும்பு (மெட்ரிக் டன்) | 3 |
சூரியகாந்தி | 3 |
சோளம் | 3 |
திடமான தானியங்கள் | 4 |
மொத்த தானியங்கள் | 8 |
(ஆதாரம்: தமிழக அரசின் வேளாண்மைத் துறை கொள்கை விளக்க குறிப்பு 2017- 18)