தமிழ்நதி

தமிழ்நதி
  • தமிழ்நதியின் இயற்பெயர் கலைவாணி.
  • அதன் பிறகும் எஞ்சும் என்னும் கவிதை தொகுப்பை படைத்தவர் தமிழ்நதி (கலைவாணி)
  • ஈழத்தின் திருகோணமலையில் பிறந்து தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வருகிறார் தமிழ்நதி (கலைவாணி).
  • புலம் பெயர்ந்து வாழும் இருப்புகளையும் வலிகளையும் காத்திரமான மொழியில் சொல்லியவர் தமிழ்நதி (கலைவாணி).
  • தமிழ்நதி (கலைவாணி) யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றார்.
தமிழ்நதி (கலைவாணி) எழுதியுள்ள படைப்புகள்
  • அதிசய மலர் (கவிதை)
  • நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது (சிறுகதை)
  • அதன் பிறகும் எஞ்சும் (கவிதை தொகுப்பு)
  • இரவுகளில் பொழியும் துயரப்பனி (கவிதை)
  • சூரியன் தனித்தலையும் பகல் (கவிதை)
  • கானல் வரி (குறுநாவல்)
  • ஈழம்: கைவிட்ட தேசம் (நாவல்)
  • பார்த்தீனியம் (நாவல்)
அதிசய மலர் – தமிழ்நதி
  • போர்களுக்கு எதிரான குரல்கள் வெளிப்படும் புதுக்கவிதை தமிழ்நதி எழுதிய அதிசய மலர்.
  • அதன் பிறகும் எஞ்சும் என்னும் கவிதைத் தொகுப்பில் தமிழ்நதி எழுதிய அதிசய மலர் இடம்பெற்றிருக்கிறது.
அதிசய மலர் கவிதையின் சாரம்
  • குண்டுமழை பொழிந்தது. நிலங்கள் அழிக்கப்பட்டன. மனிதர்கள் சிதறி ஓடினர். அழிக்கப்பட்ட தாய் மண்ணில் பூ ஒன்று மலர்கிறது. வண்டுகள் பூவைத் தேடி வருகின்றன. அந்தப் பூ நம்பிக்கைகளைத் தருகிறது.
  • நாளை அங்கே பெருங்காடு உருவாகலாம். பெருமழை பெய்யலாம். அந்தப் பூவின் புன்னகை, நாடு பற்றிய நம்பிக்கையைச் சிதறிய மனிதரிடையே பரப்புகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!