Contents show
வரிவடிவ வளர்ச்சி
- எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட எழுதப்படும் பொருள்களின் தன்மை, அழகுணர்ச்சி போன்றவை காரணங்களாக அமைகின்றன.
- பழங்காலத்தில் கற்பாறை. செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர். அந்தந்தப் பொருள்களின் தன்மைக்கு ஏற்ப எழுத்துகளின் வடிவங்கள் அமைந்தன.
- பாறைகளில் செதுக்கும் போது (வளைகோடுகளைப் பயன்படுத்த முடியாது என்பதால்) நேர்க்கோடுகள் பயன்படுத்தப்பட்டன.
- ஓலைகளில் (நேர்க்கோடுகளையும் புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால்) வளைகோடுகளை அதிகமாகப் பயன்படுத்தினர்.
- சில எழுத்துகளை அழகுபடுத்துவதற்காக அவற்றின் மேற்பகுதியில் குறுக்குக் கோடு இடப்பட்டது. பின்னர் அவையே நிலையான வடிவங்களாக அமைந்துவிட்டன.
புள்ளிகளும் எழுத்துகளும்
- எகர ஒகர் குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் தொல்காப்பியர் காலம் முதல் இருந்து வந்துள்ளது.
எ.கா
- எது என எழுதப்பட்டால் எது என்றும்
- எது என எழுதப்பட்டால் ஏது என்றும் ஒலித்தனர்
அகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்துப் பக்கப்புள்ளி இடப்பட்டால் அவை நெடிலாகக் கருதப்பட்டன.
எ.கா
- க – கா
- த – தா
எகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்து இரு புள்ளிகள் இடப்பட்டால் அவை ஔகார வரிசை எழுத்துகளாகக் கருதப்பட்டன.
எ.கா
- கெ – கௌ
- தெ – தெள
ஐகார எழுத்துகளைக் குறிப்பிட எழுத்துகளின் முன் இரட்டைப் புள்ளி இட்டனர்.
எ.கா
- க – கை
- குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளைக் குறிக்க அவற்றின் மேலேயும் புள்ளி இட்டனர்.
- மகர எழுத்தைக் குறிப்பிட, பகர எழுத்தின் உள்ளே புள்ளி (ப) இட்டனர்.
இக்கால எழுத்து உருவ மாற்றம்
- ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இணைக்கொம்பு (ம) பயன்படுத்தப்படுகிறது.
- ஔகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக கொம்புக்கால் பயன்படுத்தப்படுகிறது.
- குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளின் மேல் புள்ளி இடும் வழக்கம் வழக்கு ஒழிந்துவிட்டது.
- நெடிலைக் குறிக்க ஒற்றைப்புள்ளிக்குப் பதிலாக துணைக்கால் (or) பயன்படுத்தப்படுகிறது.
எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை
- ஓலைச் சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும் போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.
- ஓலைச் சுவடிகளில் நிறுத்தற் குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது.
- புள்ளி இடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா உயிர்மெய்யா. குறிலா நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது.
- இதனால் படிப்பவர்கள் பெரிதும் இடருற்றனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.
மிகப்பெரும் எழுத்துச் சீர்திருத்தம்
- தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் வீரமாமுனிவர்.
- எகர ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை வீரமாமுனிவர் களைந்தார்.
- எ என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு ஏ என்னும் எழுத்தை நெடிலாகவும் ஓ என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு ஓ என்னும் எழுத்தாகவும் வீரமாமுனிவர் உருவாக்கினார்.
- அதேபோல ஏகார ஓகார வரிசை உயிர்மெய் நெடில் எழுத்துகளைக் குறிக்க இரட்டைக் கொம்பு (மே). இரட்டைக் கொம்புடன் கால் சேர்த்து (மேலா) புதிய வரிவடிவத்தை வீரமாமுனிவர் அறிமுகப்படுத்தினார்.
பெரியார் எழுத்துச் சீர்திருத்தம்
- 20ம் நூற்றாண்டில் எழுத்துகளை அச்சுக் கோப்பதற்காக எழுத்துகளுக்குத் தனி அச்சுகள் உருவாக்கப்பட தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார்.
- தந்தை பெரியாரது எழுத்துச் சீர்திருத்தங்கள் சில ஏற்கப்பட்டுத் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.