தாவரத்தின் பகுதிகளை குறிக்கும் சொற்கள்

தாவரத்தின் பகுதிகளை குறிக்கும் சொற்கள்

பயிர் வகைச் சொற்கள்

தாவரத்தின் அடி வகை

  • கரும்பு – கழி
  • மூங்கில் – கழை
  • நெட்டி, மிளகாய் செடி – கோல்
  • புதர், குத்துச்செடி – தூறு
  • நெல், கேழ்வரகு – தாள்
  • கம்பு, சோளம் – தட்டு / தட்டை
  • கீரை,வாழை – தண்டு
  • புளி, வேம்பு – அடி

கிளை – தாவரங்களின் அடியிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவு

  • அடி மரம் பிரிவு (மாபெரும் கிளை) – கவை
  • கவையின் பிரிவு – கொம்பு / கொப்பு
  • 1q1q1111கொம்பின் பிரிவு – கிளை
  • கிளையின் பிரிவு – சினை
  • சினையின் பிரிவு – போத்து
  • போத்தின் பிரிவு – குச்சு / குச்சி
  • குச்சியின் பிரிவு – இணுக்கு

கிளையின் வரிசை

  • கவை – கொம்பு / கொப்பு – கிளை – சினை – போத்து – குச்சு – இணுக்கு

காய்ந்த அடியும் கிளையும்

  • காய்ந்த கழி – வெங்கழி
  • காய்ந்த கவையும் கொம்பும் அடியும் – கட்டை
  • காய்ந்த சிறு கிளை – விறகு
  • காய்ந்த குச்சு (குச்சி) – சுள்ளி

இலை வகை

  • காய்ந்த தோளும் தோகையும் – சண்டு
  • நெல்,புல் – தாள்
  • சோளம், கரும்பு – தோகை
  • புளி, வேம்பு – இலை
  • தென்னை, பனை – ஓலை
  • காய்ந்த இலை – சருகு

கொழுந்து (நுனிப்பகுதி) வகை

  • கரும்பு நுனி – கொழுந்தாடை
  • புளி, வேம்பு – முறி / கொழுந்து
  • நெல், புல் – துளிர் / தளிர்
  • சோளம், கரும்பு, தென்னை, பனை – குருத்து

பூ வகைகள்

  • பூவின் தோற்ற நிலை – அரும்பு
  • பூ விரியத் தொடங்கும் நிலை – போது
  • பூவின் மலர்ந்த நிலை – மலர்(அலர்)
  • பூ கீழே விழுந்த நிலை – வீ
  • பூவாடிய நிலை – செம்மல்

பூ வின் வரிசை

  • அரும்பு ~ போது ~ மலர்(அலர்) – வீ – செம்மல்

பிஞ்சு வகை

  • பலா பிஞ்சு – மூசு
  • இளம் பாக்கு – நுழாய்
  • இளம் நெல் – கருக்கல்
  • வாழை பிஞ்சு – கச்சல்
  • எள் பிஞ்சு – கவ்வை
  • தென்னை, பனை இளம் பிஞ்சு – குரும்பை
  • சிறு குரும்பை – முட்டுக் குரும்பை
  • மாங்காய் பிஞ்சு – வடு
  • பூவோடு கூடிய இளம் பிஞ்சு – பூம் பிஞ்சு
  • இளம் காய் – பிஞ்சு
  • முற்றாத தேங்காய் – இளநீர்

குலை வகை

  • நெல், தினை – அலகு / குரல்
  • அவரை, துவரை – கொத்து
  • கொடி முந்திரி – குலை
  • கேழ்வரகு, சோளம் – கதிர்
  • வாழைக் குலை – தாறு
  • வாழை தாறு பகுதி – சீப்பு

கெட்டுப்போன காய் கனி வகை

  • நுனியில் சுருங்கிய காய் – சூம்பல்
  • சுருங்கிய பழம் – சிவியல்
  • குளுகுளுத்த பழம் – அளியல்
  • குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய் – அழுகல்
  • பதராய்ப் போன மிளகாய் – சொண்டு
  • தென்னையில் கெட்ட காய் – ஒல்லிக்காய்
  • தேரை அமர்ந்ததினால் செட்ட தேங்காய் – அல்லிக்காய்
  • கோட்டான் உட்கார்ந்ததினால் கெட்ட காய் – கூகைக்காய் / கோட்டான் காய்
  • சூட்டினால் பழுத்த பிஞ்சு – வெம்பல்
  • தேரை அமர்ந்ததினால் கெட்ட காய் – தேரைக்காய்
  • புழு பூச்சி அரித்த காய் அல்லது கனி – சொத்தை.

பழத்தோல் வகை

  • மிக மெல்லியது – தொலி
  • திண்ணமானது – தோல்
  • வன்மையானது – தோடு
  • மிக வன்மையானது – ஒடு
  • வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி – கொம்மை
  • சுரையின் ஓடு – குடுக்கை
  • நெல்,கம்பு முதலியவற்றின் மூடி – உமி
  • தேங்காய் நெற்றின் மேற்பகுதி – மட்டை

மணி வகை

  • நெல், புல் (கம்பு) தானியங்கள் – கூலம்
  • புளி, காஞ்சிரை (நச்சு மரம்) வித்து – காழ்
  • வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து – முத்து
  • கத்தரி, மிளகாய் வித்து – விதை
  • உளுந்து, அவரை முதலியவை – பயறு
  • அவரை, துவரை முதலிய பயறுகள் – முதிரை
  • தென்னையின் வித்து – தேங்காய்
  • வேர்க்கடலை, கொண்டைக்கடலை – கடலை
  • மா, பனை முதலியவற்றின் வித்து – கொட்டை

இளம் பயிர் வகை

  • விளாவின் இளம் நிலை – குட்டி
  • நெல், கத்தரி இளம் நிலை – நாற்று
  • வாழையின் இளம் நிலை – குருத்து
  • பனையின் இளம் நிலை – மடலி / வடலி
  • நெல், சோளம் பசும் பயிர் – பைங்கூழ்
  • புளி, மா, வாழை இளம் நிலை – கன்று
  • தென்னையின் இளம் நிலை – பிள்ளை

சம்பா வகைகள் – (60)

  • சம்பாவில் உள் வகைகள் அறுபது (60) உள்ளளை, அவை
  • ஆனை கொம்பன் சம்பா
  • குண்டு சம்பா
  • ஆவிரம்பூ சம்பா
  • சிறு மணிச் சம்பா
  • சீரக சம்பா
  • குதிரை வாலி சம்பா

கோதுமை வகைகள்

  • சம்பா கோதுமை.
  • குண்டு கோதுமை.
  • வாற்கோதுமை

நெல் வகைகள்

  • செந்நெல், சம்பா
  • மட்டை
  • கார் நெல்
  • வெண் நெல்

குறிப்பு

  • வரகு, காடைக்கண்ணி, குதிரைவாலி முதலிய சிறுகூலங்கள் தென் தமிழ் நாட்டில் மட்டுமே விளைகின்றன. வேறு எங்கும் விளைவதில்லை.

நிலம் வகைகள்

  • சிவல்
  • சுவல்
  • கரிசல்
  • அவல்
  • தரிசு
  • முரம்பு
  • புறம்போக்கு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!