தூய்மை இந்தியா திட்டம்
- தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Abhiyan) 2014 அக்டோபர் 2 இல் தொடங்கப்பட்டது.
- இதன் நோக்கம் திறந்தவெளி மலங்கழிப்பை 2019 க்குள் ஒழித்துகட்டலே ஆகும்.
- இரண்டு துணைத் திட்டங்களை உடையது
- தூய்மை இந்தியா திட்டம் (கிராமம்) – குடிநீர் (ம) சுகாதார அமைச்சகம்
- தூய்மை இந்தியா திட்டம் (நகரம்) – நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பாடு
முக்கிய கூறுகள்
- வீடுகளில் கழிவறைகளைக் கட்டுவது
- சமூகம் / பொது கழிவறைகள்
- திடக் கழிவு மேலாண்மை
- தகவல், கல்வி மற்றும் தொலைத் தொடர்பு மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
- திறன் மேம்பாடு, நிர்வாகம் மற்றும் அலுவலக செலவுகள்
தூய்மை இந்தியா திட்டம் (நகரம்) – முக்கியக் குறிக்கோள்கள்:
- திறந்தவெளி மலம் கழிப்பதை ஒழித்தல்.
- சுகாதாரமற்ற கழிவறைகளை நவீன கழிவறைகளாக மாற்றுதல்
- துப்புரவு பணியாளர் முறையை ஒழித்தல்
- நகர்புற திடக்கழிவுகளை 100% திரட்டுதல், அறிவியல்/தொழில்நுட்ப முறைப்படுத்தல்,மறுப்பயன்பாடு, மறுசுழற்சி.
- ஆரோக்கியமான நடைமுறைகள் குறித்து மக்களுக்கு உணர்த்தி, நடைமுறை மாற்றம் கொண்டு வரல்.
- சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
- உள்ளாட்சி அமைப்புகளை சுயசார்போடு செயல்பட செய்தல்.
- மூலதன செலவு, பராமரிப்பு, செயல்பாட்டு செலவுகளில் தனியார்த் துறைப் பங்களிப்பை ஏற்படுத்தல்.
தூய்மை இந்தியா திட்டம் (கிராமம்) – முக்கியக் கூறுகள்:
- கிராமப்புற வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.
- தூய்மை, சுகாதாரம் ஊக்குவிப்பு, திறந்தவெளி மலம் கழித்தலை நீக்குதல்.
- ஏற்புடைய நீடித்த சுகாதார முறைகளை பின்பற்ற ஊக்குவித்தல்.
- சுகதாரக் கல்வியும், விழிப்புணர்வு ஏற்படுத்தலும்
- செலவை கட்டுப்படுத்தல் மற்றும் தகுந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தல்,
- சூழலுக்கு உகந்த பாதுகாப்பான சுகாதார முறைகள்
- துப்புரவு முறைக்கான சமூகப் பங்களிப்பை மேம்படுத்துதல்.
- அறிவியல்பூர்வமான திட, திரவக் கழிவுகள் மேலாண்மைத் திட்டத்தின் மூலமாக, கிராமத்தின் சுகாதாரத்தை மேம்படுத்துதல்.
- பாலியல் சார் நேர்மறை எண்ணங்கள் உருவாக்கம்
- சுகாதார மேம்பாடு துணையுடன் விளிப்பு நிலை மக்களை உள்ளடக்குதல்